Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
உங்களுக்கு இந்த அறிகுறிலாம் இருக்கா? அப்ப சர்க்கரை நோய் வரப்போகுது-ன்னு அர்த்தம்.. உஷார்...
சர்க்கரை நோய்க்கு முந்தைய கட்டம் தான் ப்ரீ டயாபட்டீஸ் நிலை ஆகும். இந்த நிலையில் இரத்த சர்க்கரை அளவானது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
Symptoms Of Prediabetes: தற்போது உலகம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மோசமான நோயாக சர்க்கரை நோய்/நீரிழிவு நோய் மாறி வருகிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை முழுமையாக குணப்படுத்த முடியாது. மேலும் சர்க்கரை நோயானது பல்வேறு இதய நோய்கள், சிறுநீரகம், கல்லீரல் அல்லது கண் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 422 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் இறக்கிறார்கள். முக்கியமாக உலகிலேயே இந்தியாவில் 80 மில்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது மற்றும் 2045 ஆம் ஆண்டிற்குள் சுமார் 135 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

சர்க்கரை நோய் எதனால் வருகிறது?
சர்க்கரை நோயானது பிட்சா, பர்கர், எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உண்பதாலும், உடலுழைப்பு இல்லாத மோசமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதனாலும் தான் ஏற்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொருவரும் சர்க்கரை நோயின் அறிகுறிகளை முன்பே அறிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி அறிந்திருப்பதன் மூலம், ஆரம்பத்திலேயே சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்து, அது தீவிரமாவதைத் தடுக்கலாம்.
முக்கியமாக சர்க்கரை நோய்க்கு முந்தைய கட்டம் தான் ப்ரீ டயாபட்டீஸ் நிலை ஆகும். இந்த நிலையில் இரத்த சர்க்கரை அளவானது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த ப்ரீ டயாபட்டீஸ் நிலையை ஒருவர் சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை மேற்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளத் தொடங்கினால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். இப்போது ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் சில முக்கிய அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

அதிகப்படியான தாகம்
ஒருவருக்கு அதிகப்படியான தாகம் ஏற்பட்டால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது என்று அர்த்தம். முக்கியமாக இது ஃப்ரீ டயாபட்டீஸ் நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது
அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஃப்ரீ டயாபட்டீஸ் நிலையின் முக்கிய அறிகுறிகளுள் ஒன்றாகும். எப்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறதோ, அப்போது சிறுநீரகங்களின் செயல்பாடு குறைகிறது. இதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.

அடிக்கடி பசி
ஃப்ரீ டயாபட்டீஸ் நிலையில் ஒருவருக்கு அதிகமாக பசி எடுக்கும். பொதுவாக ஒருவருக்கு பசியானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். எனவே உங்களுக்கு அடிக்கடி பசி எடுப்பது போன்று உணர்ந்தால், உடனே ஒரு இரத்த பரிசோதனையை செய்து பாருங்கள். அதுவும் உணவு உண்பதற்கு முன் ஒருவரின் இரத்த சர்க்கரை அளவு 100-க்கு மேல் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அதிகளவு உடல் சோர்வு
உடல் சோர்வு ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். ஆனால் அதிகப்படியான உடல் சோர்வு ஃப்ரீ டயாபட்டீஸ் நிலையின் அறிகுறிகளுள் ஒன்றாகும். அதுவும் ஒருவர் அதிக வேலை எதுவும் செய்யாமல் மிகுந்த சோர்வை உணர்ந்தால், அவருக்கு ஃப்ரீ டயாபட்டீஸ் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

மங்கலான பார்வை
ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, அது உடலில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக இது கண்களில் உள்ள நரம்புகளில் சேதத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக பார்வை மங்கலாகலாம். எனவே உங்களுக்கு திடீரென்று அடிக்கடி பார்வை மங்கலாக தெரிந்தால், ஃப்ரீ டயாபட்டீஸ் இருக்க வாய்ப்புள்ளது.

ஃப்ரீ டயாபட்டீஸ் நிலையை கையாள்வது எப்படி?
ஒருவருக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால், சற்று தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உங்களின் இரத்த சர்க்கரை அளவு 100-க்கு மேலே 120-க்கும் குறைவாக இருந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய ப்ரீ டயாபட்டீஸ் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே உங்கள் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதுவும் முக்கியமாக எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்புள்ள உணவுகள், பிட்சா, பர்கர், சர்க்கரை நிறைந்த பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து, பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். மேலும் உப்பு மற்றும் சர்க்கரையை உணவில் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க ண்டும். தானியங்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாக தினமும் தவறாமல் 30 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.



Click it and Unblock the Notifications
