பேரழிவு ஏற்படுத்தும் நோயாக மாறிவரும் நீரிழிவு!!

Posted By:
Subscribe to Boldsky

நமது வீட்டில் மட்டும் தானா என்றால் இல்லை, இல்லை, நமது நண்பர்கள் வீட்டில், உடன் பணிபுரிவோர் வீட்டில், அக்கம் பக்கத்து வீடுகள் என அனைவரது வீடுகளிலும் ஏறக்குறைய ஒருவருக்காவது நீரிழிவு நோய் பாதிப்பு இருந்து விடுகிறது. பரம்பரை நோய் என்ற பெருமையான பெயரை கொண்டிருந்த நோய் பெட்டிக் கடைகளில் கிடைக்கும் கடலை மிட்டாய் போல அனைவருக்கும் கிடைத்துவிடுகிறது இந்நாளில்.

இந்தியர்களுக்கு ஏன் அதிகமாய் சர்க்கரை நோய் அபாயம் ஏற்படுகிறது என்று தெரியுமா???

இதற்கான காரணங்கள் என்ன? இந்தியா ஏன் உலகளவில் இந்த நோய் பட்டியலில் முதன்மை இடத்தை பிடிக்கப் போகிறது? போன்ற கேள்விகளுக்கு நமது கொழுப்பு தான் காரணம் என்பதே தீர்க்கமான பதில். வரும் ஆண்டுகளில் நீரிழிவு நோய் என்பது மக்கள் தொகையில் பாதியை எட்டும் வாய்ப்பு மிகவும் ஏராளம். எனவே, பார்த்து ஜாக்கிரதையாக இருங்கள்...

நீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு முக்கிய வகைகள்

நீரிழிவு முக்கிய வகைகள்

ஒன்று; உடலில் சுத்தமாக இன்சுலின் சுரப்பது தடைப்பட்டு போவது.

இரண்டு: உடலில் போதிய அளவு இன்சுலின் சுரப்பி சுரக்காமல் இருப்பது அல்லது சரியான முறையில் வேலை செய்யாது இருப்பது.

உடல் பருமன்

உடல் பருமன்

உலகெங்கிலும் நீரிழிவு பாதிப்பு காட்டுத்தீ போல அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் உடல் பருமன் தான். இவை இரண்டு வகையான நீரிழிவு உடலில் ஏற்படவும் காரணியாக இருக்கிறது.

தொப்பை

தொப்பை

வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்ந்து அதிக அளவு தொப்பை வருவது இன்சுலின் சுரப்பதை எதிர்க்க செய்கிறது.

கொழுப்பு செல்கள்

கொழுப்பு செல்கள்

உடலில் அதிகரிக்கும் கொழுப்பு செல்களில் இருந்து வெளிப்படும் இரசாயன மாற்றமானது உடல் இன்சுலின் சுரப்பியோடு வயப்படும் அளவை குறைக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பியா, இந்தியா

அமெரிக்கா, ஐரோப்பியா, இந்தியா

அமெரிக்கா, ஐரோப்பியா, இந்தியா போன்ற பகுதிகளில் நீரிழிவு நோய் பாதிப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டுகளில் இந்தியா நீரிழிவு நோய் பாதிப்பில் உலகில் முதல் இடத்தில் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே போல ஐரோப்பியாவில் 2050-ல் பாதி மக்கள் தொகை நீரிழிவு நோய் பாதிப்புடன் தான் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய காரணங்கள்

முக்கிய காரணங்கள்

உணவுமுறையும், உடற்பயிற்சியும் தான் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன என உலக நீரிழிவு நோய் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உணவு முறை

உணவு முறை

கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது. நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருப்பது. கண்ட நேரத்தில் நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது. மது பானம், சாக்லேட் போன்ற உணவுகளை அதிகளவில் உட்கொள்வது போன்றவை முதன்மை காரணமாக திகழ்கிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உட்கார்ந்தே வேலை செய்யும் முறைக்கு நாம் மாறியதும் இதற்கான ஓர் முக்கிய காரணம். குறைந்தபட்சம் நடைபயிற்சி, ஜாக்கிங் போன்றவற்றையாவது நாம் பின்பற்ற வேண்டும். உடலுக்குள் செல்லும் கலோரிகள் கரைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

தீர்வு

தீர்வு

இன்றிலிருந்து உங்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான எடையை 5% வீதம் நீங்கள் குறைக்க தொடங்க வேண்டியது அவசியம். இது சீரான முறையில் நடக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்ய ஆரம்பித்தாலே நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகளில் இருந்து 50% வீதத்தை குறைத்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Are We Heading For A Diabetes Apocalypse

Are We Heading For A Diabetes Apocalypse, a statics about diabetes. Read here in tamil.
Subscribe Newsletter