Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
பழம், காய்கறி சாப்பிட்டால் மார்பக புற்றுநோயைத் தடுக்கலாம்!

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள் என்றும் மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. சரியான உணவுப் பழக்கத்தின் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்றாடம் உண்ணும் உணவுகளிலேயே மார்பகப் புற்றுநோயை தடுக்கும் மருந்துப் பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்கள் பரிந்துரைந்த உணவுகளின் பட்டியல் உங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது.
பாகற்காய்
பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மார்பகப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே என்பவர் மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்று கூறியுள்ளார். மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
மாதுளம் பழம்
ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆலிவ் எண்ணெய்
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய் தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
வைட்டமின் டி உணவுகள்
மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த வைட்டமின் டி சத்து கொண்ட உணவுகளை உண்ணவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பால், முட்டை போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். அதேபோல் வெள்ளைப் பூண்டு, புருக்கோலி, திராட்சைப் பழம், கிரீன் டீ போன்றவைகளை தினசரி உட்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்கவேண்டும். அதேபோல் அதிக காரம் நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications