For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் இருக்குறவங்க இந்த கட்டுக்கதைகளை ஒருபோதும் நம்பாதீங்க... இதெல்லாம் வடிகட்டுன பொய்...!

இன்று உலகம் முழுவதும் அதிகளவு மக்களளை பாதித்திருக்கும் நோயாக நீரிழிவு நோய் மாறிவிட்டது. நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

|

இன்று உலகம் முழுவதும் அதிகளவு மக்களளை பாதித்திருக்கும் நோயாக நீரிழிவு நோய் மாறிவிட்டது. நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய் பொதுவாக சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட ஆரோக்கிய நிலை, இந்த நோய் ஏற்பட்டால் நாம் உண்ணும் உணவை ஆற்றலுக்குப் பயன்படுத்த உடலால் சரியாகச் செயல்படுத்த முடியாது.

Diabetes Myths You Should Not Believe in Tamil

உடலில், கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை உருவாக்குகிறது, இது குளுக்கோஸ் அல்லது சர்க்கரை செல்களுக்குள் செல்ல உதவுகிறது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உடலால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாது அல்லது அதை சரியாகப் பயன்படுத்த முடியாது. இது உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அல்லது குளுக்கோஸை உருவாக்குகிறது, அதனால்தான் பலர் நீரிழிவு நோய் "சர்க்கரை" என்று அழைக்கிறார்கள். நீரிழிவு நோய் பற்றி பொதுவாக நம்பப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை 1: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை உள்ள எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியாது

கட்டுக்கதை 1: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை உள்ள எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியாது

இது உண்மையல்ல. சர்க்கரை மற்றும் மாவுச்சத்து ஒவ்வொருவருக்கும் அன்றாட உணவில் தேவைப்படும் ஆற்றல் ஆதாரங்கள். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் மற்றும் மிகவும் இயற்கையான மற்றும் குறைவான பதப்படுத்தப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான, சமச்சீரான உணவில் சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை மிதமான அளவில் சேர்க்கலாம். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் சரியான உணவு முறைக்கு மருத்துவரை அணுகுவது நல்லது.

கட்டுக்கதை 2: பெரியவர்களுக்கு மட்டுமே டைப் 2 நீரிழிவு நோய் வரும்

கட்டுக்கதை 2: பெரியவர்களுக்கு மட்டுமே டைப் 2 நீரிழிவு நோய் வரும்

வயது என்பது ஒரு ஆபத்து காரணியாகும். வயதாகும்போது டைப் 2 நீரிழிவு நோயை உருவாகும் வாய்ப்பு வேகமாக அதிகரிக்கிறது. இருப்பினும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் குறைந்த உடல் செயல்பாடு காரணமாக அதிக எடை அல்லது பருமனான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டைப் 2 நீரிழிவு நோய் இளைய வயதினரிடையே வேகமாக அதிகரித்து வருகிறது.

கட்டுக்கதை 3: டைப் 2 நீரிழிவு கொழுப்புள்ளவர்களை மட்டுமே பாதிக்கிறது

கட்டுக்கதை 3: டைப் 2 நீரிழிவு கொழுப்புள்ளவர்களை மட்டுமே பாதிக்கிறது

அதிக எடை மற்றும் பருமனாக இருப்பது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை நிச்சயமாக ஏற்படுத்தும். இருப்பினும், அனைத்து அதிக எடை அல்லது பருமனான நபருக்கும் நீரிழிவு நோய் இருக்கும் என்று அர்த்தமில்லை. மேலும், அவர்களின் பிஎம்ஐ மற்றும் பிற காரணிகளின்படி சாதாரண எடையுள்ளவர்களுக்கும், எடை குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்படலாம்.

கட்டுக்கதை 4: நீரிழிவு நோயாளிகள் டயாபெடிக் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்

கட்டுக்கதை 4: நீரிழிவு நோயாளிகள் டயாபெடிக் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்

சர்க்கரை நோய் நிபுணர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீரிழிவு உணவைத் தவிர்க்க பரிந்துரைக்கிறது. இவை பொதுவாக 'நீரிழிவு' என்று பெயரிடப்பட்ட இனிப்புகள், அவை வழக்கமான சர்க்கரைக்குப் பதிலாக பிற இனிப்புகளைப் பயன்படுத்துகின்றன. டயாபெடிக் உணவு அடிக்கடி ஊக்குவிக்கப்படுவதில்லை, ஏனெனில் அது இன்னும் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கும் மற்றும் இந்த பொருட்கள் பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

 கட்டுக்கதை 5: நீரிழிவு நோயாளிகள் பார்வையற்றவர்களாகி கால்களை இழக்கிறார்கள்

கட்டுக்கதை 5: நீரிழிவு நோயாளிகள் பார்வையற்றவர்களாகி கால்களை இழக்கிறார்கள்

நீரிழிவு நோய், சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பார்வையிழப்பு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் மற்றும் கால்கள் துண்டிக்கப்படலாம். இருப்பினும், அனைத்து நீரிழிவு நோயாளிகளுக்கும் இது அவசியமில்லை. நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த அழுத்தம், குளுக்கோஸ், எடை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, புகைபிடிப்பதை நிறுத்தினால், சிக்கல்கள் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பார்வையிழப்பு மற்றும் உறுப்புகளைத் துண்டித்தல் ஆகியவை தடுக்கக்கூடிய விளைவுகளாகும். எந்தவொரு சிக்கலின் வளர்ச்சியையும் தவிர்க்க வருடாந்திர நீரிழிவு சுகாதார சோதனைகள் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetes Myths You Should Not Believe in Tamil

Check out the common myths and misconceptions about diabetes you should not believe.
Story first published: Friday, November 11, 2022, 18:08 [IST]
Desktop Bottom Promotion