For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தினமும் 4 பேரிட்சம் பழம்- உங்க தொப்பையை வேகமா கரைக்கும் !! எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா?

  By Hemalatha
  |

  பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது.

  பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள். அதுபோல் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம்.

  பேரிச்சைம் பழம் எப்படி உங்கள் உடல் எடை குறைக்க உதவும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம். அதற்கு முன் பேரிச்சையைப் பற்றிம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் காணலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பேரிச்சைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது :

  பேரிச்சைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது :

  பேரிச்சை ஆசியா, இந்தியா, அரேபிய நாடுகள், பங்களாதேஷ், பாகிஸ்தான், மத்திய கிழக்கு பகுதியில் விளைகிறது. இதில் முக்கியமாக ஃப்ரக்டோஸ், குளுகோஸ், சுக்ரோஸ், ஆகியவை கள் இருக்கின்றன. அதன் சத்துக்கள் தெரிந்தால் உண்மையில் ஆச்சரியப்படுவீர்கள்.

  அதிலுள்ள சத்துக்கள் :

  அதிலுள்ள சத்துக்கள் :

  பேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் 44 %, நார்ச்சத்து 11.5%, புரதம் 5.6 %, கொழுப்பு 0.5 %, அது தவிர கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், உப்பு, விட்டமின், ஏ, பி1, ப்12, சி, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் இருக்கின்றன.

  இதிலிந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இத்தனை சத்துக்கள் கொண்ட பேரிச்சைப் பழம் சுவை மிகுந்தது மட்டுமல்ல. மிகவும் சத்துக்கள் நிறைந்தது. அதற்காக அளவு மீறி சாப்பிட வேண்டாம். உங்கள் பற்கள் பத்திரம். அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக வாய் கொப்பளித்து விடுங்கள்.

  4 பேரிட்சை எப்படி உடல் குறைக்கும்?

  4 பேரிட்சை எப்படி உடல் குறைக்கும்?

  பேரிச்சையை சாப்பிடுவதால் உடல் எடை குறைக்கலாம் தெரியுமா? வெளி நாடுகளில் பேரிச்சை டயட் என்றே பெயரிட்டு அதனைபின்பற்றி உடல் எடையை குறைக்கிறார்கள். உங்கள் உடல் எடையை குறைக்கும்படி மிக எளிதான டயட் ஒன்று உள்ளது. தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும். அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்.

  Image source

  தேவையானவை :

  தேவையானவை :

  பேரிட்சை -2

  பசும் பால்- 1 கப்

  மஞ்சள் - 1 சிட்டிகை

  தேன் - 1 ஸ்பூன்.

  பயன்படுத்தும் முறை :

  பயன்படுத்தும் முறை :

  ரொம்ப ஈஸிங்க. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும். இது போலவே இரவும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.

  பேரிட்சை டயட் :

  பேரிட்சை டயட் :

  பேரிட்சையை உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களுடன் துண்டு துண்டாக நறுக்கி கலந்து சாப்பிடலாம். இனிப்பு வகைகளில் கலந்து செய்யலாம். ஐஸ்க்ரீமில் கலந்து சாப்பிடுங்கள். பின் எவ்வப்போது கொறிப்பதற்கு கண்ட நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பேரிச்சையை சாப்பிடலாம். அதுவும் மீறி முழு மனதாக பேரிச்சை டயட்டை மட்டும் நீங்கள் பின் தொடர்ந்தால் உடல் எடை, தொப்பை கரைந்து விடும். எப்படி சாப்பிட வேண்டும் என பார்க்கலாமா?

  பின்பற்றும் முறை :

  பின்பற்றும் முறை :

  காலை - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால்

  மதியம் - பச்சைக் காய்கறிகளுடன் குறைவாக அரிசி சாதம்,

  மாலை - தே நீர் மற்றும் கோதுமை நிறைந்த பிஸ்கட்

  இரவு - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால் அத்னுடன் வேக வைத்த பீன்ஸ் அல்லது மீன்.

  இந்த டயட் எளிதான முறைதான். பெரிதாக செலவுமில்லை. வீட்டிலேயே பின்பற்றலாம். இதற்காக மெனெக்கெட எல்லாம் வேண்டியதில்லை. சரியாக 1 மாதம் பின்பற்றிப் பாருங்கள். பேலியோ டயட் , வேகன் டயட் எல்லாம் தேவையே இல்லை. நீங்களே வியக்கும் அளவிற்கு தொப்பை குறையும்.

  எப்படி உடல் எடையை குறைக்கிறது?

  எப்படி உடல் எடையை குறைக்கிறது?

  எப்படி வெறும் 2 பேரிச்சம் பழம் உங்க எடையை குறைக்கிறது என சந்தேகமா இருக்கா. காரணங்கள் நிறைய இருக்குங்க. ஒவ்வொன்றா பார்க்கலாம். நீங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

  பசியை தூண்டாது :

  பசியை தூண்டாது :

  பேரிச்சையில் அதிக டயட்ரி புரதங்கள் இருக்கின்றது. புரதமோ, நல்ல கார்போஹைட்ரேட்டோ ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது. இதனால் பசி விரைவில் உணர மாட்டீர்கள். அப்படி பேரிச்சையை காலை ப்ரேக் ஃபாஸ்டாக சாப்பிடும்போது உங்களுக்கு பசியை தூண்டாது. அதோடு முழுச் சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும்.

  உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் :

  உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் :

  பேரிச்சம் பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் உங்கல் உடல் பாதிப்புகளை சரி செய்கிறது. உள்ளுறுப்பு காயங்கள், அடிபடுவதால், கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏதாவது நோயினால் என பல காரணங்களால் ஏற்படுவதுண்டு. இந்த காயங்களை ஆற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் பேரிட்சை சாப்பிட வேண்டும்.

  தசை வடிவம் தரும் :

  தசை வடிவம் தரும் :

  பேரிச்சையில் உள்ள புரதச் சத்துக்கள் உங்களின் தசை வடிவத்தையே மாற்றும் திறன் கொண்டது. தேவையற்ற கொழுப்புகள் மறைந்து ஆரோக்கியமான தசைக் கட்டமைப்பு உருவாகும்.

  சர்க்கரை வியாதி தடுக்கும் :

  சர்க்கரை வியாதி தடுக்கும் :

  சர்க்கரை வியாதியை தடுக்கும். இனிப்புள்ள எல்லா உணவுகளும் சர்க்கரை வியாதியை தரும் என நினைக்க வேண்டாம். பேரிச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள் இன்சுலினை சுரக்க தூண்டுகின்றன. இவை சர்க்கரையை ஒழுங்குபடுத்தி சர்க்கரை வியாதியை தடுக்கிறது.

  சர்க்கரை பதிலாக :

  சர்க்கரை பதிலாக :

  சர்க்கரையை வேண்டாம் என பல மருத்துவர்கள் அலறுகிறார்கள். ஆனால் சர்க்கரை இல்லாமல் காபி, டீ அருந்த முடியவில்லை என நீங்கள் கவலைப் பட்டால் உங்களுக்கு இந்த விஷயம் வரப் பிரசாதம். பேரிட்சையை உருக்கி, பாகு பதத்தில் காய்ச்சி ஒரு டப்பாவில் போட்டு , சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இதனால் புற்று நோய் முதல் பல ஆபத்தான நோய்கள் தடுக்கப்படுகின்றன.

  பேரிட்சையை சாப்பிட்ட பின் உண்டாகும் மாற்றங்கள் :

  பேரிட்சையை சாப்பிட்ட பின் உண்டாகும் மாற்றங்கள் :

  கொழுப்பை கரைக்கும் :

  பேரிச்சை உடலில் விடாப்படியாக தங்கி இருக்கும் கொழுப்பை உடைத்து முற்றிலும் செரிமானத்திற்கு உட்படுத்துகிறது. இதனால் கொழுப்பு வேகமாக கரைந்து உடல் சிக்கென்று ஆகிவிடுகிறது.

  நோய் எதிர்ப்பு திறன் :

  நோய் எதிர்ப்பு திறன் :

  உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற ஆரம்பிக்கும். ரத்த சோகையை தடுக்கும். சாதரண சளி, காய்ச்சலிலிருந்து டெங்கு காய்ச்சல் வரை உங்களை நெருங்காது.

   அலர்ஜிகள் வராது :

  அலர்ஜிகள் வராது :

  சிலருக்கு எத்ற்கெடுத்தாலும் அலர்ஜி உண்டாகும். தூசி, புகை, சின்ன பூச்சி கடித்தாலும் கூட உடலில் அலர்ஜி உண்டாகும். அவர்கள் எல்லாம் தினமும் பேரிட்சைப் பழத்தை சாப்பிட்டால் இந்த பாதிப்பு அறவே போய்விடும்.

  இதய நலன் கியாரெண்டி :

  இதய நலன் கியாரெண்டி :

  இதய நோய்கள் இந்த காலத்தில் மிகவும் சாதரணமாகிப் போய்விட்டது. ஆனால் நீங்கள் தினமும் பேரிச்சையை சாப்பிடுபவர்கள் என்றால் காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் இதயம் பலமடங்கு பாதுகாப்போடு இருக்க பேரிச்சம் பழம் கியாரண்டி தரும்.

   ரத்த ஓட்டம் :

  ரத்த ஓட்டம் :

  உங்கள் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் எங்கும்க் கழிவுகளோ நச்சுக்களோ தங்காது. தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாது. சுறுசுறுப்போடு இருப்பீர்கள்.

   சிறந்த பேரிச்சை எது?

  சிறந்த பேரிச்சை எது?

  பேரிச்சை பிளவு படாமல் இருப்பது நல்லது.

  சுருக்கங்களோடு இருக்கும் பேரிச்சை தரமானதாக இருக்கும்.

  அவைகளில் நாற்றம் அல்லது வாசனை வரக் கூடாது.

  வாங்கிய பின் செய்ய வேண்டியவை :

  வாங்கிய பின் செய்ய வேண்டியவை :

  வாங்கிய பின் பேரிட்சை சாப்பிடுவதற்கு முன் அதனை கழுவ வேண்டும். இதனால் இனிப்புகளின் மேல் உருவாகும் பேக்டீரியாக்கள் நம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம்.

  அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்வது நல்லது.

  தினும் 4- 6 சாப்பிடுங்கள். உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை குறைவது உறுதி.

  ஆண்களுக்கு ஏன் நல்லது?

  ஆண்களுக்கு ஏன் நல்லது?

  ஆண்களுக்கு வேலைப் பளு, வீட்டுச் செலவு, நெருக்கடியான சூழ் நிலைகள் எல பலசவாரி செய்ய வேண்டி இருப்பதால் அவர்களுக்கு கட்டாயம் பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும். இதனால் மன அழுத்தங்கள் குறையும். ஆரோக்கியமான மன நிலையில் சிந்திக்கும்படி நரம்பு மண்டலம் வலுப்பெறுகிறது.

  விந்தணுக்கள் அதிகரிக்க :

  விந்தணுக்கள் அதிகரிக்க :

  ஆண்களின் விந்தணு விருத்திக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால்போதும். தாது விருத்தியுண்டாகும். இரவில் படுக்கும் பொழுது இதை சாப்பிட வேண்டும்.

  காலை உணவுக்குப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவுக்குப்பின், 12 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு கப் பசும்பால் குடிக்க வேண்டும். இதை குறைந்தது 2 மாதங்கள் பின்பற்ற வேண்டும்

  காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ;

  காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ;

  காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் உதவும். பேரிச்சம் பழத்தை தேனி ஊற வைத்து சாப்பிட்டால் விரைவில் இழந்த பலத்தை பெறுவார்கள்.

  வலியில்லா பிரசவம் :

  வலியில்லா பிரசவம் :

  கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் கவலைகளில் ஒன்று பிரசவத்தின் போது உண்டாகும் வலி இன்னொன்று பிரசவத்திற்கு பின் உண்டாகும் பருமன். இரண்டிற்குமே பதில் தருகிறது பேரிட்சை . கர்ப்பம் தரித்தபின் தினமும் 4 பேரிட்சைகளை சாப்பிட்டால் வலியில்லாத பிரசவத்தை தருகிறதாம். அதோடு பிரசவத்திற்குப் பின் வரும் உடல் பருமனை குறைக்கிறது.

  மந்த புத்தியை மாற்றும் :

  மந்த புத்தியை மாற்றும் :

  உங்கள் குழந்தைகள் படிப்பு விஷயத்தில் லேட் பிக்கப் பாக இருக்கிறார்களா? தினமும் 2 பேரிட்சை சாப்பிட வையுங்கள். பேரிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  How can dates aid weight loss

  How can dates aid weight loss
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more