உடல் எடையை குறைக்க ஓடுனா மட்டும் போதாது! இதையும் கொஞ்சம் செய்யனும்!

Written By:
Subscribe to Boldsky

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் காலை, மாலை இருவேளைகளும் உடற்பயிற்சி செய்யலாம். இந்த உடற்பயிற்சி உடல் இளைப்பிற்கு மிகவும் தேவையான ஒன்று தான். ஆனால் நீங்கள் என்ன தான் ஓடி ஓடி உடற்பயிற்சி செய்தாலும் கூட உடல் என்ன கொஞ்சம் கூட இளைக்கவில்லையே என்று கவலைப்படலாம். அதற்கு காரணம் நீங்கள் சாப்பிடும் உணவில் சில தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டியது முக்கியம். இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உடற்பயிற்சியுடன் சேர்ந்து உங்களுக்கு உதவுகின்றன. இந்த பகுதியில் உங்களுக்கு உடல் எடையை குறைக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அமினோ ஆசிட்

1. அமினோ ஆசிட்

அமினோ ஆசிட் என்பது உடல் எடையை குறைக்க உதவும் மிகச்சிறந்த இரகசிய ஆயுதமாகும். இது உடல் பருமன் உள்ள ஒரு பெண்ணின் உடலில் இருந்து 12 வாரத்தில் தோராயமாக மூன்று இன்ச் அளவிற்கு குறைக்கும் தன்மை உடையது. அமினோ ஆசிட் உள்ள உணவுப் பொருட்களை உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடுவதால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். முட்டை, வேர்க்கடலை, வால்நட்ஸ் போன்றவற்றில் அமினோ ஆசிட் உள்ளது.

2. மெக்னீசியம்

2. மெக்னீசியம்

மெக்னீசியம் உடலில் பல்வேறு செயல்பாடுகளுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. இதில் கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது. உங்களது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க இந்த மெக்னீசியம் உதவும். எனவே நீங்கள் இதனை பெற பாதாம், உலர் திராட்சை, கீரைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

3. பொட்டாசியம்

3. பொட்டாசியம்

பொட்டசியம் உங்களது தொப்பையை இரண்டு வழிகளில் குறைக்க உதவி புரிகிறது. இது உங்களது உடற்பயிற்சிக்கு பிறகு இழந்த சக்தியை திரும்ப கொடுக்க உதவுகிறது. மேலும் இதயம் மற்றும் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட இது உதவுகிறது. வாழைப்பழத்தில் உங்களது உடலுக்கு தேவையான பொட்டாசியம் கிடைக்கிறது. அவோகேடா, நட்ஸ், பச்சை காய்கறிகள் போன்றவையும் உங்களது தசைகளை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.

4. கொலைன்

4. கொலைன்

கொலைன் உங்களது கல்லீரலை சுற்றியுள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. முட்டையை காலை உணவாக சாப்பிடுவதன் மூலமாக உங்களது உடல் எடையை குறைக்கலாம். அதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களும் கிடைக்கின்றன.

5. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்

5. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்

ஃபேட்டி ஆசிட் உங்களது இருதயத்திற்கு தேவையான முக்கியமான ஒரு ஊட்டச்சத்தாகும். இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. சால்மன் மீன், வால்நட், சியா எண்ணெய், ஆளி விதை எண்ணெய் போன்றவற்றில் இதில் அதிகளவில் உள்ளது.

6. விட்டமின் டி

6. விட்டமின் டி

விட்டமின் டி உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகும். இது கேன்சருக்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மீன், முட்டை, காளான், பால் பொருட்கள் ஆகியவற்றில் இருந்து இது கிடைக்கிறது.

7. கால்சியம்

7. கால்சியம்

கால்சியம் எலும்புகளுக்கு நல்லது என்பது நம் அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். கால்சியம் இன்சுலினை சரியான இயக்கத்தில் வைக்க உதவுகிறது. இன்சுலின் நமது உடலியக்கத்திற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். நமது உடலுக்கு தேவையான கால்சியம் பால் பொருட்களில் இருந்தே கிடைக்கிறது.

8. விட்டமின் சி

8. விட்டமின் சி

விட்டமின் சி உங்களது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது சிவப்பு மிளகாய், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்ச் போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது. இவற்றை சாப்பிடுவதன் மூலம் நீங்கள் தேவையற்ற மனநல மாற்றங்களில் இருந்து தப்பிக்க முடியும்.

9. செலினியம்

9. செலினியம்

தைராய்டு ஆரோக்கியத்தை முறையாக காப்பதற்கு செலினியம் உதவியாக உள்ளது. இது சில வகையான ஹார்மோன்களை கட்டுப்படுத்தி உங்களது உடலை சரியான முறையில் இயங்க வைக்க உதவியாக உள்ளது. செலியனியம் கடுகு போன்ற உணவுகளில் கிடைக்கிறது.

10. பி விட்டமின்கள்

10. பி விட்டமின்கள்

விட்டமின் பி1 கார்போஹைட்ரைடுகளை சக்தியாக மாற்றுகிறது. பி2,பி6,பி12 போன்றவைகளும் உணவுப் பொருட்களில் இருந்து உங்களுக்கு கிடைக்கிறது. சூரிய காந்தி விதைகள், பீன்ஸ், ஒட்ஸ், சோயா பின்ஸ், கீரை, யோகார்ட், காளான், சீஸ், பால், முட்டை ஆகியவற்றில் இருந்து பி விட்டமின்களை பெறலாம்.

11. ஜிங்க்

11. ஜிங்க்

ஜிங்க் நமது உடலுக்கு மிக குறைவாக கிடைத்தாலே போதுமானது. இது நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனை நீங்கள் வெள்ளை கொண்டை கடலையை சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Essential Nutrients You Need To Lose Weight

Essential Nutrients You Need To Lose Weight
Story first published: Monday, October 30, 2017, 16:24 [IST]
Subscribe Newsletter