Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
சர்க்கரை நோயாளிகளின் பாத பிரச்சனைகளைப் போக்கும் டயாபெடிக் சாக்ஸ்!
நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படும் விதமாக, பாத பிரச்சனைகளை போக்குவதற்காக டயபெட்டிக் சாக்ஸ் என்னும் காலுறை சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
நீரிழிவு என்பது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் ஒரு வகை நாட்பட்ட கோளாறாகும். பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்கள் பல்வேறு இரத்த ஓட்ட கோளாறு மற்றும் நரம்பு தொடர்பான கோளாறுகளுடன் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பாதம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பாதங்களில் காயம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அபாயத்தை கூட்டுகிறது. ஆகவே நீரிழிவு மேலாண்மைக்கு ஒரு முக்கிய அங்கமாக பாதங்களுக்கான பராமரிப்பு கருதப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படும் விதமாக, பாத பிரச்சனைகளை போக்குவதற்காக டயபெட்டிக் சாக்ஸ் என்னும் காலுறை சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. இந்த காலுறை பாதங்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி பாதங்களில் எந்த ஒரு காயமும் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த காலுறை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவலாம்.

டயாபெடிக் சாக்ஸ் எவ்வாறு உதவுகிறது?
நாட்பட்ட நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு பாதங்களில் அதிக வியர்வை உண்டாகும். இந்த காலுறைகள் பாதங்களில் ஈரத்தன்மை இல்லாமல் பாதுகாத்து அவற்றை உலர்வாக வைத்து காயங்கள் உண்டாகாமல் தடுக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது பொதுவானது. இதனால் நரம்புகளில் உணர்திறன் அதிகரித்து உட்புற காயங்கள் உண்டாக வழிவகுக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த அபாயம் குறித்த உணர்வு இருப்பதில்லை. டயாபெடிக் காலுறைகள் மிகவும் மெத்தென்று இருப்பதால் பாதங்களுக்கு சௌகரியமாக இருந்து காயங்கள் உண்டாகும் அபாயம் தடுக்கப்படுகிறது. டயாபெடிக் காலணிகளுடன் அல்லது டயாபெடிக் பாத சிகிச்சையில் இந்த காலுறைகளை இணைத்துக் கொள்வது ஒரு சிறந்த யோசனையாகும்.

எல்லா நீரிழிவு நோயாளிகளும் இந்த காலுறைகளை அணிந்து கொள்ளலாமா?
இந்த காலுறைகள் சௌகரியமானது. ஆனால் காலுறைகளை எப்போதும் அணிந்து கொள்வது சௌகரியமானது அல்ல. பாத பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நோயாளிகள் இந்த காலுறைகள் மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் மிக நீண்ட பயணங்களில் மட்டுமே இதனை அணிந்து கொள்ளலாம். இந்த காலுறைகள் பாதங்களை உலர்வாக வைக்கும், வீக்கத்தை குறைக்கும் மற்றும் இரத்தம் உறைவதைத் தடுக்கும்.

டயாபெடிக் காலுறைகளை யாரெல்லாம் அணிந்து கொள்ளலாம்?
* ஈரப்பதம் அல்லது வியர்வை அதிகம் உள்ள பாதங்கள் கொண்டவர்கள்
* கடந்த காலங்களில் நரம்பு சேதங்களால் பாதிக்கப்பட்டவர்கள்
* பூஞ்சை தொற்று அல்லது கொப்பளங்களால் பாதிக்கப்பட்டவர்கள்
ஆகியோருக்கு டயாபெடிக் காலுறைகள் சிறந்த தீர்வைத் தரும். கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த உறைவு உண்டாகாமல் தடுக்க இந்த காலுறைகள் உதவும்.

டயாபெடிக் காலுறைகள் எப்படி நன்மை தருகின்றன?
இவற்றை வழக்கமான காலுறைகளுடன் இணைத்து குழப்பம் கொள்ள வேண்டாம். இவை வேறு விதத்தில் தயாரிக்கப்படுகின்றன. டயாபெடிக் காலுறைகள் பாதங்களுக்காகவே சிறப்பான முறையில் தயாரிக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளிடைய பொதுவாக இருக்கும் எலும்பு முறிவு பாதிப்பையும் தடுக்க உதவுகிறது. டயாபெடிக் காலுறைகளின் தனித்தன்மை பற்றி இப்போது காணலாம்.

ஈரப்பதம் போக்கும் பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது
வியர்வை ஊறாமல் ஆவியாகும் பொருட்கள் கொண்டு இந்த காலுறைகள் தயாரிக்கப்படுகின்றன. வியர்வை காரணமாக பூஞ்சை தொற்று மற்றும் நரம்பு சேதம் ஏற்படுவதால் இந்த அம்சம் மிகவும் இன்றியமையாததாகிறது. உங்கள் பாதங்களில் அதிக வியர்வை உண்டாகும் பிரச்சனை இருந்தால் இந்த காலுறைகள் உங்களுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்கும்.

எலாஸ்டிக் அல்லாத மற்றும் தடையற்றதாக உள்ளது
பொதுவாக காலுறைகளை கழட்டியவுடன் அதன் எலாஸ்டிக் தன்மை காரணமாக இரத்த உறைவின் காரணமாக உண்டான கோடுகளை நம்மால் காண முடியும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு அபாயத்தை உண்டாக்கும். காரணம், எலாஸ்டிக் இரத்த ஓட்டத்தை தடுத்து, இரத்த சர்க்கரை அளவில் பாதிப்பை உண்டாக்கும். ஆனால் இந்த காலுறைகள் தடையற்றதாக இருந்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

மருந்து துணி
இந்த காலுறைகள் கம்பளி அல்லது மூங்கில் கொண்டு தயாரிக்கப்படுவதால் மென்மையாகவும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இதனால் பாதங்கள் மென்மையாகவும், உராய்வு இல்லாமலும், கொப்புளங்கள் உண்டாகாமல் தடுக்கப்பட்டு, காயங்களில் இருந்து பாதுகாக்கிறது. சில காலுறைகள் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட வெள்ளி அல்லது தாமிரத்தால் உட்செலுத்தப்பட்ட கம்பளிகளால் தயாரிக்கப்படுகிறது. இதனால் பாத துர்நாற்றம் தடுக்கப்படுகிறது.

பேட் (Pad) செய்யப்பட்ட காலுறை
வயதானவர்களுக்கு, பேட் (Pad) செய்யப்பட்ட நீரிழிவு சாக்ஸ் சிறந்த பலன் தருகின்றன, இவை சிலிகான் பட்டைகள் அல்லது ஜெல் அல்லது அடர்த்தியான துணியை கொண்டுள்ளதால் உள்ளங்கால்களில் கூடுதல் வசதியை அளிக்கின்றன. இதனால் அவர்கள் நடந்தாலும், நீண்ட நேரம் நின்றாலும் அவர்கள் பாதம் காயம் அடைவதில்லை.
உங்கள் குடும்பத்தில் நீரிழிவு நோயாளிகள் இருந்து அவர்களுக்கு பாத பிரச்சனைகள் இருந்தால் அவர்களுக்கு ஒரு ஜோடி நீரிழிவு காலுறைகளை பரிசாக தாருங்கள். இதனால் அவர்கள் வியர்வை, அரிப்பு மற்றும் காயங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications
