குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் நேர்மறையான பலன்களை மட்டுமே கொடுக்கும் ஒரு சுப கிரகமாகக் கருதப்படுகிறார். எனவே குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது குருபகவான் கடக ராசியில் அஸ்தமனத்தில் இருப்பதால் அது மிகவும் முக்கியமானதாக் கருதப்படுகிறது.

Jupiter Combust in Cancer Till August Bring Prosperity To These Zodiac Signs

ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை குருபகவான் இதே நிலையில் நீடித்திருப்பார். குருபகவானின் இந்த நிலை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தால் சிறப்பான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

குரு பகவான் ரிஷப ராசிக்காரர்களின் மூன்றாம் வீட்டில் அஸ்தமனம் அடைவதால், அவர்களின் தகவல் தொடர்புத் திறனும் மற்ற திறன்களும் வலுவடையும். அவர்கள் தடைப்பட்டிருந்த பழைய திட்டங்களை மீண்டும் செயல்படுத்தலாம் மற்றும் தொழில்முறை உறவுகளை மேம்படுத்தலாம். இந்த சக்திவாய்ந்த கிரக நிலை அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும், இது அவர்களின் வாழ்க்கையில் உள்ள தடைகளை தாண்டி வர உதவும்

தொழில்முனைவோர் மற்றும் பணியில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை அடையலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள் தங்கள் உறவுகளில் அமைதியையும் மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள். திருமணமாகாதவர்கள் அவர்களுக்கு பொருத்தமான ஒரு வரனை சந்திக்கலாம். இந்த சாதகமான கட்டம் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தையும் செழிப்பையும் ஊக்குவிக்கிறது.

கன்னி

லாபங்கள் மற்றும் சாதனைகளுக்கு மிகவும் வலிமையான வீடுகளில் ஒன்றான பதினொன்றாம் வீட்டில் குருபகவான் அஸ்தமனம் அடையவுள்ளார். அவர்களின் நீண்ட கால இலக்குகளில் முன்னேற்றம் தென்படத் தொடங்கலாம். இந்த கிரக நிலை காரணமாக, அவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறுவார்கள். மேலும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களைச் சந்திக்க நேரிடும். அவர்களின் தொழில் வாழ்க்கையில், பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள்.

உங்கள் முயற்சிகள் பெரும் வெற்றியைத் தரும், மேலும் உங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு பொறுப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் நன்றாக சம்பாதிக்கலாம் மற்றும் கணிசமான அளவு பணத்தை சேமிக்கலாம். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

துலாம்

தொழில் மற்றும் நற்பெயரைக் குறிக்கும் பத்தாம் வீட்டில் குருபகவான் அஸ்தமனம் அடைகிறார். இந்த பெயர்ச்சியால் முன்னேற்றம் மெதுவாக இருக்கலாம் என்றாலும், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் அவர்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் எதிரிகள் கூட பொறாமைப்படும் அளவிற்கு வளர வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் கிண்டல் செய்யப்பட்ட பலர் முன்வந்து உங்களிடம் உதவி கேட்பார்கள். அவர்களின் நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேற வாய்ப்புள்ளது.

பொதுவாகவே ரிஷப ராசிக்காரர்கள் அவர்கள் நேசிப்பவர்களுக்கு அன்பைத் திருப்பிக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். இதுவரை நடந்து வந்த சட்டப் போராட்டங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்

மீன ராசியின் அதிபதியாக குருபகவான் இறுக்கினார். சூரியனுடன் இணைந்து 'அஸ்தமனம்' அடைந்திருந்தாலும், அவர் மீன ராசியின் ஐந்தாம் வீட்டில் சாதகமான நிலையில் அமர்ந்துள்ளார். இந்த கிரக நிலையால் அவர்கள் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும், மேலும் அவர்களின் தொழில் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள். நீண்ட காலமாக அவர்களை துன்புறுத்தி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவடையும், மேலும் பல்வேறு செயல்பாடுகளை முடிக்க அவர்களின் ஆற்றல் துணையாக இருக்கும்.

அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், மேலும் பல்வேறு துறைகளில் விரும்பியதை அடைய முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, July 24, 2026, 23:26 [IST]
Desktop Bottom Promotion