உடல் எடையை வேகமாக குறைக்கும் கீட்டோஜெனிக் டயட் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இப்போது கீட்டோஜெனிக் என்ற டயட் பிரபலமாகி வருகிறது. கெடோ ஜெனிக் என்பதற்கு குறைந்த கார்போஹைட்ரேட் என்று பொருள். நம் உடலுக்கு தேவையான கலோரிகளை ப்ரோட்டீனிலிருந்து எடுத்துக் கொள்ளப்போகிறோம். இந்த டயட்டால் ஏற்படம் நன்மைகள் என்னென்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி வேலை செய்கிறது? :

எப்படி வேலை செய்கிறது? :

ஒரு நாளில் 50 கிராமுக்கும் குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கும் போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எனர்ஜியாக பயன்படுத்திக் கொள்ளும். அதிகப்படியான சர்க்கரையளவை கரைக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை ஆகிடும். பின்னர் எனர்ஜிக்காக ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம். இதனால் விரைவில் எடை குறையும்.

யாரெல்லாம் இந்த டயட் இருக்கலாம்? :

யாரெல்லாம் இந்த டயட் இருக்கலாம்? :

எடையை குறைக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த டயட்டை பின்பற்றலாம். இருதய கோளாறுகள், மூளை தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இந்த டயட் சிறந்த பலனளிக்கும். டைப்1 டயப்பட்டீஸ் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் இந்த டயட் இருக்கலாம்.

எடை :

எடை :

கீட்டோஜெனிக் டயட் இருந்தால் மூன்று முதல் ஆறு மாதத்தில் எடை குறைந்திடும். ஏனென்றால் கொழுப்பை எனர்ஜியாக மாற்றுகிறது. கொழுப்பு தங்காமல் கரைந்து விடுவதால் உங்களின் எடையும் வேகமாக குறைந்திடும்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

இன்ஸுலின் என்ற ஹார்மோன் ரத்தத்தில் சர்க்கரையளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. கீட்டோஜெனிக் டயட்டால் அதிகப்படியாக இருக்கும் சர்க்கரையளவு வேகமாக கரைக்கப்படுகிறது. இதனால் இன்ஸூலின் பயன்பாடும் குறைவாக இருந்திடும். இதனால் சில வகை கேன்சர் செல்கள் வளர்வதை தவிர்க்கப்படுகிறது.

மாரடைப்பு :

மாரடைப்பு :

கொழுப்பு சேரவிடாமல் இருக்கின்ற கொழுப்பையும் கரைத்து எனர்ஜியாக மாற்றிவிடுகிற படியால் ரத்தநாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க முடிகிறது. இதனால் இதயம் தொடர்பான எந்தப் பிரச்சனையும் வராமல் தவிர்த்திட முடியும்.

பரு :

பரு :

சருமத்தில் ஆரோக்கியத்தில் கார்போஹைட்ரேட் முக்கிய பங்கு வகிக்கிறது.அதனை குறைப்பதால் சருமத்தில் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். அதே நேரத்தில் இன்ஸூலின் சுரப்பும் குறைவதால் சருமத்தில் வரும் ப்ரோக் அவுட்ஸ்களை தவிர்க்க முடிகிறது.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

கீட்டோஜெனிக் டயட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையளவு குறைக்கப்படுகிறது. இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். அதே நேரத்தில் கொழுப்பை எனர்ஜியாக மாற்றும் போது, உடலில் கீட்டோன்ஸ் அளவு அதிகரிக்கும். இது டைப் 1 சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது நன்று.

நரம்புகள் :

நரம்புகள் :

ஒன்றோடொன்று நரம்புகளால் இணைந்திருக்கும் மூளை மற்றும் முதுகெலும்பு பாதிப்புகளை தவிர்க்க இந்த டயட் பெரிதும் உதவிடும். அல்சைமர்,தூக்கப் பிரச்சனைகள், பார்கின்சன் நோய், போன்றவற்றை தவிர்க்க அல்லது குறைக்க இந்த டயட்டை பின்பற்றலாம்.

கர்பப்பை :

கர்பப்பை :

இன்ஸுலின் சுரப்பு அதிகமாகும் போது, கர்பப்பை வீங்கும் பிரச்சனை உண்டாகும். கீட்டோஜெனிக் டயட்டில் இன்ஸூலின் அளவு குறைவதுடன் கர்பப்பைக்கு வலுவையும் கொடுக்க முடியும். இது நம் வாழ்க்கை முறை மாற்றத்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆக்ஸிஜன் :

ஆக்ஸிஜன் :

விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகை டயட் சிறந்தது. ஆனால் கடைசி நேரத்திற்கான டயட்டாக இது அல்லாமல் பயிற்சியின் போது தொடர் பயிற்சி மேற்கொள்ள எடுத்துக் கொள்ளும் டயட்டாக இதனை பின்பற்றலாம். இது உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தி, தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள உதவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

details about ketogenic diet

Details about ketogenic diet
Story first published: Tuesday, August 8, 2017, 16:17 [IST]