உடல் எடையை குறைக்க நினைக்கறீங்களா? நீங்க செய்ற முதல் தவறு என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை எல்லாருக்குமே பெரிய பிரச்சனையாகத்தான் இருக்கிறது. குறிப்பாக 30 வயதை கடந்தவர்களுக்கு வரும் முதல் பிரச்சனையே உடல் எடை கூடுவதுதான். என்னென்னவோ டயட் பின்பற்றுகிறேன். உடற்பயிற்சி செய்கிறேன். ஆனாலும் உடல் எடை குறையவே மாட்டீங்குது என பலரும் புலம்புகிறார்கள்.

அதற்கு காரணம் அவர்களின் இந்த டயட் அல்லது பயிற்சி விஷயங்களில் செய்யும் ஏதாவது ஒரு தவறாக இருக்கலாம். உடல் எடை குறைப்பதற்கு கடின உழைப்பை விட ஸ்மார்ட்னஸ் மிக முக்கியம்.

Weight loss mistakes that you dont want to make

ஆரோக்கியமான டயட் உங்கள் எடையை சரியாக வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தொடர்ந்து முயற்சிக்காமல் சில வாரங்களிலேயே பலனளிக்க வேண்டும் என்று நினைத்து செய்து அதன் பின் அது சரியா வரவில்லையென்று அடுத்து வேறு ஏதாவது செய்வது என எதையும் நிரந்தரமாக முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறோம். அப்படி நாம் செய்யும் சில தவறுகள் உடல் எடையை குறைக்க விடாமல் செய்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைவான கலோரி உணவுகளை சாப்பிடுவது :

குறைவான கலோரி உணவுகளை சாப்பிடுவது :

நிறைய பேர் செய்யும் தவறு இதுதான். குறைவான கலோரி என்றால் உடல் எடை ஏறாது என மார்கெட்டில் வரும் புதிது புதிதான கலோரி குறைவான உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.

ஆனால் அப்படி சாப்பிடும்போது உண்மையில் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். உடலுக்கு தேவையான கலோரி கிடைத்தே ஆகவே வேண்டும். அதிகமான கலோரி உணவுகளை சாப்பிடுவதற்கும், தேவையான கலோரி உணவுகள் சாப்பிடுவதற்கும் முதலில் வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தேவையான கலோரி உணவுகளை சாப்பிடலாம்.

எந்த மாதிரியான ஜூஸ் வகைகள் தேர்ந்தெடுக்கிறீர்கள் ?

எந்த மாதிரியான ஜூஸ் வகைகள் தேர்ந்தெடுக்கிறீர்கள் ?

ஜூஸ் வகைகளை குடிப்பதென்றால் காய்கறி, பழங்களின் ஸ்மூத்தி போன்றவற்றை தாராளமாக குடிக்கலாம். ஆனால் அவற்றில் க்ரீம், அல்லது பால் வகைகளை சேர்க்கக் கூடாது. யோகார்டும் சேர்க்கக் கூடாது. இவைகளில் அதிக இனிப்பு மற்றும் கொழுப்பு இருப்பதால் காய் மற்றும் பழங்களின் சத்துக்கள் சேர முடியாமல் போய் விடும்.

குறைந்த உணவு அல்லது உணவே சாப்பிடாதது :

குறைந்த உணவு அல்லது உணவே சாப்பிடாதது :

மிகக் குறைந்த அளவே உணவை சாப்பிட்டாலும் அல்லது ஏதாவது ஒரு உணவு உண்பதை தினமும் தவறவிட்டாலும் அவை எதிர்மறை விளைவுகளையே தரும். ஏதாவது ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் உணவை தவற விடும்போது உடல் எடை கூட ஆரம்பிக்கும். குறிப்பக காலை உணவை என்றும் ஸ்கிப் செய்யக் கூடாது.

மிராக்கிள் டயட்டை பின்பற்றுவது :

மிராக்கிள் டயட்டை பின்பற்றுவது :

ஒரே மாதத்தில் அல்லது ஒரு சில வாரங்களில் உடல் எடை குறைக்கும் டயட் என பேலியோ, வேகன் டயட் என பலவகை டயட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளால் சிலருக்கு உடல் மெக்கானிசம் பாதிக்கப்படுவதுண்டு. எடையை குறைத்த பின் டயட்டை விட்டாலும் மீண்டும் உடல் எடை கூடும். ஆகவே சாதரண அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே உங்கள் உடல் எடையை சர்வ நிச்சயமாக குறைக்க முடியும்.

உணவில் இருக்க வேண்டிய சத்துக்கள் :

உணவில் இருக்க வேண்டிய சத்துக்கள் :

நீங்கள் சாப்பிடும் உணவுகளின் கீழ்கண்ட சத்துக்களை அன்றாடம் இருக்கிறதா என பார்த்துக் கொண்டாலே போதும். உங்கள் உடல் எடை கட்டுக்குள் வரும்.

உயர்ந்த ரக புரத உணவுகள் - மீன், முளைகட்டிய தானியங்கள், பருப்பு வகைகள்.

ஒமேகா 3 உணவுகள் - சூரிய காந்தி எண்ணெய், மீன்,

ஆன்டி ஆக்சிடென்ட் உணவுகள் - காலிஃப்ளவர், காளான், செர்ரி , திராட்சை, ஆப்பிள்,

நார்சத்து உணவுகள் _ பீன்ஸ், அனைத்து வகை காய்கறிகள்

விட்டமின் மற்றும் மினரல் - அனைத்து வகைப் பழங்கள்,

சைட் டிஷ் :

சைட் டிஷ் :

நல்ல உணவுகளை சபபிடும்போது சைட் டிஷாக தொட்டுக்கொள்ள மசாலா, கொழுப்பு நிறைந்த சைட் டிஷ் சாப்பிடும் தவரை நிறைய பேஎ செய்வார்கள். உதாரணத்திற்கு சப்பாத்திற்கு கொழுப்பு நிறைந்த கறி அல்லது குருமா என சாப்பிடும்போது கண்டிப்பாக அவை உங்கள் எடையை எப்படியும் குறைக்கச் செய்யாது. ஆகவே தொட்டுக் கொள்ள சாப்பிடும் உணவிலும் கவனமாக இருங்கள்.

எடை குறைந்த பின் டயட் மாற்றுவது :

எடை குறைந்த பின் டயட் மாற்றுவது :

நிறைய பேர் செய்யும் மிகபபெரிய தவறு இதுதான். உடல் எடையை குறைக்க வேண்டுமென தடாலென உணவுகளில் பத்தியம் இருந்த பின், எடை குறைந்த பின் மீண்டும் வேண்டியதை சாப்பிடுவது. இந்த தவறு உங்கள் எடையை குறைக்க விடாது. நிரந்தரமாக எப்போதும் ஒன்று போல் சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடல் எடை குறைக்க முடியும்.

விதவிதமான ஆரோக்கிய உணவுகளை ட்ரை செய்வது :

விதவிதமான ஆரோக்கிய உணவுகளை ட்ரை செய்வது :

நிறைய ஆராய்ச்சிகளில் சொல்லப்பட்டது என்னவென்றால் ஹெல்தியாக அதே சமயம் விதவிதமாக சாப்பிடுபவரகளுக்கு உடல் எடை கூடத்தான். செய்யும். தினமும் ஒரு ஹெல்தி வெரைட்டி என்பதை நிறுத்துங்கள்.

சிம்பிளான ரொட்டின் உணவுகள் உங்களை நீண்ட ஆயுளுடனும், ஸ்லிம்மாகவும் வைக்க உதவுமாம். ஆகவே திங்கள் முதல் ஞாயிறு வரை சாப்பிட வேண்டிய உணவுகளை டைம் டேபிள் போட்டு தயார் செய்து கொள்ளுங்கள். அதனையே எப்போதும் பின்பற்றுங்கள். மாதம் ஒரு நாள் ஹோட்டல் என எஞ்சாய் செய்யலாம். தவறில்லை.

 உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் :

உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் :

சேனைக் கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு :

இந்த இரண்டும் மெதுவாக சீரணிக்கப்படுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் வளர்சிதை மாற்றம் மிகச் சரியாக நடக்க இந்த உணவுகள் உதவுவதால் உடல்எடை குறையும்.கொழுப்பு சேமிப்பாகாமல் தடுக்கும்.சேனைக்கிழங்கு ஆண்டு முழுவதும் கிடைக்கும். வள்ளிக்கிழங்கை சீசனில் பயன்படுத்தலாம்.

தானிய வகைகள் :

தானிய வகைகள் :

கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு சம்பா கோதுமை, ரவை போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றை பாசிப்பருப்பு, தேங்காய்ச் சட்னி போன்றவற்றின் மூலம் புரதமும் கிடைக்கும்படி சாப்பிடலாம். எப்போதும் பருப்பு வகைகள் சேர்ந்தே மேற்கண்ட தானிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதனால் சாப்பிடும் அளவும் குறையும்.

பாதாம்:

பாதாம்:

ஒமேகா 3 என்ற நன்மை செய்யும் கொழுப்பு அமிலம், புரதம், கார்போஹைடிரேட் போல அவசியம் தேவை. எனவே, தினமும் நல்ல கொழுப்பு அமிலம் கிடைக்க தினமும் 4 பாதாம் பருப்புகளைச் சாப்பிட்டு வாருங்கள். பருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம்.

கீரை சேலட் :

கீரை சேலட் :

சாலட்டுகளில் முக்கியமாக ஏதாவது ஒரு கீரையை சேர்க்கவும். .அதன் மேல் தயிரை லேசாக ஊற்றி மூடவும். அதன் மேல் உங்களுக்குப் பிடித்தமான காய்கறித் துண்டுகளைப் போடவும். அவித்த மொச்சையையும் இதனுடன் நான்கு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். இதனை வாரம் இரு நாட்கள் அல்லது 3 நாட்கள் சாப்பிடுங்கள். உடல் எடை மெலியும்.

 கொள்ளு :

கொள்ளு :

தினமும் கொள்ளை கட்டாயம் சேர்த்தால் ஒரே மாதத்தில் உடல் எடை குறைவதில் நல்ல மாற்றங்கள் காண்பீர்கள். கொழுப்பை குறைத்து உடல் உறுதியை பெறுவீர்கள். கொள்ளு சட்னி கொள்ளு ரசம், துவையல், முளைக்கட்டிய கொள்ளு என தினமும் ஒன்றாக சாப்பிட்டுப் பாருங்கள்.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பு

கொள்ளைப் போலவே பாசிப்பயிறும் கொழுப்பை கரைக்கும்,. குறிப்பாக வயிற்றுக் கொழுப்பை குறைக்கிறது. ஆகவே பாசிப்பயிறை அன்றாடம் உனவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி பூண்டு விழுது :

இஞ்சி பூண்டு விழுது :

தினமும் இஞ்சிப் பூண்டு விழுதை உணவிற்கு பயன்படுத்துங்கள். கடைகளில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே தயாரித்து எல்லா வகை குழம்பு, துவையலுக்கு சேர்த்திடுங்கள்.

கத்திரிக்காய் :

கத்திரிக்காய் :

கலோரிகளே இல்லாத உணவு வகைகளில் கத்தரிக்காயையும் சேர்க்கலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள கத்திரிக்காயை உணவாக உட்கொண்டால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு குறைக்கப்படும்.

தேன் :

தேன் :

தினமும் காலையிலும் இரவிலும் வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகினால் தேவையற்ற உடல் கொழுப்பைக் கரைப்பதுடன் மீண்டும் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்கள் :

உடலில் படிந்து உள்ள கொழுப்புகளைக் கரைத்து ஆற்றலாக மாற்றும் கார்னிடைன் என்னும் பொருளை வைட்டமின் சி சுரக்கச் செய்கிறது. . சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் நிறைந்து இருக்கிறது. எனவே சிட்ரஸ் பழங்களை உண்பதால் கார்னிடைன் என்னும் பொருள் உருவாகி உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை எரிக்க உதவுகிறது.

பேரிக்காய் :

பேரிக்காய் :

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதனில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. எனவே இப்பழம் கிடைக்கும் காலங்களில் தவறாமல் வாங்கி உண்டு வர வேண்டும். அதுவும் உணவிற்கு முன் சாப்பிட்டால் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்குவதைத் தவிர்த்து உடல் எடையிலும் மாற்றத்தை உண்டாக்குகிறது.

அன்னாசிப் பழம் :

அன்னாசிப் பழம் :

இப்பழத்தில் நார்ச்சத்து மிகுதியாகவும், கொழுப்புச்சத்து குறைந்த அளவிலும் காணப் படுகிறது. எனவே தொப்பை குறைப்பதில் அன்னாசிப் பழம் பெரும் பங்கு வகிக்கின்றது. அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ் மற்றும் தனிமங்கள் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளது.இவை வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துவதால் உடல் எடை கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight loss mistakes that you dont want to make

Weight loss mistakes that you dont want to make
Story first published: Friday, December 22, 2017, 11:58 [IST]