For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செயற்கை இனிப்புகளை சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் ஆபத்துகள் என்ன?

செயற்கை இனிப்பு சுவையூட்டிகளால் நீண்ட கால பாதிப்புகளான இதய நோய்கள் மற்றும் உடல் பருமன் வரும் அபாயம் இருக்கிறது

By Suganthi Ramachandran
|

நீங்கள் செயற்கை சுவையூட்டிகளை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் முதலில் அதை நிறுத்துங்கள். இந்த இனிப்பு சுவையூட்டிகளால் இதய நோய்கள் மற்றும் உடல் பருமன் போன்ற உபாதைகள் வர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் நாம் பயன்படுத்தும் சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்துவது இப்பொழுது வழக்கமாகி வருகின்றன. இவை உங்கள் உடலுக்கு குறைந்த அளவு ஆற்றலையே தரும்.

இந்த செயற்கை இனிப்பு சுவையூட்டிகளால் நமது உடல் மெட்டா பாலிசம், குடல் பாக்டீரியாக்கள் மற்றும் பசியின்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நாம் பயன்படுத்தும் செயற்கை சுவையூட்டிகளான அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் ஸ்டிவியா போன்றவைகள் அதிக இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளன என்று ஆராய்ச்சி தகவல்கள் கனடாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மணிடோஃபா விலிருந்து கூறுகின்றனர்.

Artificial Sweeteners Can Increase These Health Risks

உலகமெங்கும் அதிகமாக இப்பொழுது பயன்படுத்தும் இந்த செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக உள்ளன என்றும் கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் CMAJ(Canadian Medical Association Journal) வெளியிட்டுள்ளது. இதற்காக 1003 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சராசரியாக 6 மாதத்திற்கு அவர்களிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் போது செயற்கை இனிப்பு சுவையூட்டிகளுக்கும் உடல் பருமனுக்கும் இடையே ஒரு சீரான மாற்றத்தை குறுகிய காலத்தில் காண முடிய வில்லை.

நீண்ட நாள் ஆராய்ச்சி தொடர்ந்து செயற்கை இனிப்பு சுவையூட்டிகளால் அதிக உடல் பருமன் மற்றும் இதய நோய்கள், அதிக இரத்த அழுத்தம், டயாபெட்டீஸ் வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிவது என்னவென்றால் செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் உடல் பருமனுக்கு நல்லது கிடையாது என்பது திட்ட வட்டமாக தெரிகிறது என்று ரெயான் ஷார்ஷாங்ஸி புரபொசர் யுனிவர்சிட்டி ஆஃப் மணிடோஃபா விலிருந்து சொல்கிறார்.

செயற்கை இனிப்பு சுவையூட்டிகளால் நீண்ட கால நோய்களின் அபாயம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மேகன் ஆஸத் புரபொசர் யுனிவர்சிட்டி ஆஃப் மணிடோஃபா விலிருந்து கூறுகின்றார்.

English summary

Artificial Sweeteners Can Increase These Health Risks

Artificial Sweeteners Can Increase These Health Risks
Story first published: Monday, July 24, 2017, 16:13 [IST]
Desktop Bottom Promotion