For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோய் இருந்தாலும் அதைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு எப்படி நீண்ட ஆளுயுடன் வாழலாம் என்று இந்த கட்டுரையில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

|

இந்தியாவில் மட்டும் எவ்வளவு நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள் தெரியுமா?. சர்வதேச நீரிழிவு நோய் மையத்தின் 2017 ஆம் ஆண்டில் கூறிய கருத்துப் படி இந்தியாவில் மட்டும் 72,946,400 பேர்கள் நீரிழிவு நோய் களால் பாதிப்படைந்துள்ளனர்.

how can you live a long and healthy life with diabetes

இதுமட்டுமல்ல 2030 ஆம் ஆண்டில் இறப்பை ஏற்படுத்தும் நோயில் நீரிழிவு நோய் ஏழாவது இடத்தை பிடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. எனவே தான் பெருகி வரும் டயாபெட்டீஸ் நோயை நம்மாலால் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. ஆனால் நமது வாழ்க்கையை சில வழிமுறைகளின் மூலம் ஆரோக்கியமாக மாற்ற இயலும். இதன் மூலம் உங்கள் டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைத்து நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும். வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயாபெட்டீஸ் என்றால் என்ன?

டயாபெட்டீஸ் என்றால் என்ன?

நமது உடலில் உள்ள கணையம் தான் இன்சுலின் சுரப்பை செய்கிறது. இந்த கணையம் போதுமான இன்சுலினை சுரக்காவிட்டாலும், சுரந்த இன்சுலினை நமது உடல் சரி வர பயன்படுத்த விட்டாலும் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து விடுகிறது. இதுவே நீரிழிவு நோய் என்கிறோம். உயர் இரத்த சர்க்கரை அதாவது ஹைமர்கிளைசிமியா நமது உடல் உறுப்புகளையும் ஏன் இரத்த குழாய்கள், நரம்புகள் எல்லாவற்றையும் பாதிக்க ஆரம்பித்து விடும்.

காரணங்கள்

காரணங்கள்

முதலில் நமது கணையம் நமக்கு போதுமான இன்சுலினை சுரக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் கணைய செல்கள் தான் இன்சுலினை சுரந்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை யை செல்களுக்கு அனுப்புகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் மாற்றம் ஏற்படும் போது நீரிழிவு நோய் உண்டாகிறது.

டைப் 1 டயாபெட்டீஸ்

டைப் 1 டயாபெட்டீஸ்

வகைகள்

நீரிழிவு நோயில் நான்கு வகைகள் உள்ளன

டைப் 1 டயாபெட்டீஸ்

நமது உடல் போதுமான இன்சுலின் சுரப்பை சுரக்காவிட்டால் இந்த வகை டயாபெட்டீஸ் உண்டாகும். நமது உடலில் உள்ள கார்போஹைட்ரேட் குளுக்கோஸ் ஆக மாற்றப் பட்டு உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்தை எடுத்து தான் செல்கள் ஆற்றலை பெறுகிறது. இப்பொழுது போதுமான இன்சுலின் இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடும். இந்த வகை டைப் 1 டயாபெட்டீஸ் நமது வாழ்நாளில் 20 வருடங்களை குறைத்து விடுகிறது என்று லண்டன் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டைப் 2 டயாபெட்டீஸ்

டைப் 2 டயாபெட்டீஸ்

இந்த டைப் 2 டயாபெட்டீஸில் நமது உடல் சுரக்கின்ற இன்சுலினை சரியாக பயன்படுத்திக் கொள்ளாது. நமது கணையம் போதுமான இன்சுலினை சுரந்தாலும் அது நமது உடல் பயற்படுத்தாததால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடுகிறது. இந்த வகை டைப் 2 டயாபெட்டீஸ் நமது வாழ்நாளில் 10 வருடங்களை குறைத்து விடுகிறது என்று லண்டன் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ப்ரீ டயாபெட்டீஸ்

ப்ரீ டயாபெட்டீஸ்

டைப் 2 டயாபெட்டீஸ் உடையவர்களுக்கு ப்ரீ டயாபெட்டீஸ் இருக்கும். இவர்களின் இரத்த சர்க்கரை அளவு இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும். இது தான் ப்ரீ டயாபெட்டீஸ் நிலை. இதனால் இரத்த ஓட்ட பாதையில், இதயத்தில் பாதிப்பு ஏற்படும்.

கர்ப்ப கால நீரிழிவு நோய்

கர்ப்ப கால நீரிழிவு நோய்

இந்த நீரிழிவு நோய் கர்ப்ப காலத்தில் அல்லது குழந்தை பிறந்த பிறகு ஏற்படும். இந்த பாதிப்பு கர்ப்ப காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

தீவிர பசி

உடல் எடை அதிகரித்தல்

அடிக்கடி தாகம் எடுத்தல்

கண் பார்வை மங்குதல்

எரிச்சல்

சோர்வு

காயங்கள் ஆறாமல் இருத்தல்

சரும மற்றும் ஈஸ்ட் தொற்று

பற்சொத்தை

கால் மற்றும் கைகளில் நமநமப்பு, சுருக்கென்று வலி ஏற்படுதல்

ஆண்களில் பாலியல் செயலிழப்பு ஏற்படுதல்.

அபாய விளைவுகள்

அபாய விளைவுகள்

பெரியவர்கள் சர்க்கரை நோயால் பாதிப்படைந்தால் இதயம் செயலிழப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, காலில் நரம்புகள் பாதித்தல், கால் அல்சர், தொற்று, டயாபெட்டிக் ரெட்டினோபதி என்ற கண் பார்வை குறைபாடு போன்றவை ஏற்படுதல்.

வழிமுறைகள்

வழிமுறைகள்

டயாபெட்டீஸ் பற்றிய விழிப்புணர்வு வகுப்பறைக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

டயாபெட்டீஸ் பற்றி உங்களுக்கு முழு விவரம் தெரியும் போது அதன் அறிகுறிகளை அறிந்து அதை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும்.

உங்கள் ஏபிசி யை தெரிந்து கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி (ஏ1சி, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்) அளவை அறிந்து கொள்ளுங்கள். இந்த மூன்றில் ஏற்படும் மாற்றம் உங்களுக்கு பக்க வாதம், இதயம் செயலிழப்பு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இரத்த பரிசோதனை

இரத்த பரிசோதனை

ஏ1சி இரத்த பரிசோதனை உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அறிய உதவுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என அடிக்கடி பரிசோதித்து கொள்ளுங்கள். இதன்மூலம் இரத்த சர்க்கரை அளவு உங்கள் உடல் உறுப்புகளை பாதிக்காமல் காக்க முடியும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

டயாபெட்டீஸ் நோயாளிகள் கண்டிப்பாக அவர்களது இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். இது பக்கவாதம், இதயம் செயலிழப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

எச்டிஎல் என்ற நல்ல கொலஸ்ட்ரால் அளவையும் எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் பரிசோதித்து கொள்ளுங்கள். கெட்ட கொழுப்புகள் இரத்த குழாய்களில் படிந்து ஹார்ட் அட்டாக் அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தி விடும்.

மன அழுத்தத்தை விடுங்கள்

மன அழுத்தத்தை விடுங்கள்

மன அழுத்தம் உங்களின் இரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும். எனவே மூச்சுப் பயிற்சி உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மன நல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். நண்பர்கள், உறவு களுடன் நேரத்தை செலவிடுங்கள். மன அழுத்தம் குறையும்.

டயாபெட்டீஸ் மாத்திரைகளை சரியாக எடுத்து வாருங்கள்

பாதங்களில் எதாவது காயம், வீக்கம், கொப்புளங்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கி பற்கள், ஈறுகள் எல்லாவற்றையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். புகைப்பிடிப்பதை விட்டு விடுங்கள்.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

மருத்துவரிடம் ஆலோசித்து ஆரோக்கியமான உணவுகளை எடுங்கள். நார்ச்சத்து உணவுகளான பிரட், க்ரேக்கர்ஸ், முழுதானியங்கள், அரிசி போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்.

குறைந்த கலோரி உணவுகள், டிரான்ஸ் கொழுப்புள்ள உணவுகள், சேச்சுரேட்டேடு கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை போன்ற உணவுகளை தேர்ந்தெடுங்கள்.

ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.

பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால், சீஸ் போன்றவற்றை உண்ணுங்கள்.

சாப்பிடும் போது தட்டில் பாதியளவு பழங்கள், காய்கறிகளும், 1/4 பங்கு முழு தானியங்கள், பழுப்பு அரிசி, தோலில் லாத சிக்கன் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்.

சுறுசுறுப்பாக செயல்படுவது எப்படி

சுறுசுறுப்பாக செயல்படுவது எப்படி

நிறைய போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மூன்று தடவை 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

யோகா, தோட்ட பராமரிப்பு மேற்கொண்டு தசைகளை வலுவாக வைத்து கொள்ளுங்கள். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு தடவையும் மருத்துவரிடம் செல்லும் போது உங்கள் எடை, இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், பாத பராமரிப்பு, கண் பரிசோதனை போன்றவற்றை பரிசோதித்து கொள்ளுங்கள். கொலஸ்ட்ரால், இரத்த, சிறுநீரக பரிசோதனை செய்யுங்கள். வருகின்ற ரிசல்ட்டை பொருத்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

டயாபெட்டீஸ் வராமல் தடுப்பது எப்படி

டயாபெட்டீஸ் வராமல் தடுப்பது எப்படி

நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கம் டயாபெட்டீஸ் ஏற்படாமல் தடுக்கும். கார்போஹைட்ரேட் குறைவான உணவுகள், காய்கறிகள், பழங்கள், சிக்கன், குறைந்த கொழுப்பு இறைச்சி, முழு தானியங்கள் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்.

இது போக சைக்கிளிங், நடைபயிற்சி, யோகா, ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்

சரியான நேரத்தில் மருந்துகளை சாப்பிடுங்கள்

சரியாக நேரத்திற்கு நேரம் சாப்பிடுங்கள். இடை இடையே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எடுத்து கொள்ளுங்கள். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how can you live a long and healthy life with diabetes

In this article, we will write on how to live a long and healthy life with diabetes.
Desktop Bottom Promotion