சமையல் சோடாவை வைத்து 5 வழிகளில் உங்க தொப்பையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky
சமையல் சோடாவை வைத்து உங்க தொப்பையை குறைக்கலாம்! | Baking soda can help to lose your weight

உடல் எடையை குறைக்க நினைக்க ஆரம்பித்தவுடனேயே 30% உடற்பயிற்சி, 70% டயட் என்பதுதான் பொதுவான கான்சப்டாக பலரும் கடைபிடிக்கிறார்கள். நல்ல முறையான உணவுப்பழக்கம், பயிற்சி இருந்தாலே போதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திடலாம்.

ஆனால் ஒரு சிலருக்கு கொழுப்புகள் கரையாமல் அடம்பிடிக்கும். தொப்பை, கை, இடுப்பு போன்ற பகுதிகளில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைப்பதென்பது சாதாரணமில்லை. லேசில் குறையாத இந்த பகுதிகளில் இருக்கும் கொழுப்பை கரைக்க சமையல் சோடாவை பயன்படுத்தலாம்.

5ways baking soda can help to lose your weight , hip fat and arm

ஆரம்பத்தில் சமையல் சோடாவை நல்லதல்ல என பலரும் நினைந்த வேளையில் அதனை ஆராய்ச்சி செய்த போதுதான் அதன் நன்மைகள் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தது. நெஞ்செரிச்சல், அதிக அமிலத்தை சமன் செய்தல், வயிற்றுப் பிரச்சனைகளை குணப்படுத்துதல் , என இரைப்பை, மற்றும் அமிலங்கள் தொடர்பான நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுகிறது.

அப்படி நன்மைகளை தரும் சமையல் சோடா உடலில் இருக்கும் தொப்பை, இடுப்புக் கொழுப்பை கரைக்க எப்படி உதவுகிறது என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமையல் சோடா ட்ரிங்க் :

சமையல் சோடா ட்ரிங்க் :

தேவையானவை :

இள நீர்- 5 கப்

சமையல் சோடா - கால் கப்

எலுமிச்சை சாறு - அரை கப்

தேன் - கால் கப்.

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

இளநீரை குறைவான தீயிலில் சுட வைத்து அதில் சமையல் சோடாவை சேர்த்து கரையும் வரை அடுப்பில் வையுங்கள். பின்னர் அதனை இறக்கி மீதியிருக்கும் எல்லா பொருட்களையும் கலந்து குடிக்க வேண்டும்.

 சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு :

சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு :

சமையல் சோடா - அரை ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 எலுமிச்சை

நீர்- 1 கப்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

முழு எலுமிச்சையில் இருக்கும் சாற்றினை பிழிந்து அதில் சமையல் சோடா மற்றும் நீர் கலந்தால் லெமனெட் ரெடி. இதனை தினமும் காலையில் குடித்தால் உடல் எடை குறையும். நல்ல பலன் தெரிய ஆரம்பிக்கும்.

க்ரீன் டீயுடன் சமையல் சோடா :

க்ரீன் டீயுடன் சமையல் சோடா :

தேவையானவை :

க்ரீன் டீ - 1 ஸ்பூன்

நீர்- 1 கப்

சமையல் சோடா - கால் ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

நீரில் க்ரீன் டீத் தூள் 1 ஸ்பூன் கலந்து டிகாஷன் கொதிக்க விடுங்கள். பின்னர் அதனை வடிகட்டி அதில் சமையல் சோடாவை கலந்து அதனை குடிக்க வேண்டும். தேவையென்றால் சிறிது தேன் கலந்து குடியுங்கள்.

 சமையல் சோடா மற்றும் ஸ்ட்ரா பெர்ரி ஸ்மூத்தி :

சமையல் சோடா மற்றும் ஸ்ட்ரா பெர்ரி ஸ்மூத்தி :

தேவையானவை :

நீர்- 2 கப்

எலுமிச்சை - 2

புதினா இலைகள்

ஸ்ட்ரா பெர்ரி- 1 கப்

சமையல் சோடா- 1/2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

மிக்ஸி ஜாரில் இதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்ராக கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை வடிக்கட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும்.

சமையல் சோடா மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் :

சமையல் சோடா மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் :

தேவையானவை :

1 கப் நீர்

2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்

சமையல் சோடா - 1/2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் சமையல் சோடா அரை ஸ்பூன் கலந்து வைத்தால் ரெடி. இதனை காலை உணவிற்கு முன்னால் குடிக்க வேண்டும். தினமும் இப்படி குடிக்க வேண்டும்.

சமையல் சோடாவின் இதர நன்மைகள் :

சமையல் சோடாவின் இதர நன்மைகள் :

புற்று நோய் :

சமையல் சோடா புற்று நோயை தடுக்கிறது. உடலில் அமில-காரத்தன்மை மாறுபட்டால் செல்கள் சிதைவடைய ஆரம்பிக்கும். செல்கள் சிதைவடைந்தால் நாள்பட்டபின் புற்று நோயாக ஆரம்பிக்கும். சமையல் சோடா உடலில் அமிலத் தன்மை சமன் செய்வதால் செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறு நீரக செயல்கள் :

சிறு நீரக செயல்கள் :

சிறு நீரகங்கத்தின் செயல்களுக்கு நமது உடலில் உருவாகும் பஃபர் முக்கியம் (அமில-காரச் சமனிலை படுத்தும் காரணி).

சிறு நீரக கோளாறுகள் இருப்பவர்களுக்கு இந்த பஃபர் குறைவாகவே இருக்கும். சமையல் சோடா பஃபராக செயல்படுவதால் சிறு நீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்சர் வலி :

அல்சர் வலி :

அல்சர் வலியை குறைக்கிறது. வயிற்றுப் புண் இருக்கும்போது மேலும் சுரக்கும் அமிலத்தால் வலி தீவிரமாகும். இந்த பிரச்சனையை சமையல் சோடா போக்குகிறது.

தசை வலிமை :

தசை வலிமை :

உடற்ப்யிற்சி செய்பவர்களுக்கு உண்டாகும் பெருங்கவலை தசைகள் இறுகி உருவாகாமல் இருப்பதுதான். சமையல் சோடா லாக்டிக் அமிலத்தை அதிகம் உறிஞ்சுவதால் திடமான தசைகளை உருவாக்குகிறது. ஆகவே உடற்ப்யிற்சி செய்பவர்களுக்கு நல்ல பானம் இது.

ஆரோக்கியமான பற்கள் :

ஆரோக்கியமான பற்கள் :

மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்க ரசாயனங்களை தேடிப் போகாமல், சமையல் சோடாவை பயன்படுத்தினால் பற்கள் வெண்மையாகும். இவை பற்களில் தங்கும் கிருமிகளையும் அழிக்கிறது. சமையல் சோடா கலந்த நீரில் வாய்கொப்பளித்தால் துர் நாற்றம் நீங்கும்.

நெஞ்செரிச்சல் :

நெஞ்செரிச்சல் :

ஏற்கனவே சொன்னது போல் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, போன்ற்றவற்றை சமன் செய்கிறது. அரை ஸ்பூன் சமையல் சோடாவை ஒரு கப் நீரில் கலந்து குடியுங்கள். இது வேகமாக பலன் தரும்.

யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது ?

யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது ?

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் அதிகம் இருப்பவர்கள், இரைப்பை நோய்கள் இருப்பவர்கள் சமையல் சோடாவை பயன்படுத்தக் கூடாது. இது ரத்த அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்துவதால் இதனை தவிர்த்தல் நல்லது.

நீர்வீக்கம் :

நீர்வீக்கம் :

சிலருக்கு அதிகப்படியான திரவங்களின் தேக்கங்களால் உடலில் நீர் கோர்த்துக் கொண்டிருக்கும். அவர்கள் சமையல் சோடாவை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் இன்னும் அதிக உப்பை தேக்க வைத்து சிறு நீரக பாதிப்புகளை தரும்.

கர்ப்பிணி மற்றும் தாய்மார்கள் :

கர்ப்பிணி மற்றும் தாய்மார்கள் :

கர்ப்பமாக இருப்பவர்களும், தாய்ப்பால் கொடுப்பவர்களும் சமையல் சோடாவை பயன்படுத்துதல் தவிர்க்க வேண்டும். இவை ரத்தத்தில் சோடியம் அளவை அதிகரிக்கச் செய்வதால் , இவர்களும் தவிர்க்க வேண்டும்.

சப்ளிமென்ட்ரி :

சப்ளிமென்ட்ரி :

கால்சியம் மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின் போன்ற வலி மாத்திரைகளை உட்கொள்பவர்கள் சமையல் சோடாவை பயன்படுத்தக் கூடாது. இவை இந்த மாதிரியான மருந்துகளுடன் சேர்ந்து வினைபுரிவதால் தான் , சமையல் சோடாவை சாப்பிட அறிவுறுத்தபடுவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5ways baking soda can help to lose your weight , hip fat and arm

5ways baking soda can help to lose your weight , hip fat and arm
Subscribe Newsletter