For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஆயுர்வேத பாத்திரத்தில் நீர் குடித்தால் சர்க்கரை நோய்க்கு தீர்வு கிடைக்கும்..!

|

மனிதனின் நாகரிகம் வளர வளர, அவற்றுடன் சேர்த்தே பல வித நோய்களும் வளர ஆரம்பிக்கிறது. என்னதான் அளவுக்கு அதிகமாக அறிவியலின் வளர்ச்சி இருந்தாலும் இத்தகைய வகையான நோய்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. பரிணாம வளர்ச்சி பெரும்போதே நோய் கிருமிகளின் சக்தியும் அதிகம் ஆகிவிட்டது. இத்தகைய கிருமிகள் தான் மனிதனின் உடலை முழுமையாக ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்து விடுதலை பெற தினத்தினமும் பல வகையான மாத்திரைகளை நாம் உண்டு கொண்டிருக்கின்றோம்.

role of copper in diabetes

ஒரு பக்கம் நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்க, மறுபக்கம் நோய்களுக்கான அரசியல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதில் தற்போது முதல் இடத்தில் இருப்பது சர்க்கரை நோய்தான். 1980 எடுத்த சர்வேவை விட 2014-லில் 8.5 % சர்க்கரை நோயாளிகளின் அளவு உயர்ந்துள்ளது. இவற்றின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். அந்த வகையில் தாமிர பாத்திரத்தில் குடித்தால் சர்க்கரை நோய்க்கு ஒரு தீர்வாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கிறது. எந்த வகையில் இவை உதவுகின்றன என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரையின் அளவே முக்கியம்...!

சர்க்கரையின் அளவே முக்கியம்...!

இப்போதெல்லாம் விலை வாசி ஏறுவதை காட்டிலும், சர்க்கரையின் அளவு ஏறிவிடுமோ என்ற பயம்தான் பல மக்களின் மனதில் ஓடி கொண்டிருக்கிறது. ஒரு சராசரி மனிதனுக்கு 100 mg/dl என்ற அளவில் சர்க்கரை ரத்தத்தில் இருக்க வேண்டும். ஆனால் இது 100 mg/dl விட அதிகமாகி விட்டால் நீங்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கபட்டுள்ளீர்கள் என்பதற்கான அறிகுறியே. சர்க்கரையின் அளவை கட்டாயம் அடிக்கடி பரிசோதித்து கொள்ள வேண்டும். இல்லையேல், இது உயிருக்கே ஆபத்தை தந்து விடும்.

நோயின் அறிகுறிகள்..

நோயின் அறிகுறிகள்..

இது மிகவும் அதிர்ச்சியான தகவல்தான். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு விட்டால், கூடவே இந்த வகையான நோய்களையும் உடலில் ஏற்க நேரும். இவற்றின் வழியே உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாக அறியலாம்.

- இதய நோய்

- கிட்னி கோளாறுகள்

- பார்வை குறைபாடு

- பாதங்களில் நோய்

- நரம்பு தளர்ச்சி

- பக்க வாதம்

எனவே இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள்.

நீர்தான் முதல் ஆதாரம்..!

நீர்தான் முதல் ஆதாரம்..!

மனித உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீரே. சராசரியாக 60 சதவீதத்திற்கும் மேல் நமது உடலில் நீர் தான் உள்ளது. இத்தகைய முதன்மை வாய்ந்த தண்ணீர், நமது உடலுக்கு பல நன்மைகளை தர வல்லது. தினமும் அதிக நீர் பருகா விட்டால், அது கட்டாயம் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும். உடலில் நீர் அளவு குறைந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிய விளைவை ஏற்படுத்தும்.

தாமிரம் தனித்தன்மை வாய்ந்தது..!

தாமிரம் தனித்தன்மை வாய்ந்தது..!

நம் பூமியில் கிடைக்கும் பல்வேறு தாது பொருட்களில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இயற்கை தாய் மிகவும் அதிக ஆற்றல் பெற்றவர். அவர் நம் பூமிக்கு கொடுத்த வரங்கள் ஏராளம். அதில் ஒன்றுதான் இந்த தாமிரமும். இதில் பல வகையான நன்மைகள் உள்ளது. பொதுவாக தாமிர பாத்திரத்தில் நீர் அருந்தினால், நீரில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கும். மேலும் உடலில் எந்தவித கிருமிகளும் சேராமல் பார்த்து கொள்ளும்.

தாமிரமும் சர்க்கரை நோயும்..!

தாமிரமும் சர்க்கரை நோயும்..!

சர்க்கரை நோயாளிகளுக்கு எப்படி இந்த தாமிரம் உதவும் என்ற கேள்வி, உங்களுக்கு சற்றே வியக்கத்தக்கதாக இருக்கும். இது உண்மையும் கூட. தாமிர பாத்திரத்தில் சர்க்கரை நோயாளிகள் நீர் அருந்தினால், சர்க்கரை நோய்களுக்கான பின் விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம். அதாவது, பொதுவாக சர்க்கரை நோயாளிகள் நீரிழிவு நோயுடன் சேர்த்து பலவித நோய்களாலும் பாதிபக்கப்படுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கு ஏற்படும் தோல் வியாதிகள், குடல் வீக்கம், அலர்ஜிகள் போன்றவற்றை மெல்ல குணமாக்கும்.

ஆயுர்வேதமும் தாமிரமும்..!

ஆயுர்வேதமும் தாமிரமும்..!

மிகவும் பழமையான மருத்துவ முறைகளில் முதன்மையானது ஆயுர்வேதம். இதில் கூட பல வகையான மருத்துவத்திற்கும் தாமிர பாத்திரங்களையே உபயோகிப்பார்கள். தாமிர நீரை "தாமிர ஜல" என்றே மருத்துவ குறிப்புகள் கூறுகிறது. இதில் கூட தினமும் தாமிர பாத்திரத்தில் நீர் அருந்தினால் எண்ணற்ற பலன்கள் உடலுக்கு ஏற்படும் என்றே கூறியுள்ளனர். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

முன்னோர்களுக்கும் தாமிரத்திற்கும் உள்ள பந்தம்..!

முன்னோர்களுக்கும் தாமிரத்திற்கும் உள்ள பந்தம்..!

பல ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் இந்த தாமிர பாத்திரத்தில் தான் நீர் அருந்தினார்கள். இதுவே அவர்கள் நீண்ட நாட்கள் நோயின்றி வாழ வழி செய்தது. அத்துடன் தினமும் இதில் நீர் அருந்துவதால் உடலுக்கு தேவையான காப்பர் அளவு சீராக கிடைத்து விடும். இதனால் உடலில் காப்பர் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் மிக குறைவு.

நீண்ட இளமைக்கு தாமிரம்..!

நீண்ட இளமைக்கு தாமிரம்..!

பொதுவாக நீண்ட இளமை வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். இந்த ஆசையை நிறைவேற்றுகிறது தாமிர நீர். தினமும் தாமிர பாத்திரத்தில் நீர் அருந்தினால் அது உங்கள் உடல் செல்களை புத்துணர்வுடன் வைத்து இளமையாக வைக்க செய்யும். மேலும் உங்கள் சருமத்தை பொலிவுடன் மாற்றும்.

புற்று நோய்க்கு உதவுமா..?

புற்று நோய்க்கு உதவுமா..?

தாமிர பாத்திரத்தில் தினம் நீர் குடித்தால் அது புற்றுநோய் வராமல் தடுக்கும். தாமிரத்தில் உள்ள அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், உடலில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பாதுகாக்கும். மேலும் உடலில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அத்தனையும் இது சரி செய்ய வல்லது.

ரத்த சோகைக்கு தாமிரம்..!

ரத்த சோகைக்கு தாமிரம்..!

பல பெண்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை இந்த ரத்த சோகைதான். ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க, இரும்புடன் சேர்ந்து இந்த தாமிரமும் உதவுகிறது. ரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதால் கட்டாயம் ரத்த சோகை பிரச்சினை இல்லாமல் பெண்கள் நலமாக வாழலாம்.

இது போன்ற பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்து எப்போதும் தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Diabetics Can Benefit from Drinking Copper Treated Water

Based on various studies conducted over the last few decades it has been established that copper can help with the prevention as well as the treatment for several diseases
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more