சர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது?

Posted By:
Subscribe to Boldsky

சர்க்கரை நோயாளிகள் தாங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதில் பழங்கள், காய்கறிகள் மட்டுமின்றி, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயையும் தான். பெரும்பாலும் நாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெயைத் தான் தேடி வாங்கி பயன்படுத்துவோம்.

Types Of Oils That Are Good For Diabetics

ஆனால் சர்க்கரை நோயால் அவஸ்தைப்படுபவர்கள், சமையலில் சேர்க்கும் எண்ணெயின் மீதும் அக்கறை காண்பித்து, சரியான எண்ணெயை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும். இங்கு ஊட்டச்சத்து நிபுணர் நேகா சந்த்னா, சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த எண்ணெய் எதுவென்று பட்டியலிட்டுள்ளார். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் இதய ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இந்த எண்ணெய் இன்சுலின் உற்பத்தியை சீராக்கும் மற்றும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவைக் குறைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தலைமுடி மற்றும் சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல. சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஏனெனில் தேங்காய் எண்ணெயில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் ஏராளமாக உள்ளது. இது எளிதில் செரிமானமாவதோடு, கொழுப்புக்களாக தேங்குவதைத் தடுக்கும்.

அரிசி தவிடு எண்ணெய்

அரிசி தவிடு எண்ணெய்

அரிசி தவிடு எண்ணெயில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகள் உள்ளதால், இதை உணவில் சேர்ப்பது நல்லது. மேலும் இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளதால், இதை சமையலில் சேர்ப்பதால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும், உடலில் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் இதயமும் பாதுகாப்புடன் இருக்கும்.

ப்ளெண்டட் ஆயில் (Blended Oils)

ப்ளெண்டட் ஆயில் (Blended Oils)

பல எண்ணெய்கள் ஒன்றாக சேர்த்து விற்கப்படும் ப்ளெண்டட் எண்ணெய்கள் இதயத்திற்கு பாதுகாப்பை வழங்குவதோடு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இந்த எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்களின் கலவைகள் இருப்பதால், இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, ஈ போன்றவற்றை உடலால் வேகமாக உறிஞ்ச உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Types Of Oils That Are Good For Diabetics

Here are some types of oils that are good for diabetics. Read on to know more...
Story first published: Thursday, March 23, 2017, 17:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter