For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய்க்கு மெட்ஃபோர்மின் மாத்திரை போடுறீங்களா? அப்ப கண்டிப்பா இத படிங்க...

டைப்-2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முதல் சிகிச்சையாக கொடுக்கப்படும் வாய்வழி மாத்திரை தான் மெட்ஃபோர்மின். இந்த மாத்திரை இரத்த சர்க்கரை அளவை பாதுகாப்பான அளவிற்கு குறைக்கக்கூடியது.

|

டைப்-2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முதல் சிகிச்சையாக கொடுக்கப்படும் வாய்வழி மாத்திரை தான் மெட்ஃபோர்மின். இந்த மாத்திரை பிகுவானைடுகள் எனப்படும் மருந்துகளின் வகையைச் சேர்ந்தது. ஆனால் இந்த மாத்திரை சர்க்கரை நோயை குணப்படுத்தாது. சர்க்கரை நோய்/நீரிழிவு என்பது ஒரு வளர்சிதை மாற்ற நிலை. எனவே இந்த மாத்திரை இரத்த சர்க்கரை அளவை பாதுகாப்பான அளவிற்கு குறைக்கக்கூடியது. வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆய்வின்படி, இந்த மாத்திரையின் மிகவும் பொதுவான பக்க விளைவு வயிற்று உப்புசம். ஆனால் மருத்துவர்கள் மாத்திரையின் அளவை மெதுவாக உயர்த்துவதன் மூலம் இந்த சிக்கலைத் தவிர்க்கலாம்.

Surprising Side Effects Of Diabetes Drug Metformin

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சிறுநீரக கோளாறு உள்ள நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்து, மருத்துவர் உங்களுக்கு மெட்ஃபோர்மின் பரிந்துரைத்தால், இந்த மாத்திரையை நீண்ட காலம் எடுக்க வேண்டும். எனவே இந்த மாத்திரையை நீங்கள் நீண்ட காலம் அல்லது குறுகிய காலம் எடுப்பதால், சந்திக்கும் சில பக்க விளைவுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அதற்காக பதற்றமடைய தேவையில்லை. இந்த பக்கவிளைவுகள் லேசானவை மற்றும் சிகிச்சை அளிக்கக்கூடியவையாகவே இருக்கும். ஆனால் இந்த மாத்திரையால் நீங்கள் ஏதேனும் பக்கவிளைவுகளை சந்தித்தால், அதை உடனே உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

MOST READ: சர்க்கரை நோய் இருக்கா? நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெட்ஃபோர்மினின் பொதுவான மற்றும் மிதமான பக்க விளைவுகள்

மெட்ஃபோர்மினின் பொதுவான மற்றும் மிதமான பக்க விளைவுகள்

சர்க்கரை நோய் உள்ள பெரும்பானாலோர் இந்த மாத்திரையை முதன்முதலாக உட்கொள்ளும் போது பின்வரும் பக்கவிளைவுகளை அனுபவித்துள்ளனர். ஆனால் இந்த பக்கவிளைவுகள் நாளடடைவில் மறைந்துவிடும். இருப்பினும், நீங்கள் சந்திக்கும் பக்கவிளைவுகள் தீவிரமாக இருந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

சர்க்கரை நோய்க்கு மெட்ஃபோர்மின் மாத்திரையை எடுத்தால், நெஞ்செரிச்சல், குமட்டல், வயிற்று வலி, வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற பொதுவான பக்கவிளைவுகளை சந்திக்கலாம். இன்னும் சிலர் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றாலும் கஷ்டப்படலாம். அதோடு சிலர் சிறிது உடல் எடையையும் இழந்திருக்கலாம். இன்னும் சிலர் இந்த மாத்திரையை எடுத்த ஆரம்ப காலத்தில் வாயில் மெட்டாலிக் சுவையை சந்தித்தாகவும், அடிக்கடி தலைவலியை அனுபவித்ததாகவும் புகாரளித்தனர்.

இந்த அறிகுறிகளை எவ்வாறு சரிசெய்யலாம்?

இந்த அறிகுறிகளை எவ்வாறு சரிசெய்யலாம்?

உணவுடன் மாத்திரையை எடுக்க முயற்சிக்கவும். இது இந்த அறிகுறிகளை கணிசமாக குறைக்க உதவும். வேண்டுமானால் உங்கள் மருத்துவரிடம் இதுக்குறித்து கூறி, குறைவான டோஸ் கொண்ட மாத்திரையைக் கொடுத்து, பின் படிப்படியாக அளவை அதிகரிக்க கேட்கலாம். இதனால் உடலானது இந்த மாத்திரைக்கு ஏற்ப தன்னை மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.

மெட்ஃபோர்மினின் தீவிரமான பக்க விளைவுகள்

மெட்ஃபோர்மினின் தீவிரமான பக்க விளைவுகள்

மெட்ஃபோர்மின் எப்போதுமே தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால் சிலர் இந்த மாத்திரை கடுமையான பக்கவிளைவுகளை அனுபவிக்கிறார்கள். அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

லாக்டிக் அமிலத்தன்மை (Lactic Acidosis)

லாக்டிக் அமிலத்தன்மை (Lactic Acidosis)

இது மெட்ஃபோர்மினின் மிகவும் தீவிரமான மற்றும் கடுமையான பக்க விளைவு ஆகும். இந்த பிரச்சனைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இப்பிரச்சனை உடலில் மெட்ஃபோர்மின் உருவாக்கப்படுவதால் நிகழ்கிறது. லாக்டிக் அமிலத்தன்மையின் முதல் அறிகுறி சுவாசிப்பதில் சிக்கல் ஆகும். அதோடு சோர்வு, பொதுவான பலவீனம், பசியின்மை குறைதல், குமட்டல், தலைச் சுற்றல் மற்றும் லேசான தலைவலி போன்றவை இதன் பிற அறிகுறிகளாகும். மேலும் இதயத் துடிப்பு மிக வேகமாக அல்லது மிக மெதுவாக இருக்கும் மற்றும் தசைவலி மற்றும் குளிர் போன்றவற்றையும் சந்திக்கலாம்.

இரத்த சோகை/அனீமியா

இரத்த சோகை/அனீமியா

மெட்ஃபோர்மின் மாத்திரை உடலில் வைட்டமின் பி12 இருப்பைக் குறைக்கும் என்பதால், இது இரத்த சோகைக்கு உள்ளாக்கும். இதனால் சோர்வு மற்றும் லேசான தலைவலியுடன், தலைச்சுற்றலையும் அனுபவிக்கலாம். அதற்காக இந்த மாத்திரை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. உடனே மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.

ஹைப்போ கிளைசீமியா/இரத்த சர்க்கரை குறைவு

ஹைப்போ கிளைசீமியா/இரத்த சர்க்கரை குறைவு

சர்க்கரை நோய்க்கு மெட்ஃபோர்மின் மாத்திரையுடன், பிற சர்க்கரை நோய் மருந்துகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே, ஹைப்போகிளைசீமியா ஏற்படும். மோசமான உணவு, அதிகமான உடற்பயிற்சி மற்றும் குடிப்பழக்கம் ஆகியவை இந்த பக்கவிளைவைத் தூண்டும். அசாதாரண இதயத் துடிப்பு, குமட்டல், பலவீனம், வயிற்று வலி மற்றும் சோர்வு போன்றவற்றை நீங்கள் சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Side Effects Of Diabetes Drug Metformin

If you have diabetes and your doctor prescribes metformin, you need to know all the pros and cons of the medication. Read on to know just that.
Story first published: Thursday, March 4, 2021, 12:39 [IST]
Desktop Bottom Promotion