For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயை சர்க்கரை வள்ளிக்கிழங்கு கட்டுப்படுத்துமாம்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க...

|

பலவகையான நோய்கள் நம்மை சுற்றி இருந்தாலும், அவற்றில் ஒரு சில நோய்களே மிக கொடிய நோயாக கருதப்படுகிறது. இந்த வரிசையில் முதன்மையான இடத்தில் இருக்கிறது சர்க்கரை நோய். சர்க்கரை நோய் என்ற பெயரை கேட்டவுடனே பலருக்கு அதை பற்றிய ஒரு பயம் இருக்க தான் செய்யும். நோயின் தாக்கம் அதிகமாகி கொண்டே போவதில் இந்த சர்க்கரை நோய் முதல் இடத்தில் உள்ளது.

Why Should You Eat More Sweet Potatoes To Manage Blood Sugar

சர்க்கரை நோயிற்கு நிறைய மருந்துகள் இருந்தாலும், நாம் சாப்பிட கூடிய உணவே மருந்தாக இருப்பதுதான் இதில் சிறப்பு. அந்த வகையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுமாம். எப்படி இவை உதவும் என்பதை நாம் இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொடிய நோயா..?

கொடிய நோயா..?

இன்றைய பலரின் நடுக்கத்துக்கு காரணமாக இருப்பது இந்த சர்க்கரை நோய் தான். பத்தில் 6 பேருக்கு சர்க்கரை நோய்கான அறிகுறிகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. நோய்கள் இன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் காலம் முற்றிலுமாக மலையேறி போய், நோய்கள் மட்டுமே வாழ்வு' என்ற காலத்தை நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

உடலின் மெட்டபாலிசத்தை உருகுலைப்பதில் சர்க்கரை நோயிற்கு முக்கிய பங்கு உள்ளது. சர்க்கரை நோயை பார்த்து இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு பயப்படுவதில்லை. இதில் பலவகையான நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். இதை சர்க்கரை நோயாளிகள் அவர்களின் டயட்டில் சேர்த்து கொள்வது நலம் தருமாம்.

உருளைக்கிழங்கு vs சர்க்கரை வள்ளிக்கிழங்கு

உருளைக்கிழங்கு vs சர்க்கரை வள்ளிக்கிழங்கு

பொதுவாக உருளைக்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது என கூறுவார்கள். இதற்கு முதல் காரணம், இவை உடலின் சர்க்கரை அளவை அதிகரித்து விடுமாம். ஆனால், உண்மையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதற்கு மாறாக செயல்படும்.

ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு..?

ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு..?

இதில் பல வகையான சத்துக்கள் உள்ளதாம். 1 கப் வள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டசத்துக்கள் இவையே...

புரதம் 46.9kJ

நார்சத்து 26%

வைட்டமின் எ 769%

வைட்டமின் சி 65%

கால்சியம் 8%

இரும்புசத்து 8%

மெக்னீசியம் 145

பொட்டாசியம் 27%

MOST READ: ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் 12 அற்புத உணவுகள் இதுவே..!

வள்ளிக்கிழங்கின் மகிமை...

வள்ளிக்கிழங்கின் மகிமை...

வள்ளிக்கிழங்கு பல வகையான நன்மைகளை கொண்டது. குறிப்பாக இதனை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்துவர்களாம். இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்து கொள்ள பெரிதும் உதவுமாம். மேலும், இவை adiponectin என்ற ஹார்மோனை நன்கு சுரக்க செய்து சர்க்கரையின் அளவை செம்மைப்படுத்தும்.

எப்படியெல்லாம் பயன்படுத்துவது..?

எப்படியெல்லாம் பயன்படுத்துவது..?

பொதுவாக இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை நாம் வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால், இதனை வேறு சில வகையிலும் நாம் பயன்படுத்தலாமாம். குறிப்பாக ஸ்மூத்தீ போன்று இதனை செய்து சாப்பிடாமல்.

தேவையானவை :-

வாழவைப்பழம் பாதி

யோகர்ட் 1 ஸ்பூன்

இளவகங்க பொடி சிறிது

இஞ்சி சிறிது

செய்முறை :-

செய்முறை :-

முதலில் வள்ளிக்கிழங்கை வேக வைத்து கொண்டு, அவற்றுடன் வாழை பழத்தை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு யோகர்ட் மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்து கொள்ளவும். கடைசியாக இதனை மீது இலவங்க பொடியை தூவி குடிக்கலாம்.

சாலட் செய்யலாமா..?

சாலட் செய்யலாமா..?

இந்த வள்ளிக்கிழங்கு சாலடும் மிகவும் நன்றாக இருக்கும். இதனை சர்க்கரை நோயாளிகளின் முக்கிய உணவாக எடுத்து கொள்ளலாம்.

தேவையனாவை :-

முளைகட்டிய கீரை 1/2 கப்

வள்ளிக்கிழங்கு 1

கருப்பு பீன்ஸ் 1/2 கப்

MOST READ: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை... பெருமாளின் அருள்பெற எந்தெந்த ராசி என்னென்ன செய்ய வேண்டும்?

செய்முறை :-

செய்முறை :-

முதலில் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துண்டு துண்டாக நறுக்கி கொண்டு, பிறகு அவற்றுடன் வேகவைத்த கருப்பு பீன்ஸ் மற்றும் முளைக்கீரையையும் சேர்த்து கொள்ள வேண்டும். கடைசியாக சிறிது உப்பை அதன் மீது தூவி நன்றாக, நன்கு கிளறி அதனை சாப்பிடலாம்.

முக்கிய குறிப்பு:-

சர்க்கரை வள்ளிக்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் சர்க்கரையின் அளவு வேறுபாடும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Should You Eat More Sweet Potatoes To Manage Blood Sugar

The American Diabetes Association has actually dubbed the nutritional tuber as a superfood for diabetics and vouched for benefits of sweet potato.
Desktop Bottom Promotion