Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஆண்கள் சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
இன்றைய ஆண்கள்
தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஆண்கள் தினமும் ஜிம் செல்கிறார்கள். அதில் பலர் நடிகர் சூர்யாவை ரோல்மாடலாக வைத்துக் கொண்டு, சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கின்றனர். பொதுவாக சிக்ஸ் பேக் வைக்கும் போது, ஜிம்மில் போதிய உடற்பயிற்சியை செய்து வருவதோடு, சரியான டயட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் பலருக்கு சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற தெரிவதில்லை. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்கள் சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல அழகான சிக்ஸ் பேக்கைப் பெறலாம்.

நட்ஸ்
தசைகளின் வளர்ச்சிக்கு நட்ஸ் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அதிலும் பாதாம், முந்திரி, வால்நட்ஸ் போன்றவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வர, சிக்ஸ் பேக்கை பெறலாம்.

சோயா
தசைகளின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. சோயா பொருட்களில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், அவை சரும செல்கள் ப்ரீ ராடிக்கல்களால் பாதிப்படையாமல் தடுக்கும்.

முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் மற்றும் அமினோ ஆசிட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் காலையில் 3-4 முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டு வர வேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி6, ரிபோப்ளேவின், காப்பர், பொட்டாசியம், போலிக் ஆசிட் போன்ற தசைகளில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

பச்சை இலைக் காய்கறிகள்
சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது, பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்த்து வர வேண்டும். குறிப்பாக பசலைக்கீரையை சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் பச்சை இலைக் காய்கறிகள் பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

பருப்பு வகைகள்
பருப்பு வகைகளிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அடிக்கடி பசி ஏற்படுவது குறைந்து, கண்ட கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, தசைகள் நன்கு வளர்ச்சி அடையும்.

பால் பொருட்கள்
பால் பொருட்களான பால், சீஸ் மற்றும் தயிர் போன்றவை தசைகளின் வளர்ச்சிக்கும், எடையை அதிகரிக்கவும் உதவும். மேலும் இது மூட்டு வலி மற்றும் செரிமான பிரச்சனையைத் தடுக்கும்.

ஓட்ஸ்
ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ள ஓட்ஸை சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

வேர்க்கடலை வெண்ணெய்
சிக்ஸ் பேக் வைக்க நினைப்போர் வேர்க்கடலை வெண்ணெயை டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள புரோட்டீன், தசைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

தானியம்
தானியங்களை ஜிம் செல்பவர்கள் சேர்த்து வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, செரிமானம் அதிகரித்து, உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைக்கும். இதனால் உடற்பயிற்சி செய்யும் போது தேவையான ஆற்றல் கிடைக்கும்.

கடல் உணவுகள்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே டயட்டில் மீனை அதிகம் சேர்த்து வந்தால், அவை சிக்ஸ் பேக் வைக்க உதவியாக இருக்கும்.

தோல் நீக்கப்பட்ட இறைச்சி
தோல் நீக்கப்பட்ட இறைச்சியில் தசைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் சாப்பிடுவது மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications
