இந்த உணவுகளை அடிக்கடி எடுத்துகிட்டா தொப்பையை குறைக்கலாம்!!

Posted By: Srinivasan P M
Subscribe to Boldsky

தட்டையான வயிறு என்பது ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம் ஏனென்றால் அவ்வாறு இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்கை முறையை பின்பற்றுகின்றனர்.

வயிற்றுப் பகுதியில் சேரும் அதிக அளவு சதை, அதிக கொழுப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.

common foods for a flat tummy that really work

நல்ல தட்டையான வயிறையும் உடல் வளத்தையும் பெற உங்கள் ஆகாரத்தில் சில உணவுகளை சேர்க்கவேண்டும்.

இதைச் செய்யத் தேவையான உணவுகள் என்னென்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாம் வாங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

ஒரு முட்டையில் சுமார் 6 கிராம்கள் அளவிற்கு புரோட்டீன்கள் இருப்பதுடன் வெறும் 70 கலோரிகள் மட்டும் கொண்டுள்ளது. இது உங்கள் வயிற்றை தட்டையாக வைக்கவும் அதே நேரம் தசைகளை மேம்படுத்தவும் சதை தளர்ச்சியை நீக்கவும் கூட உதவுகிறது.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் வயிற்றின் சதைப்பற்றை குறைப்பதில் மிகவும் பலன் தரக்கூடியது. ஏனென்றால் இது இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பசியை குறைக்கவும் கூட உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் :

தொப்பையைக் கரைக்க உதவும் மற்றுமொரு உணவு ஆலிவ் எண்ணெய். இதில் காணப்படும் ஆண்டி ஆக்சிடென்டுகள் கொழுப்பு செல்களைக் கரைக்கும். இது மிகக் குறைந்த காலரிகளைக் கொண்டுள்ளதால் ஏற்ற ஒரு உணவாக இருக்கும்.

தயிர்

தயிர்

தயிர் ஒரு உயிரிச்சத்து (ப்ரோபயோடிக்) நிறைந்த உணவு. இதில் புரோட்டீன்கள் நிறைந்துள்ளதால் வயிற்றுப் பகுதியில் தசை சேர்க்கைக்கும் அவற்றை வலுப்படுத்தி நல்ல தோற்றத்துடன் கட்டுடன் வைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையின் அமிலத்தன்மை உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தி வயிற்றில் கொழுப்பு மற்றும் குப்பைகள் சேருவதை தடுத்து உங்கள் வயிற்றை தட்டையாக்கும்.

பூசணிக்காய்

பூசணிக்காய்

புரோட்டீன் சத்து நிறைந்த பூசணிக்காயும் தொங்கும் சதைகளைப் போக்கி விரைவிலேயே தட்டையான வயிற்றைத் தரக்கூடிய ஒரு நல்ல உணவாகும்.

தேங்காய்

தேங்காய்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த தேங்காய் உங்கள் உடம்பை உள்ளூர ஊட்டப்படுத்தி பெருத்த வயிற்றைத் தரும் கெட்ட கலோரிகள் எதுவும் சேர்க்கவிடாமல் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

common foods for a flat tummy that really work

Different types of food to make tummy flat.
Story first published: Tuesday, November 22, 2016, 7:30 [IST]