For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? அப்ப சமையல்ல இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க...

சர்க்கரை நோயாளிகள் என்ன உணவை உண்கிறோம் என்பதை தெரிந்து உண்ண வேண்டும். தற்போது மார்கெட்டில் பல வகையான சமையல் எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. எந்த எண்ணெய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று தெரிவதில்லை.

|

Recommended Video

சர்க்கரை நோய் உடையவர்கள் இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க | Best Cooking Oil For Diabetes Patient

சமையல் என்று வரும் போது, அதில் எண்ணெய் முக்கிய பங்கை வகிக்கிறது. அதே சமயம் எண்ணெய்கள் நமது உடல் ஆரோக்கியத்திலும் பெரும் பங்காற்றுகிறது. இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் சமையலில் எந்த எண்ணெயைப் பயன்படுத்துவது என்று தெரியாமல் இருப்பர். ஏனெனில் தற்போது மார்கெட்டில் பல வகையான சமையல் எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. எனவே இவற்றில் எந்த எண்ணெய் நல்லது என்று தெரிவதில்லை.

Best Cooking Oil For Diabetes Patient

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஏராளம். மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தாலேயே பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவுகள் நேரடியாக இரத்த சர்க்கரை அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் என்ன உணவை உண்கிறோம் என்பதை நன்கு தெரிந்து உண்ண வேண்டும்.

MOST READ: தினமும் நைட் இத 1/4 டீஸ்பூன் சாப்பிட்டா, நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும் தெரியுமா?

இக்கட்டுரையில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பான சில சமையல் எண்ணெய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த எண்ணெய்கள் எவையென்று தெரிந்து, அவற்றை சமையலில் சேர்த்து பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனோலா எண்ணெய்

கனோலா எண்ணெய்

கனோலா எண்ணெய் என்பது ராப்சீட் தாவரங்களிலிருந்து பெறப்பட்ட தாவர அடிப்படையிலான எண்ணெய். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமில வகையைச் சேர்ந்த ஆல்பா-லினோலினிக் அமிலம் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இந்த எண்ணெயில் அவகேடோ மற்றும் ஆலிவ் பழங்களில் இருக்கும் ஆரோக்கியமான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளது. ஆய்வு ஒன்றில் கனோலா எண்ணெய் டைப்-2 சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.

MOST READ: உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வேகமா கரைக்கணுமா? அப்ப இதுல ஏதாவது ஒன்ன குடிங்க...

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆலிவ் ஆயில், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் உல்ல டைரோசோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தும் பொருளாக செயல்படுகிறது. அதுவும் பிரியாணி இலையை ஒருவர் உட்கொண்ட உடனே இரத்த சர்க்கரை அளவை கட்டுபாட்டிற்கு வந்துவிடும்.

ஆளிவிதை எண்ணெய்

ஆளிவிதை எண்ணெய்

ஆளிவிதையில் உள்ள ஒரு வகையான நார்ச்சத்து, செரிமானம் மெதுவாக நடைபெறச் செய்யும். இப்படி மெதுவாக செரிமானம் நடைபெறுவதால், க்ளுக்கோஸ் மெதுவாக இரத்தத்தில் வெளியிடப்பட்டு, சட்டென்று இரத்த சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும். ஆகவே ஆளிவிதை எண்ணெயை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தினால், அது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவும்.

MOST READ: நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கணுமா? அப்ப இத அதிகமா சாப்பிடுங்க...

வால்நட் எண்ணெய்

வால்நட் எண்ணெய்

வால்நட் எண்ணெயில் ட்ரைகிளிசரடுகள் அதிகமாக உள்ளது. அதாவது இந்த எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளின் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். ஆய்வு ஒன்றில், வால்நட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

MOST READ: தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க.. உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லுங்க...

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான லிக்னன்கள் ஏராளமான அளவில் உள்ளது. இந்த இரண்டும் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய சத்துக்களாகும். 2016 இல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அரிசி தவிடு எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவை டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்புக்கு நல்லது என்று கூறுகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான எண்ணெய்களை சர்க்கரை நோயாளிகள் தங்களின் சமையலில் பயன்படுத்தினால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். இருப்பினும், பயன்படுத்தும் முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Cooking Oil For Diabetes Patient

Here are some of the best cooking oil for diabetes patient. Read on to know more...
Story first published: Tuesday, October 8, 2019, 9:58 [IST]
Desktop Bottom Promotion