Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இயற்கையாகவே இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கான 5 எளிய வழிகள்!
நீங்கள் அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்றால் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இயற்கையாகவே இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க நமக்கு சில வழிகள் இருக்கின்றன.
மனித உடலில் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் மிகவும் இன்றியமையாத ஒன்று. இந்த ஹார்மோன் நிறைய உடல் செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பதோடு நமது உடலில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுகிறது. ஒரு ஆரோக்கியமான நபரின் உடலில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவே நீரிழிவு நோயாளிகள் என்றாலோ அல்லது டயாபெட்டீஸ் நோயாளி என்றாலோ, அதிகளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படும்.

அதிகப்படியான இன்சுலின் சுரப்பால் டைப் 2 டயாபெட்டீஸ், உயர் இரத்த அழுத்தம், கல்லீரலில் கொழுப்பு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி குழாய்கள் கடினமாகி இதய நோய்கள் வரக் கூட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே நீங்கள் அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்றால் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இயற்கையாகவே இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க நமக்கு சில வழிகள் இருக்கின்றன. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.

இலவங்கப்பட்டையை உணவில் சேருங்கள்
உங்கள் உணவுப் பழக்கத்தில் சிறிதளவு இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இன்சுலின் சுரப்பை சமநிலைப்படுத்தும். இலவங்கப்பட்டை இன்சுலின் சுரப்பை குறைக்கிறது. எனவே இனிமேல் நீங்கள் எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் சிறிது இலவங்கப்பட்டையை தூவி உண்ணலாம். உங்கள் சுவையும் கூடும், அதே நேரத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் உள்ள சீரற்ற இன்சுலின் ஹார்மோன் அளவை சீராக்குகிறது. ஆப்பிள் சீடர் வினிகர் 100-க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்க வல்லது. அதிகப்படியான இன்சுலின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டால் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளரில் கலந்து கொள்ளுங்கள். இதை தினமும் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் எடுத்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்தை அதிகம் எடுங்கள்
நீங்கள் மருத்துவரிடம் செல்லாமல் இருக்க நினைத்தால் நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து இல்லாத உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவு இரத்தத்தில் சடாரென்று அதிகரித்து விடும். இதுவே நீங்கள் நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது வேகமாக செரிமானம் நடக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை சத்து வெளிப்படும். எனவே டயாபெட்டீஸ் நோயாளிகள் இயற்கையாகவே நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்ளும் போது, இரத்த சர்க்கரை அளவை குறைத்து விடலாம்.

குறைந்த கார்போஹைட்ரேட் உணவை சாப்பிடுங்கள்
உடலில் சரியான அளவு இன்சுலின் ஹார்மோன் சுரப்பு வேண்டும் என்றால் குறைந்த கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கார்பஸ் உணவுகள் இரத்த சர்க்கரை அளவை சடாரென்று அதிகரித்து விடும். எனவே ஒழுங்கற்ற இரத்த சர்க்கரை இருந்தால், குறைந்த கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

சுறுசுறுப்பாக இருங்கள்
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றால் உங்கள் உடம்பை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். எனவே ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காராமல் அடிக்கடி உடற்பயிற்சி செய்து வாருங்கள். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கும் போது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.



Click it and Unblock the Notifications











