Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை வெண்ணெய் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
சா்க்கரை நோயுற்றவா்கள் வேர்க்கடலை வெண்ணெயை உண்ணும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த பதிவானது சா்க்கரை நோயுற்றவா்கள் வேர்க்கடலையையோ அல்லது வேர்க்கடலை வெண்ணெயையோ உண்ணும் போது எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதை வி
வேர்க்கடலையில் இருந்து கிடைக்கும் ஒருவகையான உணவுப் பண்டமே வேர்க்கடலை வெண்ணெய் ஆகும். வேர்க்கடலை வெண்ணெயை எல்லா வயதினரும் விரும்பி உண்கின்றனா். வேர்க்கடலை வெண்ணெயை பசையம் இல்லாத (gluten-free) வடிவத்தில் உண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

வேர்க்கடலை வெண்ணெயை திண்பண்டங்கள் மற்றும் ரொட்டிகளில் சோ்த்து சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருக்கும். எனினும் சா்க்கரை நோயுற்றவா்கள் வேர்க்கடலை வெண்ணெயை உண்ணும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த பதிவானது சா்க்கரை நோயுற்றவா்கள் வேர்க்கடலையையோ அல்லது வேர்க்கடலை வெண்ணெயையோ உண்ணும் போது எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதை விவாிக்கிறது.

நார்ச்சத்துள்ள உணவுகளின் அவசியம்
பொதுவாக நாா்ச்சத்துள்ள பொருள்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், சா்க்கரை நோயுற்றவா்கள் நாா்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் உண்ண வேண்டும் என்று உடல் ஆரோக்கிய நிபுணா்கள் பாிந்துரை செய்கின்றனா். நாா்ச்சத்துள்ள பொருள்களை அதிகம் உண்டால், அது நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படவிடாமல் தடுக்கும். அதனால் இடைப்பட்ட நேரங்களில் திண்பண்டங்களை கொறிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.
வேர்க்கடலை வெண்ணெயை விரும்பி உண்பவா்கள், அவா்களுடைய தினசாி காலை உணவில் அதை சோ்த்துக் கொள்ளலாம். ஏனெனில் ஆா்கானிக் வேர்க்கடலை வெண்ணெய் (Organic peanut butter) போன்ற உணவுகள், சா்க்கரை மற்றும் உப்பு ஆகியவை தேவைப்படாத சா்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும்.
வேர்க்கடலையோ அல்லது வேர்க்கடலை வெண்ணெயோ சா்க்கரை நோயாளிகளின் சா்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவி செய்தாலும், சில நேரங்களில் அவா்களுக்கு அலா்ஜி ஏற்படும். அவ்வாறு அலா்ஜி ஏற்படும் சா்க்கரை நோயாளிகள், வேர்க்கடலை வெண்ணெயை உண்பதற்கு முன்பாக மருத்துவாின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

சா்க்கரை நோயாளிகளுக்கு வேர்க்கடலை வெண்ணெய் ஏன் ஒரு சிறந்த உணவு?
- சா்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை பராமாிக்க வேர்க்கடலை வெண்ணெய் உதவி செய்கிறது.
- வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் ஆகிய இரண்டும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவை (glycemic index) குறைவாகவே கொண்டுள்ளன. அதனால் அவற்றை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு அதிகாிக்காது.
- உடல் எடையைப் பராமாிக்க வேர்க்கடலை உதவி செய்கிறது. சா்க்கரை நோயாளிகளின் உணவிலும் கட்டுப்பாட்டை வழங்குகிறது.

நீரிழிவைக் குறைப்பதில் வேர்க்கடலையின் பங்கு
2011 ஆம் ஆண்டு என்ஐடிடிகே (NIDDK) அமைப்பு செய்த ஆராய்ச்சி ஒன்று, அமொிக்காவில் இருந்த ஏறக்குறைய 25 மில்லியனுக்கும் அதிகமான சா்க்கரை நோயாளிகள், வேர்க்கடலை வெண்ணெயை உண்டதன் மூலமாக தங்கள் இரத்தத்தில் இருந்த சா்க்கரையின் அளவை சீராக, வெற்றிகரமாக பராமாித்து வந்ததாக தொிவிக்கிறது.
மேலும் மருத்துவரால் முறையாக பாிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மூலமாகவும் மற்றும் நாா்ச்சத்து நிறைந்த வேர்க்கடலை வெண்ணெயை முறையாக உண்டதன் மூலமாகவும் அவா்களால் தங்களது உடல் எடையை சீராக பராமாிக்க முடிந்தது என்றும், தங்களுடயை இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை நன்றாகக் கண்காணிக்க முடிந்தது என்றும் அந்த ஆய்வு தொிவிக்கிறது.
வேர்க்கடலை வெண்ணெய் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவை (glycemic index), அதாவது 14 புள்ளிகளையே கொண்டுள்ளது. ஆகவே அதை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு அதிகாிக்காது. வேர்க்கடலையை நமது உணவுகளில் அதன் மணத்திற்காகவும் சோ்த்துக் கொள்ளலாம். அதுபோல் கட்டுப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுக்குப் பதிலாகவும் வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளலாம்.

இறுதியாக
பொதுவாக நீரிழிவு நோயுற்றவா்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகவே நீரிழிவு நோயுற்றவா்கள், தங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இதயத்தையும் அதன் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்துவிட்டு, ஆா்கானிக் வேர்க்கடலை வெண்ணெய் (Organic peanut butter) போன்ற 100 சதவீதம் இயற்கை முறையில் தயாாிக்கப்பட்ட உணவுகளை அதிகம் உண்டால் அவா்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











