Latest Updates
-
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்!
எந்த விதைகளை எப்படி சாப்பிட்டா.. முழு சத்து கிடைக்கும்-ன்னு தெரியுமா? விளக்கமாக கூறும் டாக்டர்!
Best Way To Take Seeds: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஏராளமான உணவுகளை இயற்கை நமக்கு அளித்துள்ளது. அதில் பழங்கள், காய்கறிகள், நட்ஸ், விதைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் விதைகள் அளவில் மிகவும் சிறியதாக இருந்தாலும், அவற்றினுள் உள்ள சத்துக்களோ ஏராளம்.
விதைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை அளிக்கக்கூடியவை. இதனால் தற்போது நிறைய மக்கள் தங்களின் ஸ்நாக்ஸ் வேளைகளில் விதைகளை தினசரி உணவில் சேர்த்து வருகின்றனர். விதைகளை சாப்பிடுவதாக இருந்தால், அவற்றை சரியான முறையில் சாப்பிட்டால் தான் அதில் உள்ள முழு சத்துக்களைப் பெற முடியும்.

ஆனால் இன்னும் நிறைய பேருக்கு எந்த விதைகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பது சரியாக தெரியவில்லை. சரும நிபுணரான டாக்டர் மோகனலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் எந்த விதைகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து விளக்கமாக கூறியுள்ளார். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
1. சியா விதைகள்
சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன் மற்றும் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த விதைகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும், இரத்த சர்க்கரை கட்டுப்படும், செரிமானம் மேம்படும் மற்றும் எடை இழப்புக்கு உறுதுணையாக இருக்கும். இந்த "சியா விதைகளை நீரில் ஊற வைத்து சாப்பிடுவது தான் சிறந்தது" என்று டாக்டர் கூறினார்.
2. சூரிய காந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் ஒலீயிக் மற்றும் லினோலியிக் அமிலம் அதிகமாகவும், சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளன. அதோடு இதில் மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவையும் உள்ளன. இந்த விதைகளை தினசரி உணவில் மிதமான அளவில் சேர்த்து வந்தால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும். இந்த "சூரியகாந்தி விதைகளை வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது" என்று டாக்டர் கூறினார்.
3. ஆளி விதைகள்
ஆளி விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், லிக்னன்கள் போன்றவை அதிகம் உள்ளன. இந்த விதைகளை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, செரிமானம் மேம்படும், கொலஸ்ட்ரால் குறையும், குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களின் அபாயம் குறையும் மற்றும் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். இந்த "ஆளி விதைகளை அரைத்து பொடியாக உட்கொள்வது தான் சிறந்தது" என்று டாக்டர் கூறினார்.
4. சோம்பு
சோம்பு ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அருமையான விதை. இந்த விதையில் நார்ச்சத்து, வைட்டமின்களான வைட்டமின் சி, பி வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. இது தவிர இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. இந்த "சோம்பு விதைகளை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நல்லது" என்று டாக்டர் கூறினார்.
5. பூசணி விதைகள்
பூசணி விதைகளில் மக்னீசியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளன. இந்த பூசணி விதைகளை தினசரி உணவில் சிறிது சேர்த்து வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும், செரிமானம் சிறப்பாக இருக்கும், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும், நல்ல தூக்கம் கிடைக்கும் மற்றும் எலும்புகள் வலுவடையும். இந்த "பூசணி விதைகளை சூரியகாந்தி விதைகளைப் போன்றே வறுத்து உட்கொள்வது நல்லது" என்று டாக்டர் கூறினார்.
"பெரும்பாலான விதைகளை அப்படியே உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவற்றை அப்படியே சாப்பிடும் போது, அதில் உள்ள சில சத்துக்களை உடலால் முழுமையாக உறிஞ்ச முடியாமல் போகும்" என்றும் டாக்டர் மோகனலட்சுமி கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
