Just In
- 5 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 17 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 19 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- Movies
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Sports
ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...
பாகற்காய் என்றாலே எல்லோரும் முகத்தை சுழித்துக் கொள்கிறோம். "யப்பா... கசப்பு" என்று ஏதோ அதைக் கடித்து விட்டதுபோல ஃபீலிங் கொடுப்போம். ஆனால், பாகற்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று அனைவருக்குமே தெரியும். ஆகவேதான், எந்த விதத்திலாவது நம் சாப்பாட்டில் பாகற்காயை சேர்த்து விட அம்மாக்களும் பாட்டிகளும் முயற்சிக்கிறார்கள்.
நம்முடைய கல்லீரலை அது இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. பாகற்காயை கொண்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ, மருத்துவ குணம் கொண்ட மூலிகை பானம் ஆகும்.

பாகற்காய்
பாகற்காய் குழம்பு, பாகற்காயை சிறிதாக நறுக்கிச் செய்யும் பொறியல், பாகற்காய் கூட்டு என்று வித்தியாசமாக செய்து தருவார்கள். ஆனால், என்னதான் செய்தாலும் பாகற்காயின் இயல்பான கசப்பே நம்மை காததூரம் ஓட வைக்கும். கசப்பை சகித்துக் கொண்டு சாப்பிட்டு விடுமளவுக்கு நம் குடும்பங்களில் நன்றாகவே பாகற்காயை கொண்டு சமையல் செய்கின்றனர்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒழுங்குபடுத்தும் இயல்பு, பாகற்காயின் தனிச்சிறப்பாகும். நம்முடைய கல்லீரலை அது இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. பாகற்காயை கொண்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ, மருத்துவ குணம் கொண்ட மூலிகை பானம் ஆகும்.
MOST READ: உங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா? இத மட்டும் போடுங்க போதும்...

பாகற்காய் டீ
உலர்ந்த பாகற்காயை சீவி, அந்த துண்டுகளை நீரில் போட்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ, மருத்துவ குணம் கொண்டதென கூறி விற்கப்படுகிறது. பாகற்காய் டீ தயாரிப்பதற்கான பொடி அல்லது சாறு இப்போது கடைகளிலும் கிடைக்கிறது. பாகற்காய் சாற்றினை போல் அல்லாமல் பாகல் இலை, காய் அல்லது விதை எதைக்கொண்டு வேண்டுமானாலும் பாகல் டீயை தயாரித்துக் கொள்ள முடியும்.

என்ன செய்யும் பாகற்காய் டீ
சர்க்கரை நோய்க்கு நிவாரணி: பாரம்பரியமாகவே இயற்கை முறையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பாகற்காயை பயன்படுத்தி வருகின்றனர். நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு பாகற்காய் டீயும் நல்ல பலன்களை கொடுக்கக்கூடும்.

கொலஸ்ட்ராலை குறைக்க
பாகற்காய் அழற்சியை தடுக்கும் இயல்பு கொண்டது. ஆகவே, இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும். கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு பிரச்னை உள்ளவர்கள் பாகற்காய் டீ அருந்தலாம்.
MOST READ: எகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா?

கல்லீரலை சுத்தப்படுத்த
கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையை அகற்றக்கூடிய குணம் பாகற்காய் டீக்கு உள்ளது. அஜீரண பிரச்னையை அகற்றி, குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் இது உதவும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு
பாகற்காயில் உள்ள வைட்டமின் 'சி' நோய் தொற்றுக்கு எதிராக போரிடக்கூடியது. பாகற்காய் டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பார்வை திறன் உயர
பாகற்காய் டீ, கண்களின் பார்க்கும் திறனை உயர்த்தக்கூடியது. பாகற்காயில் உள்ள வைட்டமின் 'ஏ', பீட்டா கரோட்டினாக உடலில் மாற்றம் பெறும். பீட்டா கரோட்டின் கண் பார்வையை அத்தியாவசியமானது.

எப்படி தயாரிப்பது?
மிக எளிய முறையில் வீட்டிலேயே பாகற்காய் டீ போட்டுக்கொள்ளலாம். பாகற்காயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி அதை நன்கு உலர வைத்து அல்லது பச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுத்தமான நீர் மற்றும் இயற்கை சுவையூட்டியாக தேன் அல்லது அகாவ் என்னும் நீல கற்றாழை சாறும் தேவை. காய வைத்த பாகல் இலைகளை கொண்டு டீ தயாரிக்கலாம். ஆனால், பாகற்காய் எளிதாக கிடைக்கக்கூடியது. ஆகவே, காயை பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை
பாத்திரம் ஒன்றில் நீரை கொதிக்க வைக்கவும். உலர்ந்த பாகற்காய் சீவல்களை நீரினுள் போட்டு பத்து நிமிடத்திற்கு கொதிக்க விட வேண்டும்; இளஞ்சூடாகவும் வைக்கலாம். இப்படிச் செய்வதால் பாகற்காயிலுள்ள சத்துக்கள் நீரினுள் இறங்கும். அடுப்பை விட்டு பாத்திரத்தை இறக்கி சிறிது நேரம் ஆற வைக்கவும்.
பிறகு வடிகட்டி இன்னொரு பாத்திரத்தில் அல்லது கப்களில் எடுத்துக்கொள்ளவும். தேன் அல்லது அதுபோன்ற இயற்கை இனிப்பூட்டியை இனிப்புக்காகவும் நறுமணத்துக்காகவும் சேர்க்கவும். பெரும்பாலும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவே பாகற்காய் டீ பருகுவதால், இனிப்புக்காக எதையும் சேர்க்காமல் இருப்பது கூடுதல் நன்மை தரும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு இந்த டீ எதிர்மறை விளைவுகளை தரக்கூடும். ஆகவே, உங்களுக்கு சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு குடிப்பது நல்லது.