Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
சர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்
சில பழங்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீர்சத்து நிறைந்த பழங்கள், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த பழங்கள் உங்கள் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு உங்கள் எடையையும் குறைக்க உதவுகின்றன.
மிகவும் மோசமான நோய் எதுவென்றால் அது சர்க்கரை நோயாகத்தான் இருக்கும். அதுவரை இஷ்டம்போல சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் சர்க்கரை நோய் வந்தபின் இந்த உணவுக்கட்டுப்பாட்டால் சிறையில் வைத்ததுபோல உணருவார்கள். சர்க்கரை நோயை குணப்படுத்த இயலாவிட்டாலும் அதனை குறைக்கவும், கட்டுப்பாட்டில் வைக்கவும் ஏராளமான வழிகள் உள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடலாமா என்ற கேள்வி பல காலமாக உள்ளது. அதற்கான பதில் தாராளமாக சாப்பிடலாம். சொல்லப்போனால் சில பழங்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நீர்சத்து நிறைந்த பழங்கள், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த பழங்கள் உங்கள் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு உங்கள் எடையையும் குறைக்க உதவுகின்றன.

பழங்கள் சாப்பிடும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை
1. பிரெஷான பழங்களை மட்டுமே சாப்பிடவும்.
2. குறைவான கிளைசெமிக் குறியீட்டு கொண்ட பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
3. சாப்பிட இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் பழங்களை சாப்பிடுவது நல்லது.
4. துவர்ப்பு சுவையுடைய பழ வகைகள் சர்க்கரையின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
5. கேனில் அடைக்கப்ட்ட பழச்சாறுகளை ஒருபோதும் குடிக்காதீர்கள், அதில் எந்தவித சத்துக்களும் இருக்காது.
6. சமைக்கப்பட்ட பழங்களை சாப்பிடக்கூடாது,
7. சர்க்கரையின் அளவை சரி செய்வதற்கு பழங்களை விதையுடன் சேர்த்தே அரைத்து பழச்சாறாக அருந்தலாம்.

ஆப்பிள்
ஆப்பிள் மருத்துவரை தூரமாய் வைக்கும் என்பது உண்மைதான். ஆப்பிளில் பைபர் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. அதன் தோலை உரித்து விடாதீர்கள் அதில் அதிகளவு அசிட்டிக் அமிலம் இருக்கிறது. இதில் உள்ள பாலிபோனல்கள் பல நோய்களுக்கு எதிராக போராடுகிறது. அது மட்டுமின்றி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுதல், எடை குறைக்க உதவுதல் என இதன் பலன்கள் ஏராளம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைந்த அளவு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.

தர்பூசணி
தர்பூசணி இரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது. இதில் உள்ள அதிகளவு பொட்டசியம் இதனை சிறுநீரக செயல்பாட்டிற்கான சிறந்த பொருளாக மாற்றுகிறது. உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் உங்கள் சிறுநீரகம் சரியாக செயல்பட தர்பூசணி சாப்பிட வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நரம்பு கோளாறுகள் ஏற்படும், ஆனால் தர்பூசணியில் உள்ள லிகோபீன் இதனை தடுக்கிறது.

வாதுமை பழம்
இதில் குறைந்த அளவு கார்போஹைடிரேட்டும் அதிகளவு பைபரும் உள்ளது. அது மட்டுமின்றி அதிகளவு வைட்டமின் ஏ உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதமாகும். இந்த சுவையான பழம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது.

நாவல் பழம்
துவர்ப்பு சுவையுடைய இந்த பழம் சர்க்கரையை கட்டுப்படுத்த மிகச்சிறந்த தேர்வாகும். மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இதனை கொட்டையை காயவைத்து பொடியாக்கி உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்.

கொய்யாப்பழம்
அதிக நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தில் க்ளெசெமிக் மிகக்குறைந்த அளவே இருக்கிறது எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தாரளமாக இதனை சாப்பிடலாம். சர்க்கரையை குறைப்பதோடு இது மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

அன்னாச்சிப்பழம்
அன்னாச்சிப்பழம் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவக்கூடியது. அதுமட்டுமின்றி பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. இதில் க்ளெசெமிக் அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயுள்ளவர்கள் சாப்பிட சிறந்த பழமாகும். அதுமட்டுமின்றி இது உங்கள் ஆண்மையையும் அதிகரிக்கும்.

பப்பாளி
பப்பாளி குடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பழமாகும். உங்கள் உணவில் பப்பாளியை சேர்த்துக்கொள்வது உங்களுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கும். ஆய்வுகளின் படி பப்பாளி சாப்பிடுவது சர்க்கரையை குறைக்க, உடல் பருமனை குறைக்க, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க, அது மட்டுமின்றி சரும பொலிவிற்கு என பலவற்றிற்கும் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்ரி
பெர்ரி குடும்பத்தை சேர்ந்த பழங்களில் பெரும்பாலும் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. குறிப்பாக ப்ளூபெர்ரிகள் சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஸ்ட்ராபெரியில் குறைந்தளவு க்ளெசெமிக் இருப்பதால் அது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. மேலும் இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புற்றுநோய்க்கு எதிராக போராடும், ஆண்மையை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
