Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
பருத்த உடம்பையும் ஊசிபோல் மெலியச் செய்யும் கருணைக்கிழங்கு... எப்படி சாப்பிடணும்?
கருணைக் கிழங்கு பற்றிய ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் அதைவைத்து எப்படி எடை குறைக்கலாம் என்பதையும் பற்றி விளக்கியுள்ளோம்.
கருணைக்கிழங்கை கொண்டு பைல்ஸ் மற்றும் உடல் எடையை குறைப்பது எப்படி?

கருணைக் கிழங்குக்கு அப்படி ஏன் பெயர் வந்தது தெரியுமா? ஏனென்றால் இது உடலுக்கு எந்த பிரச்சினையையும் தராது. இருக்கின்ற பிரச்சினைகளை சரி செய்யும். கருணைக் கிழங்கு உடலில் எந்த நோயையும் தங்க விடாது. அந்த கருணைக்கிழங்கு உடல் எடையை எப்படிக் குறைக்கிறது. இன்னும் என்னென்ன மாயங்களைச் செய்யும் என்பது பற்றி பார்ப்போம்.

பயன்கள்
கருணைக் கிழங்கு சாப்பிடுவதால் நமக்குப் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. நம்மை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
ஜீரண சக்தி
வெள்ளைப்படுதல்
ஆசனவாய் பிரச்சினைகள்
காய்ச்சல்
உடல் எடை குறைத்தல்
என பல வழிகளில் கருணைக்கிழங்கு நமக்குப் பயன்படுகிறது.

ஜீரண மண்டலம்
கருணைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஜீரண மண்டலத்தின் இயக்கம் சீராகும். சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமடையும். அது மட்டுமல்லாது, உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் அமையும்.

காய்ச்சல்
உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதற்கு கருணைக் கிழங்கு மிகவும் உதவி செய்கிறது. இது மூலத்தினால் உண்டாகும் சூடு, எரிச்சல் ஆகியவற்றைப் போக்கும். நாள்பட்ட காய்ச்சலைத் தீர்க்கும்.

வெள்ளைப்படுதல்
பெண்களுக்கு இருப்பதிலேயே பெரிய பிரச்சினை என்றால், அது மாதவிடாய் சம்பந்தப்பபட்ட பிரச்சினைகள் தான். ஏனெனில் அதை மையமாக வைத்துதான் மற்ற எல்லா பிரச்சினைகளும் அவர்களுக்கு உண்டாகின்றன. அந்த பிரச்சினைகளை எல்லாம் கருணைக்கிழங்கு சரிசெய்யும். குறிப்பாக, வெள்ளைப்படுதலைத் தடுப்பதில் கருணைக்கிழங்கு மிகத் தீவிரம் காட்டுகிறது.

ஆசன வாய் பிரச்சினை
மூல நோய் உள்ளவர்குள் உட்காருவதற்கு பெரும் துன்பப்படுவார்கள். அதிகப்படியான உடல் சூட்டின் காரணமாக இந்த பிரச்சினை உண்டாகிறது. அப்படி மூலம் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு தினமும் கருணைக்கிழங்கை மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும். சாப்பிட்டவுடன் தாகம் அதிகம் எடுக்கும். அந்த சமயங்களில் மோரைக் குடித்து வந்தால் மூலம் விரைவில் தீரும். ஆசன வாய் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளும் தீரும்.

கல்லீரல் பலப்படும்
கருணைக் கிழங்கை குறைந்தது வாரத்துக்கு இரண்டு முறையாவது உணவில் எடுத்துக் கொண்டீர்கள் என்றால், கல்லீரல் பலப்படும். புகைப்படித்தல், ஆல்கஹால் போன்றவற்றால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளைக் கூட சரிசெய்யும்.

உடல் பருமன்
உடல் பருமன் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இத்தகைய பிரச்சினைக்கு திகச் சிறந்த தீர்வுகளில் ஒன்றாக கருணைக்கிழங்கும் இருக்கும். அடிக்கடி உணவில் கருணைக்கிழங்கை சேர்த்துக் கொண்டீர்கள் என்றால், உடலில் கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து, உடல் பருமனைக் குறைக்கும். இந்த கருணைக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் சூரணத்தை தான் நாம் வன சூரணாதி என்னும் பெயரில் நாட்டு மருந்து கடைகளில் எடை குறைய வாங்கி சா்பிடுகிறோம்.



Click it and Unblock the Notifications
