Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சனிபகவானின் ஆசியால் டிசம்பர் மாதம் முதல் 2027 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
புடலங்காய் வாங்குனா அதனுடன் பால் சேர்த்து நெல்லை ஸ்டைலில் பால் கூட்டு செய்யுங்க - அட்டகாசமா இருக்கும் -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
இந்த 4 ராசிக்காரங்க உடம்பை இரும்பு மாதிரி வைச்சுக்க ஆசைப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முடி கொட்டுதா? முடியின் வளர்ச்சியை அதிகரிக்க.. விளக்கெண்ணெயை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க.. -
வாஸ்து படி உங்க குடும்ப போட்டோவை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்கக்கூடாது? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
ஒரு நாள் மட்டும் இந்தியாவின் தலைநகராக இருந்த இந்திய நகரம் எது தெரியுமா? அதற்குப்பின் என்ன நடந்தது தெரியுமா?
14 நாட்களில் 7 கிலோ எடை குறைத்து சிக்கென்று மாறிய இந்த பெண் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா?
உடல் எடையால் அவஸ்தைப்பட்டு, அதைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு, அவற்றில் பலர் தோல்வியை சந்தித்தாலும், சிலர் சரியான டயட்டைத் தேர்ந்தெடுத்து பின்பற்றி, வெற்றி கண்டுள்ளனர். உடல் எடையைக் குறைக்க எத்தனையோ டயட்டுகள் உள்ளன. அந்த டயட்டுகளில் சில கடுமையாக இருந்தாலும், சில எளிமையாக இருக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் இத ஒரு டம்ளர் குடிச்சா தொப்பையை வேகமாக குறைக்கலாம்!
அப்படிப்பட்ட எளிமையான டயட்டுகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய் டயட். இந்த டயட்டின் ஸ்பெஷல், இதில் வெள்ளரிக்காயை மட்டுமின்றி, அனைத்து உணவுகளையும் உட்கொள்ளலாம் என்பது தான்.
தொப்பையைக் குறைக்க நினைப்போர் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!
இந்த டயட்டைப் பின்பற்றி ஒரு பெண் 14 நாட்களில் கிலோ எடையைக் குறைத்துள்ளார். சரி, இப்போது அந்த பெண் பின்பற்றிய வெள்ளரிக்காய் டயட் குறித்து காண்போம்.

இந்த டயட்டில் என்னவெல்லாம் சாப்பிடலாம்?
* 150 கிராம் டூனா மீன், 2 வேக வைத்த முட்டை.
* 3 துண்டு கோதுமை பிரட் அல்லது 2 பெரிய வேக வைத்த உருளைக்கிழங்கு.
* 1/2 கிலோ நற்பதமான பழங்கள்
* சர்க்கரை இல்லாத டீ, காபி
* சோடா பானங்கள் மற்றும் மதுவை அறவே தொடக்கூடாது.

வெள்ளரிக்காயை எப்படி சேர்ப்பது?
வெள்ளரிக்காய் டயட்டின் போது, நற்பதமான வெள்ளரிக்காய் சாலட் அல்லது வெள்ளரிக்காய் ஷேக் சாப்பிடலாம். முக்கியமாக இந்த டயட்டின் ஸ்பெஷல், இவை இரண்டையும் இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை.

ஒரு நாளுக்கான வெள்ளரிக்காய் மெனு டயட்
காலை உணவு: 1 கப் வெள்ளரிக்காய் சாலட் மற்றும் 2 வேக வைத்த முட்டை
11 மணியளவில்: 1 பெரிய ஆப்பிள், 1 பீச் அல்லது 5 ப்ளம்ஸ் (200 கிராம்)
மதிய உணவு: கோதுமை பிரட் டோஸ்ட் மற்றும் 1 பௌல் வெள்ளரிக்காய் சாலட்
4-5 மணியளவில்: வெள்ளரிக்காய் ஷேக்
இரவு உணவு: உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பழம் (300 கிராம்)

வெள்ளரிக்காய் சாலட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 400 கிராம்
புளித்த தயிர் - 200 மிலி
உப்பு - சிறிது
வெங்காயம் - சிறிது (நறுக்கியது)

செய்முறை:
வெள்ளரிக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது உப்பு சேர்த்து கிளறி, தயிர் சேர்த்து நன்கு கலந்து, சிறிது வெங்காயத்தை தூவினால், வெள்ளரிக்காய் சாலட் ரெடி!

வெள்ளரிக்காய் ஷேக் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 1
பசலைக்கீரை - 1 கையளவு
வெள்ளரிக்காய் - 1
இஞ்சி - சிறிது
பாதாம், வால்நட்ஸ் - சிறிது

செய்முறை:
முதலில் ஆப்பிள், பசலைக்கீரை, வெள்ளரிக்காய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து, பின் டளம்ரில் ஊற்றி, மேலே சிறிது பாதாம் மற்றும் வால்நட்ஸ் தூவி, உடனே பருக வேண்டும்.
இந்த பானத்தில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் அதிகம் உள்ளது. அதிலும் இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி, ஈ மற்றும் சி போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

மனதில் கொள்ள வேண்டியவை:
வெள்ளரிக்காய் டயட் சிம்பிளாக இருந்தாலும், இந்த டயட்டைப் பின்பற்றும் போது தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் 30 நிமிட வேகமான நடைப்பயிற்சி மிகவும் சிறப்பானது.



Click it and Unblock the Notifications
