Latest Updates
-
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!!

அதற்காகவே ஜிம் மற்றும் யோகா செய்யும் நேரத்தில் பாட்டை கேட்கிறார்கள். இதனால் டென்சன் இருந்தால் கூட மறைந்து, உள்ளமானது அமைதி பெறும். அப்படி உள்ளத்தை அமைதிப்படுத்த மற்றும் உடலில் சக்தி பெற எவ்வாறெல்லாம் மற்றும் எப்போது பாட்டை கேட்கலாம் என்று பார்ப்போமா!!!
பாட்டைக் கேட்டால்...
1. பாட்டானது வேகமாக, நல்ல பீட்ஸ்ஸோடு எனர்ஜி அளவை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதுவும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றால் மிகவும் சோம்பலாக இருக்கும். அப்போது நல்ல பீட்ஸ் இருக்கும், மிகவும் பிடித்த பாட்டை வீட்டில் இருக்கும் ப்ளேயரில் செட் செய்துவிட்டு எழுந்தால், உடற்பயிற்சி செய்வதோடு, உள்ளமும் உற்சாகமாக இருக்கும்.
2. காலையில் அல்லது மாலையில் 'ஜாக்கிங்' அல்லது 'ரன்னிங்' செய்வோம். அப்போது மனதை புத்துணர்ச்சி செய்யும் வகையில் இருக்கும் பாட்டை கேட்டுக் கொண்டு உடற்பயிற்சி செய்யலாம். அவ்வாறு கேட்கும் பாட்டின் ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையை ரசித்து பாடுவது போல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவ்வாறெல்லாம் பாட்டை கேட்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து, மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதோடு, ஆரோக்கியமாகவும் வாழலாம்.
3. வீட்டில் ஏதேனும் சண்டையால் மனமானது பெரும் துன்பத்தில் மற்றும் அழுத்ததில் இருக்கும். ஆகவே அப்போது காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் அழுத்தமானது குறையும். மேலும் புகழ் பெற்ற 'ரிஹானா' பாட்டுகளை கேட்டால் மனமானது உறுதியடைவதோடு, மன அழுத்தமும் குறையும்.
4. எப்போதெல்லாம் யோகா செய்கியோமோ, அப்போதெல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்யும் வகையில் மென்மையான மியூசிக்கை கேட்கலாம். ஏனெனில் யோகா செய்தால் மனமும், உடலும் ரிலாக்ஸ் அடைகிறது. ஆகவே அதற்கு ஏற்ற வகையில் மியூசிக்கானது மென்மையாகவும், அமைதியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.
ஆகவே பாட்டை கேளுங்க!!! மனசை ரிலாக்ஸா வெச்சுக்கோங்க!!!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
