Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தால், ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்...!
தொப்பையை குறைக்க பலவித வழிமுறைகளை செய்து பார்த்து சோர்ந்து விட்டீர்களா..? எந்த முறையும் உங்களுக்கு பலன் தரவில்லையா..? இனி இந்த கவலைக்கெல்லாம் தீர்வு தர மிக எளிமையான வழி உள்ளது. உங்கள் தொப்பை பிரச்சினைக்கு இந்த 4 பொருட்கள் மட்டுமே..!

அதுவும் இந்த 4 பொருட்களும் நம் வீட்டிலே இருக்க கூடியவை. வெறும் 4 பொருட்களை வைத்து எப்படி தொப்பையை குறைப்பது என்ற சந்தேகத்தை தீர்க்கவே இந்த பதிவு. வாங்க, தொப்பையை எப்படி ஈஸியா குறைக்கலாம்னு தெரிஞ்சிப்போம்.

நீங்கள் படும் பெரும்பாடு..!
உடல் எடை கூடி விட்டால் இலவசமாக பல வித பரிசுகள் நமக்கு கிடைத்து விடும். நாம் விரும்பா விட்டாலும் இந்த பரிசுகளை வாங்கி தான் ஆக வேண்டும். அவற்றில் மிக முக்கியமானவை: தொப்பை, கொலஸ்ட்ரால், இதய நோய்கள், சோம்பேறி தனம் போன்றவைதான். இதனால் இன்று பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எதனால் தொப்பை..?
பொதுவாக உடல் பருமன் கூடினால் தொப்பை ஏற்படும். ஆனால், சிலருக்கு உடல் பருமன் கூடாமலே தொப்பை போடவுவதும் உண்டு. மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தொப்பை போட வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் அதிக கொழுப்பு கொண்ட உணவுகள் சாப்பிடுவதாலும், சரியான உடற்பயிற்சி இன்மையாலும், ஒரே இடத்தில் மணி கணக்கில் உட்கார்ந்திருப்பதாலும் இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது.

அன்னாச்சி
பல வகையான வைட்டமின்களை கொண்ட இந்த அன்னாசி தான் உங்களின் தொப்பையை குறைக்க கூடிய முதல் பொருள். இதில் வைட்டமின் எ, சி, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், நீர்சத்து, கால்சியம் போன்றவை உடலுக்கு அதிக நலனை தர கூடியவை. நாம் தயாரிக்க போகும் இந்த தொப்பை குறைப்பு பானத்தில் இதையும் சேர்க்க வேண்டும்.

செலெரி
மிக குறைந்த அளவிலான கலோரிகள் இந்த செலரியில் உள்ளதாம். இதனால் தான் தொப்பையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இது இருக்கிறது. இதனை சாப்பிடுவதால் எளிதில் உங்கள் பசியை தீர்த்து, மேலும் அதிகமாக சாப்பிட வேண்டும் எண்ணத்தை போக்கி விடுமாம்.

வெள்ளரிக்காய்
"வெயில் கால நண்பன்" என்றே அழைக்கப்படும் இந்த பழம் எளிதில் தொப்பையை குறைக்க பயன்படுகிறதாம். இந்த பழத்தில் பல வகையான ஊட்டச்சத்துக்களும் தாது பொருட்களும் நிறைந்துள்ளதாம். இவற்றில் உள்ள நார்ச்சத்தும், குறைந்தஹ் அளவிலான கலோரிகளும் தான் உங்களுக்கு அதிக பலனை தரும்.

பார்ஸ்லி
பார்ப்பதற்கு கொத்தமல்லியை போன்றே இருக்கும், பார்ஸ்லியில் வெள்ளரிக்காயை போன்றே அதிக நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் உள்ளது. இவற்றை நீங்கள் தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் பலவித பயன்கள் கிடைக்கும்.

எவ்வளவு அளவு..?
உங்களின் தொப்பையை குறைப்பதில் மேற்சொன்ன நான்கு பொருட்களும் அதிகம் தேவைப்படுகிறது. இதனை இந்த அளவுகளில் முதலில் எடுத்து கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காய் 1 (நடுத்தரமான அளவு)
செலரி 1 தண்டு
அன்னாச்சி துண்டாக அரிந்த 3 பீஸ்
பார்ஸ்லி 1 கப்

தயாரிக்கும் முறை...
மேற்சொன்ன 4 பொருட்களையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இதனை வடிகட்டாமலும், சர்க்கரை, உப்பு, மிளகு, தேன் என எதையும் சேர்க்காமலும் அப்படியே சாப்பிட வேண்டும். இந்த ஜுஸ் தயாரித்த 15 நிமிடத்திற்குள் குடித்து விட வேண்டும். இல்லையேல் இதில் உள்ள சத்துக்களின் தன்மை குறைய தொடங்கி விடும்.

எப்போது அருந்தலாம்..?
இந்த ஜுஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மட்டுமே இதன் பலன் கிடைக்கும். இந்த ஜுஸை குடிக்க தொடங்கிய 1 வாரத்திற்குள் உங்களின் தொப்பை குறைவதை நீங்களே அறிவீர்கள். இந்த ஜீஸின் மேற்சொன்ன சத்துக்களும், தாதுக்களும் தான் உங்களின் தொப்பை குறைவதற்கு மிக முக்கிய காரணிகளாம்.



Click it and Unblock the Notifications