48 மணிநேரத்தில் 3 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப இந்த வழிய ஃபாலோ பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுவதால், ஒருவர் தங்களது உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல், உடல் பருமனால் அவஸ்தைப்படுகின்றனர். உடல் பருமனானது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

They Call It “Killer of Excess of Weight” and It Will Help You Lose 3 Kg In Only 48 Hours!

எனவே இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட, பலரும் அன்றாடம் உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். வெறும் உடற்பயிற்சியும், டயட்டும் அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு இவைகளே நல்ல மாற்றத்தைக் காட்டினாலும், இன்னும் சிலருக்கு கொழுப்புக்களைக் கரைக்க மெட்டபாலிசத்தைத் தூண்டும் சில பானங்கள் அவசியமாக உள்ளது.

இதுவரை நாம் உடல் எடையைக் குறைக்க உதவும் எத்தனையோ பானங்களைப் பார்த்திருப்போம். ஆனால் இப்போது பார்க்கப் போகும் பானமோ, உடல் எடையைக் குறைக்க மட்டுமின்றி, இதர உடல்நல பிரச்சனைகளைப் போக்கவும் உதவும். சரி, இப்போது அந்த பானம் என்னவென்று பார்ப்போமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

இந்த பானத்தின் முக்கிய மூலப் பொருளே தக்காளி தான். தக்காளியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலின் வெப்பநிலையை மேம்படுத்தி, கொழுப்புக்களைக் கரைக்கும் பணியை வேகமாக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 500 மிலி

பூண்டு பற்கள் - 4

தக்காளி - 4-5

எலுமிச்சை சாறு - 6 டேபிள் ஸ்பூன்

ஐஸ் கட்டிகள் - 6

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பானம் தயார்!

குடிக்கும் நேரம்

குடிக்கும் நேரம்

இந்த பானத்தைக் காலை உணவு உட்கொண்ட 1 மணிநேரம் கழித்து குடிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படும். மேலும் இந்த பானத்தை பகல் நேரத்திலும் பருகலாம்.

குறிப்பு

குறிப்பு

இந்த பானத்தைக் குடிக்கும் போது, சிறிய அளவில் தானியங்கள், காய்கறிகள் மற்றும் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீ போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இதனால் இன்னும் சிறப்பான பலனைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

They Call It “Killer of Excess of Weight” and It Will Help You Lose 3 Kg In Only 48 Hours!

This excellent recipe that we’re going to show you will help you lose 6 pounds in only 48 hours! Read on to know more...
Story first published: Monday, February 6, 2017, 10:00 [IST]
Subscribe Newsletter