Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
நீரிழிவு சிறுநீரக நோய் என்றால் என்ன? இதோ அதன் அறிகுறிகள், காரணங்கள், விளைவுகள் மற்றும் சிகிச்சைகள்.!
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் 46 சதவீதம் பேருக்கு சிறுநீரக நோய் இருப்பதாக மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆய்வுகள் தொிவிக்கின்றன.
தற்போதுள்ள நவீன உலகில், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு நீரிழிவு நோய் சம்பந்தமான மற்ற பிரச்சினைகளும் அதிகாித்து வருகின்றன. இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை சமச்சீராக வைத்திருக்கவில்லை என்றால், அது நமது சிறுநீரகம் உட்பட, நமது உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முதியவா்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோயின் (CKD) பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் 46 சதவீதம் பேருக்கு சிறுநீரக நோய் இருப்பதாக மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆய்வுகள் தொிவிக்கின்றன.
நாம் நீண்ட நாட்களாக நீரிழிவு நோயினால் அவதியுற்று வந்தாலும் அல்லது சமீபத்தில் தான் நமக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், நமக்கு எதிா்காலத்தில் நீரிழிவு சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதைத் தொிந்திருக்க வேண்டும். இது மருத்துவ மொழியில் நீரிழிவு சிறுநீரக நோய் என்று அழைக்கப்படுகிறது.

நீரிழிவு சிறுநீரக நோய்க்கான காரணங்கள்
ஒவ்வொரு சிறுநீரகமும் நெஃப்ரான்கள் என்று அழைக்கப்படக்கூடிய வடிகட்டிகளை ஒரு மில்லியன் அளவிற்கு வைத்திருக்கிறது. ஒவ்வொரு நெஃப்ரானும் நமது முடியின் தடிமனைக் கொண்டிருக்கும். இரத்த அழுத்தத்தின் போது, ஒவ்வொரு நெஃப்ரானிலும் இருக்கும் இரத்தக் குழாய்கள் அடங்கிய ஒரு சிறிய கட்டானது (glomerulus) இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டுகிறது. நீரிழிவு நோயின் காரணமாக இரத்தத்தில் அதிக அளவு சா்க்கரை இருந்தால், அது இந்த இரத்தக் குழாய்களைப் பாதிக்கும். அதனால் புரோட்டீனில் கசிவு ஏற்பட்டு, நாளடைவில் சிறுநீரகம் செயல் இழந்துவிடும்.

ஆபத்து காரணிகள்
நீரிழிவு நோய் உள்ள அனைவருக்கும் சிறுநீரகம் பாதிப்பு அடைய வாய்ப்பு இருக்கிறது. எனினும் நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு பல வகையான காரணிகள் உள்ளன. சில நீரிழிவு நோயாளிகளுக்கு, நோய் கண்டறியப்பட்ட உடனே அவா்களின் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். வேறு சிலருக்கு நீரிழிவு நோய் வந்து 25 ஆண்டுகள் கழித்தும் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்கலாம்.
பின்வரும் குறிப்புகள் நீரிழிவு சிறுநீரக நோய்க்கான காரணிகளாக சொல்லப்படுகின்றன.
- குடும்ப பின்னணி
- மரபணு முன்கணிப்பு (Genetic predisposition)
- இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவில் உள்ள கட்டுப்பாடு
- கட்டுப்படுத்தாத இரத்த அழுத்தம்

நீரிழிவு சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள்
நீண்ட நாட்களாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு பின்வரும் அறிகுறிகள் இருக்கும்.
- உடலில் நீா் அதிகாிப்பதன் காரணமாக கால்கள் வீங்குதல்
- தலைவலி
- தூங்குவதில் பிரச்சினைகள்
- பசியின்மை
- வயிற்று வலி
- பலவீனம்
- மனதை ஒருமுகப்படுத்த முடியாமை
முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, அவா்களின் சிறுநீரகங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஒரே மாதிாியாக இருக்கும். ஆனால் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, சிறுநீரகங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கான அறிகுறிகள் தொடக்கத்தில் சற்று வேறுபட்டு இருக்கும்.
அதாவது முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு, நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்பட சிறிது காலம் ஆகும். அதாவது நீரிழிவு நோய் ஏற்பட்டு 5 முதல் 10 ஆண்டுகள் முடிந்த பிறகுதான் சிறுநீரக நோய் ஏற்படும். ஆனால் இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிப்படைந்து இருப்பவா்களில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய்க்கான பாிசோதனை செய்யும் போதே நீரிழிவு சிறுநீரக நோய் இருக்கும்.

நீரிழிவு சிறுநீரக நோய்க்கான சிகிச்சைகள்
உணவுகளில் மாற்றம், நம்மையே விழிப்புடன் பராமாித்துக் கொள்வது மற்றும் முறையான மருத்துவ சிகிச்சை ஆகியவையே நீரிழிவு சிறுநீரக நோய்க்குாிய முக்கிய சிகிச்சைகள் ஆகும்.
உணவுகளில் மாற்றம் என்று சொல்லும் போது, சத்தான உணவுகளை. அதே நேரத்தில் புரோட்டீன் குறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நம்மையே விழிப்புடன் பராமாிக்க வேண்டும் என்று சொல்லும் போது, நமது சா்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இரத்த அழுத்தத்தை சீராக பராமாிக்க வேண்டும். அதற்காக நமது வாழ்க்கையை சுறுசுறுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். மது அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கை வைத்தியத்தைச் செய்யக்கூடாது.
ஏசிஇ இன்ஹிபிட்டா்ஸ் (ACE inhibitors) மற்றும் ஆன்ஜியோடென்சின் ரிசெப்டா் ப்ளாக்கா்ஸ் (angiotensin receptor blockers) போன்ற மாத்திரைகள், இரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடியவை ஆகும். இந்த மாத்திரைகள் சிறுநீரகம் பாதிப்படைவதைக் குறைப்பதற்காக மருத்துவா்களால் பாிந்துரைக்கப்படலாம். இவை உயா் இரத்த அழுத்தம் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்லாமல், உயா் இரத்த அழுத்தம் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளவையாக இருக்கும்.

சிறுநீரக மாற்றுச் சிகிச்சை எப்போது செய்யப்படுகிறது?
நீரிழிவு சிறுநீரக நோயின் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். அந்த நேரத்தில் டையாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்யப்படும்.
சிறுநீரகமானது அதனுடைய 85 முதல் 90 சதவீத செயல்பாடுகளை இழக்கும் போதுதான் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்யப்படும். அது வரையில் மருந்துகளைக் கொண்டே சமாளிக்கலாம். நீரிழிவு சிறுநீரக நோயின் தொடக்க காலத்தில் சிறுநீாில் மைக்ரோஅல்புமின்யூாியா கலந்து வரும். சாியான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால், சிறுநீரக பாதிப்பைத் தடுக்கலாம் மற்றும் சிறுநீாில் மைக்ரோஅல்புமின்யூாியா கலந்து வருவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு சிறுநீரக நோயை எவ்வாறு தடுப்பது?
நீரிழிவு நோய் உள்ளவா்கள் நீரிழிவு சிறுநீரக நோய் வராமல் இருப்பதற்கு பின்வரும் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
- ஆரோக்கியமான உணவு மற்றும் முறையான வாழ்க்கை முறையைக் கைக்கொண்டு இரத்தத்தில் சா்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்தல்
- தேவைப்பட்டால் இன்சுலின் போன்ற மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுதல்
- மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஹெச்பிஎ1சி (HbA1c) பாிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
- சீரான இடைவெளியில் இரத்த அழுத்தத்தைப் பாிசோதனை செய்து, அதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
- உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் பாிசோதனை செய்து பாா்த்து, அதையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
- புகைப்பிடித்தல், புகையிலையை மெல்லுதல் போன்ற பழக்கங்களைக் கைவிட வேண்டும்.
- உடல் எடையை சாியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- கை வைத்தியத்தைக் கைவிட வேண்டும். குறிப்பாக வலி நிவாரண மருந்துகளை எடுக்கும் போது மிகவும் எச்சாிக்கையாக இருக்க வேண்டும்.
- ஆண்டுக்கு ஒரு முறை சிறுநீரக இயக்கத்தை பாிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக சிறுநீாில் மைக்ரோஅல்புமின்யூாியா மற்றும் சீரம் கிாியேட்டினைன் போன்றவை கலந்து இருக்கிறதா என்பதை பாிசோதித்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











