புரோட்டின் உணவுகளை கொண்டு உடல் எடையை எப்படி குறைக்கலாம்?

By: Lakshmi
Subscribe to Boldsky

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவரா? எப்படி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது? உடலுக்கு போதுமான அளவு சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள், உடல் எடையை குறைப்பது எளிதானதாகும்.

How to reduce the weight using Protein rich foods?

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அதிக அளவு புரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது சிறந்தது. குறைந்த அளவு கொழுப்பு கொண்ட புரோட்டின் உணவுகளை உண்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழியாகும்.

உடல் எடையை குறைக்க புரோட்டின் உணவுகள் எப்படி உதவுகிறது என இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 என்சைம்களை கட்டுப்படுத்துகிறது :

என்சைம்களை கட்டுப்படுத்துகிறது :

அதிக புரத சத்து உணவுகளை உட்கொள்ளும் போது பசியின்மை குறைக்கப்படுகிறது. பசியை தூண்டும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மற்றும் பல தேவையான ஹார்மோன்களை தூண்டுகிறது.

எனவே நீங்கள் தானாகவே குறைந்த கலோரிகளை உட்க்கொள்ள முடிகிறது. பசி ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது புரோட்டீன் குறைகிறது.

 பசி மற்றும் இரவு உணவை குறைக்கிறது

பசி மற்றும் இரவு உணவை குறைக்கிறது

புரோட்டின் மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு நேர உணவை குறைவாக எடுத்துக்கொள்ள உதவுகிறது. அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற உணர்வை குறைப்பதால், உடல் எடை குறைய வழி வகுக்கிறது.

கலோரி கட்டுப்பாடு இல்லாமல் எடை இழக்கலாம்:

கலோரி கட்டுப்பாடு இல்லாமல் எடை இழக்கலாம்:

புரோட்டின் குறைவான கலோரி அளவுகளை எடுத்துக்கொள்ளவும், அதிகமான கலோரிகளை வெளியிடவும் பயன்படுகிறது. உயர் புரத உணவுகள் எடை இழப்புக்கு வழிவகுக்கின்றன. வேண்டுமென்றே கலோரிகளை கட்டுப்படுத்தாமல், கொழுப்புகள், கார்ப்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தி எடை இழப்பிற்கு காரணமாகின்றன.

செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது :

செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது :

உணவு சாப்பிட்ட பிறகு, உணவை செரிப்பதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் சில கலோரிகள் பயன்படுத்தப்படுகின்றன. புரதத்தின் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் போது சுமார் 20-30% புரத கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

தூங்கும் போதும் புரோட்டின் கலோரிகளை எரிக்கிறது.

தூங்கும் போதும் புரோட்டின் கலோரிகளை எரிக்கிறது.

உயர் தெர்மிக் விளைவு மற்றும் பல காரணிகள் காரணமாக, அதிக புரதம் உட்க்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எனவே தூக்கத்தின் போதும் கூட அதிக கலோரிகளை எரிக்க முடியும். அதிக புரத உட்கொள்ளல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நாளொன்றுக்கு 80 முதல் 100 வரை கலோரிகளை எரிக்கவும் முடியும்.

பசியின்மையை குறைக்கிறது:

பசியின்மையை குறைக்கிறது:

புரதம் பசியின்மையை குறைக்கிறது. புரத உட்கொள்ளலை அதிகரிக்கும்போது, குறைவான கலோரிகளை சாப்பிட முடிகிறது. உயர் புரத உணவுகள் மிகவும் உறிஞ்சப்படுவதால், அவை குறைவான புரத உணவோடு ஒப்பிடும்போது பசியை குறைக்கின்றன.

அதிக புரத உணவின் மூலம் கலோரிகளை கட்டுப்படுத்துவது மிகவும் எளிது, இது மிகவும் எடை இழக்க காரணமாக உள்ளது.

 வளர்சிதை மாற்றம் மற்றும் தசை இழப்பை குறைக்கிறது

வளர்சிதை மாற்றம் மற்றும் தசை இழப்பை குறைக்கிறது

உயர் புரத உணவையும் உடல் பருமனைத் தடுக்கவும் முடியும். ஆனால் இது ஒரு தற்காலிக மாற்றமாக இல்லாமல் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்.

குறிப்பு :

குறிப்பு :

அனைத்து வகை சிறுநீரக நோயாளிகளும் தங்களது புரதம் தேவைகள் குறித்து மருத்துவரிடம் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to reduce the weight using Protein rich foods?

How to reduce the weight using Protein rich foods?
Subscribe Newsletter