Latest Updates
-
குளிப்பதற்கு சிறந்தது குளிர்ந்த நீரா? வெந்நீரா? உடலில் முதலில் எந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்? -
முட்டையும், காளானும் இருந்தால் இந்த மாதிரி வித்தியாசமா ஆம்லெட் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
நவம்பர் 12-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு புதிய வருமான வழிகள் உருவாகும்! -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிற்குள் இருக்கும் கிராமம் - இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 11, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நவம்பர் 13-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வது இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்தில் தள்ளப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி வித்தியாசமான குருமா செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
உங்கள் முழங்கால் ரொம்ப கருப்பா இருக்கா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை வைச்சே வெண்மையாக்கிரலாம்
தாய்மையை தடுக்கும் உணவுகள்! கவனம் தேவை!!

ஆண்கள் தினசரி கால் லிட்டர் கோலா குடித்தால் அவர்களின் விந்தணு உற்பத்தியில் 30 சதவிகிதம் பாதிக்கும். அதேபோல் பெண்கள் கொழுப்புசத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால் 85 சதவிகிதம் வரை அவர்களுக்கு தாய்மை அடைவதில் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்ணின் உடலுக்குள் இருக்கும் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் முழுமையாக நடக்க குறிப்பிட்ட ஹார்மோன்களின் பங்களிப்பு மிக அவசியம். முரண்பாடான உணவுகள் சாப்பிடும்போது அதில் இருக்கும் ரசாயனங்கள், குறிப்பிட்ட ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்தி கட்டுப்படுத்தும். இதன் மூலம் கர்ப்பம் தரிப்பது தாமதமாகும். உடல் குண்டாக இருப்பதும் ஓவர் ஒல்லியாக இருப்பதும் தாய்மைக்கு தடையாகும்.
பிஸ்கெட், ஐஸ்கிரீம், பேக்கரி உணவுப் பொருட்கள், இறைச்சி வகைகள் போன்றவைகளை அதிகம் சாப்பிடுவதும் கர்ப்பத்திற்கு ஏற்றதல்ல. அதேபோல் டின்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகள், செயற்கை இனிப்புகள், அதிகமான சர்க்கரையின் பயன்பாடு, கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவைகளும் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டில் மந்த நிலையை உருவாக்கும்.
உண்ணும் உணவுப் பொருட்களில் கிருமி நாசினிகள் கலந்திருந்தால் மலட்டுத்தன்மை, கர்ப்பச்சிதைவு, ஊனமுடன் குழந்தை உருவாகுதல் போன்றவை ஏற்படலாம். கலப்பட உணவுகள் சாப்பிட்டால் அது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோயாளியாக மாற்றி விடும். மேலும் உணவுப் பொருட்களில் நிறத்திற்கு சேர்க்கப்படும் செயற்கை பொருட்கள், உணவுப் பொருட்களை அதிக நாட்கள் பயன்படுத்த வசதியாக சேர்க்கப்படும் ரசாயனங்கள் போன்றவை இனப்பெருக்க திறனை வெகுவாக பாதிக்கும்.
கிராமிய, பாரம்பரிய உணவுகள் தான் தாய்மையடைதலுக்கு ஏற்றது. அத்தகைய உணவுகளை உண்ணும்போது தேவையான புரோட்டின் சத்து இருக்கிறதா என்றும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
தவிடு நீக்காத தானிய உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்கள், கீரை வகைகளை உணவில் அதிக அளவில் சேருங்கள். மீன், முளை கட்டிய தானியம் போன்றவைகளில் உடலுக்கு தேவையான கொழுப்பும், ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவைகளையும் சாப்பிடுவது நல்லது
ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிட்டால் அதில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும். மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக உடலுறவை அமைத்துக் கொள்ளுங்கள். தேவையான உடற்பயிற்சியையும் செய்யுங்கள். ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
