For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓவர் நைட்டில் இன்டர்நெட்டில் வைரலான 7 வயது '8 பேக்' சீன சிறுவன்!

உடற்பயிற்சி என்ன அந்த அளவிற்கு கடினமானதா என கேட்பவர்களுக்கு. முயற்சி மட்டும் இருந்தால் போதும் என 7 வயதில், 8 பேக் கட்டுடல் வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக திகழ்கிறான்

|

உடற்பயிற்சி என்பதும் ஒரு யோகா போல தான். சீரான முயற்சி, பொறுமை, பக்குவம் இல்லை என்றால் அதன் பலனை முழுவதுமாக அடைய முடியாது.

வாரணம் ஆயிரம் படத்தை கண்ட பிறகு ஒரு பெரும் இளைஞர் கூட்டம் முட்டை ட்ரே வாங்கி வைத்துக் கொண்டு ஜிம்மிற்கும், இன்னொரு கூட்டம் கிட்டார் வாங்கிக் கொண்டு மியூசிக் வகுப்பிற்கும் சென்றதை நாம் மறந்துவிட முடியாது.

This Seven YO Chinese Boy Become Internet Sensational in Overnight!

Image Courtesy: People's Daily China

ஆனால், அவர்களில் எத்தனை பேர் முழுதாக சென்றார்கள் என நமக்கு தெரியாது. ஏன், நமது நண்பர்கள் வட்டாரத்திலேயே பலர் ஜிம் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் முழுக்குப் போட்டவர்களை நாம் கண்டிருப்போம்.

உடற்பயிற்சி என்ன அந்த அளவிற்கு கடினமானதா என கேட்பவர்களுக்கு. முயற்சி மட்டும் இருந்தால் போதும் என 7 வயதில், 8 பேக் கட்டுடல் வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக திகழ்கிறான் இந்த குட்டி ப்ரூஸ் லீ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சென் யி!

சென் யி எனும் இந்த சிறுவனின் வயது 7 தான். இந்த சிறு வயதில் இந்த சிறுவன் 8 பேக் கட்டுடல் வைத்து அசத்துகிறான். ஒரே இரவில் இந்த சிறுவன் இன்டர்நெட்டின் சென்சேஷனல் ஆகிவிட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முகநூல் பதிவு!

சீனாவின் பீப்பிள் டெயிலி எனும் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இந்த சிறுவனை பற்றிய ஒரு பதிவு வெளியானது. கிழக்கு சீனாவை சேர்ந்த ஹாங்ழோ (Hangzhou) எனும் இடத்தில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்ட சென் யி தங்கம் மற்றும் வெள்ளை பதக்கங்கள் வென்ற செய்தி பகிரப்பட்டிருன்தது.

5 வயதில் இருந்தே!

ஐந்து வயதில் கிண்டர்கார்டன் சென்ற வயதில் இருந்தே சென் யி ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது பெரும்பாலான நேரத்தை ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளிலேயே செலவிட்டுள்ளார். அதன் பலன் தான் சென் யி வென்ற தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்.

கட்டுடல்!

இந்த சிறு வயதிலேயே கடினமாக ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளில் ஈடுபட்டதால் தான் சென் யி அனைவரும் வியக்கும்படி 7 வயதில் 8 பேக் கட்டுடல் பெற்று ஃபிட்டாக இருக்கிறார் என இவரது பயிற்சியாளர் கூறுகிறார். சிறந்த உடற்கட்டு, ஃப்ளக்ஸிபிலிட்டி , ஒருங்கிணைப்புடன் பயிற்சிகளில் ஈடுபடுகிறார் சென் யி.

அம்மா!

அம்மா!

சென் யி-யின் அம்மா ஷாங் ஹாங்யு பீப்பிள் டெயிலி-க்கு அளித்த பேட்டியில், சென் பிறக்கும் ப போதே நான்கு கிலோ இருந்தார். 11 மாதத்திலேயே நடக்க துவங்கிவிட்டார். ஒரு கையில் பால் பாட்டில் வைத்துக் கொண்டு புல் அப்ஸ் எடுக்கும் திறன் கொண்டவர், சென் ஒரு சூப்பர் மனிதர் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

All Image Courtesy: People's Daily China

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Seven YO Chinese Boy Become Internet Sensational in Overnight!

This Seven YO Chinese Boy Become Internet Sensational in Overnight!
Desktop Bottom Promotion