ப்ரீ டயப்பட்டீஸ் ஸ்டேஜில் இருப்பதை கண்டுபிடிக்க சில வழிமுறைகள் !

Posted By:
Subscribe to Boldsky

உலகளவில் அதிகமான சர்க்கரை நோயாளிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உணவுப் பழக்கத்தாலும் சர்க்கரை நோய் வேகமாக பரவி வருகிறது. சர்க்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நோய் வருவதற்கு முன்னதாகவே நாம் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அளவுகள் :

அளவுகள் :

பொதுவாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100 மில்லி கிராம் முதல் 125 மில்லி கிராம் வரையிலும் உணவுக்குப் பிறகு 140 கிராம் முதல் 199 மில்லி கிராம் வரை இருந்தால் அவருக்கு பிற்காலத்தில் அவருக்கு சர்க்கரை நோய் வருவதற்க்கான வாய்ப்புகள் அதிகம்.

யாருக்கெல்லாம் வரும் :

யாருக்கெல்லாம் வரும் :

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், கர்ப்பத்தின் போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி இருப்பவர்கள், அதிகமான ஜன்க் ஃபுட் சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இவர்களுக்கு எல்லாம் ப்ரீ டயாப்பட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமென்பதால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உடலின் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

மூன்று மாத சோதனை :

மூன்று மாத சோதனை :

ப்ரீ டயாப்பட்டீஸையும் சர்க்கரை நோய்க்கான சோதனை மூலமாகவே அறிந்து கொள்ளலாம். சிலர் ரத்தப்பரிசோதனை செய்யும் சில நாட்களுக்கு முன்னர் சர்க்கரை உணவுகளை தவிர்த்தால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும் என்று நினைப்பார்கள். இது முற்றிலும் தவறானது.

ஹெச்.பி.ஏ.1சி என்ற பரிசோதனையின் மூலம் கடந்த மூன்று மாதங்களாக உங்கள் உடலின் சர்க்கரை அளவு என்ன இருந்தது என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

உணவுப்பழக்கம் :

உணவுப்பழக்கம் :

உணவையும், உடல் எடையை கட்டுப்பாடுடன் வைத்திருந்தாலே பாதி நோய்களை தவிர்த்துவிடலாம். மருத்துவரின் ஆலோசனைப் படி உங்களுக்கு ஏற்ற உணவுப்பழக்கத்தை தொடருங்கள்.

தவிர்த்தல் வேண்டும் :

தவிர்த்தல் வேண்டும் :

ப்ரீடயாப்பட்டீஸ் உள்ளது என்று தெரிந்தவுடன், சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட துவங்குங்கள். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனி வகைகளை தவிர்த்திடுங்கள். அதிக கொழுப்பு உள்ள உணவுகளையும் எண்ணெயில் பொறித்த உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

கூடாது :

கூடாது :

காலை உணவைத் தவிர்ப்பது, தாமதமாக உணவை எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்யக்கூடாது. இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே இரவு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். எப்போது எதையோ நினைத்து கவலையுடன் இருப்பது கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to avoid Prediabetes

Tips to avoid Prediabetes
Story first published: Thursday, August 17, 2017, 18:06 [IST]
Subscribe Newsletter