Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
ஆண்களின் எடையை குறைக்க உதவியாக இருக்கும் இந்திய உணவுகள்!!!
நிறைய மக்கள் உடல் எடை அதிகமாவதற்கு, இந்திய உணவுகள் தான் முக்கிய காரணம் என்று நினைக்கின்றனர். ஏனெனில் இந்திய உணவுகளில் அதிகமான அளவில் எண்ணெய் அல்லது நெய் மற்றும் நிறைய மசாலாப் பொருட்கள் பயன்படுத்துகிறோம் என்பதாலேயே தான்.
ஆனால், உண்மையில் ஒரு சில இந்திய உணவுப் பொருட்ளை டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடையானது நிச்சயம் குறையும். மேலும் இத்தகைய உணவுகள் உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.
நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட சாப்பிட வேண்டிய காலை உணவுகள்!!!
ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்போர், இந்திய உணவுகளில் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து, சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால், நிச்சயம் உடல் எடையானது குறையும். குறிப்பாக ஆண்கள் தான், இந்த உடல் எடை பிரச்சனைக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடல் எடை குறைவதற்கு ஜிம் மட்டும் சென்றால் போதாது, ஒரு சில கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
எனவே தொப்பை வராமல் இருப்பதற்கு, உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருட்களான பூண்டு, மஞ்சள், கடுகு எண்ணெய், கறிவேப்பிலை போன்ற உணவுகளை சேர்க்க வேண்டும். சரி, இப்போது தொப்பை குறைய உதவும் இந்திய உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பூண்டு
பூண்டில், உடலில் சேரும் கெட்டக் கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருளான அல்லீசின் (Allicin) என்னும் பொருள் உள்ளது. எனவே ஆண்கள் இந்திய உணவுப் பொருளான பூண்டை, தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இதய நோய் வராமலும் தடுக்கலாம்.

முட்டை
ஆண்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் முட்டையும் ஒன்று. ஏனெனில் முட்டை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையையும் குறைக்கும்.

கடுகு எண்ணெய்
உணவுகளில் எண்ணெய் சேர்க்காமல் சமைக்க முடியாது. எனவே எண்ணெயில் கடுகு எண்ணெயை சேர்த்து சமைத்தால், அதில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.

முழு கோதுமை
முழு கோதுமையானது உடலுக்கு மிகவும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. எனவே முழு கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் உடல் எடையைக் குறைப்பதற்கு, ஒரு சிறந்த உணவாக இருக்கும்.

தினை
தானியங்களில் தினையும் ஒரு சிறந்த கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருள். இது ராஜஸ்தானில் மிகவும் பிரபலமான, உடல் எடை குறைவதற்கும், அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள்.

பாசிப்பருப்பு
இந்த சிறிய மஞ்சள் நிறப் பருப்பில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

மோர்
ஆண்களுக்கு ஒரு சிறந்த உடல் எடையை குறைக்கும் ஆரோக்கிய பானம் என்று சொன்னால், அது மோர் தான். அதிலும், ஜிம் அல்லது உடற்பயிற்சி செய்ததும், ஒரு டம்ளர் மோர் குடித்தால், உடல் எடை குறைவதோடு, உடலில் வறட்சியில்லாமல், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும். அதிலும் கொழுப்புக்கள் குறைவாக உள்ள தயிரைக் கடைந்து, மோராக குடிப்பது மிகவும் நல்லது.

சிட்ரஸ் பழங்கள்
ஆண்கள் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவானது குறையும். எனவே ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற உணவுப் பொருட்களை சேர்த்தால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருக்கும்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலை சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு சரியாவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்களும் கரைந்து, உடல் எடை குறையும். எனவே ஆண்கள் இதனை உணவில் சேர்ப்பது நல்லது.

ஏலக்காய்
இந்த நறுமணமுள்ள உணவுப் பொருளானது உடல் எடை குறைவதில் மிகவும் உதவியாக உள்ளது. மேலும் வாய் துர்நாற்றத்தை தடுத்து, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications











