Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது!!

ஆணோ, பெண்ணோ முன்பெல்லாம் காடு கழனி என்று கிராமங்களில் வேலை பார்த்தனர். ஆனால் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பு குறைந்த வேலையைத்தான் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் இடுப்பு, பின்பகுதி என பெரும்பாலான பகுதிகள் பெருத்து குண்டாகிவிடுகின்றனர். உடல் பருமன் பிரச்சினை என்பது இன்றைக்கு அனைவரையும் பாதிக்கின்ற ஒன்றாகிவிட்டது.
முன்பெல்லாம் 40 வயதுகளில்தான் ஆண் மற்றும் பெண்களுக்கு உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்னைகள் தலை தூக்கின. ஆனால் இன்றைக்கு 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடல் பருமன் அடைந்தவர்கள், ஒருகட்டத்திற்கு பின்னர்தான் சுதாரித்துக்கொண்டு உடற்பயிற்சி, டயட் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் இவ்வாறு உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றினால் உடல் எடை குறைந்து ஒல்லியானாலும், ஏறக்குறைய ஓராண்டுக்குள் உடல் மீண்டும் பருமன் ஆகிவிடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. சுமார் 25,000 பேர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.
1946 ஆம் ஆண்டில் பிறந்த 5,362 ஆண் மற்றும் பெண்களையும், 1958 ஆம் ஆண்டில் பிறந்த 20,000 பேர்களையும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர் விஞ்ஞானிகள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடல் எடை,ரத்த அழுத்தம் மற்றும் அவர்களது வாழ்க்கை நடைமுறை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் 1980 ஆம் ஆண்டுகளில் மேற்கூறிய இரு பிரிவினருமே உடல் பருமன் அடைந்த பின்னர் உடற்பயிற்சி மற்றும் டயட்டினால் ஒல்லியாகி,பிறகு மீண்டும் படிப்படியாக உடல் எடை அதிகரித்தது தெரியவந்தது.
அதாவது ஒருவர் ஒருமுறை குண்டாகிவிட்டால், மீண்டும் ஒருபோதும் ஒல்லியாக முடியாது. இடையில் ஒல்லியானாலும் உடல் மீண்டும் பழைய பருமன் நிலைக்கே சென்றுவிடும்.
அதற்காக ஏற்கனவே உடல் பருமனாகிவிட்டவர்கள் டயட் இருப்பது, உடற் பயிற்சி செய்வது போன்றவற்றை கைவிட்டுவிட வேண்டாம்.குறைவாக மற்றும் கலோரி குறைந்த உணவுகளை உண்பது மற்றும் உடற் பயிற்சி போன்றவை உடல் மேலும் குண்டாகாமலும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாலும் தடுக்கும் என்று கூறும் ஆய்வாளர்கள், இப்பிரச்னைக்கு உள்ள ஒரே தீர்வு,முன்கூட்டியே உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்வதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒல்லியாக இருப்பவர்களே குண்டாக வேண்டும் என்று நினைக்கும் முன்பு ஒருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
