Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
'இத' நீங்க குடிக்கலைனா... உங்க செக்ஸ் வாழ்க்கை மோசமா பாதிக்கப்படுமாம்... அதனால உடனே குடிங்க!
நீரிழப்பு பல உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அது உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க மக்களே! எப்போதும் உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்வது மிக முக்கியம்.
தங்கள் துணையுடன் படுக்கையில் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? உடலுறவில் நீங்கள் ஆசையை இழந்துவிட்டதாக உணர்கிறீர்களா? உங்கள் துணையிடம் அடிக்கடி 'நோ' சொல்கிறீர்களா? ஆம், எனில் பாலுணர்வு உங்களுக்கு குறைந்து வருகிறது.

உங்கள் செக்ஸ் ஆர்வத்தை இழப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் உறவுக்கும் ஒரு நல்லதல்ல. உங்கள் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை பாதிக்கும் நீரிழப்பு பிரச்சனை கூட இதற்கு காரணமாக இருக்கலாம். கோடைகாலங்களில் பெரும்பாலான மக்கள் நீரிழப்பு பிரச்சனையால் அவதியடைந்து வருகிறார்கள்.
லிபிடோவைப் பொறுத்தவரை, பெண்களில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஏனெனில் ஹார்மோன்கள் நிறைய மாற்றங்களுக்கு உட்படுகின்றன. நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவு உங்கள் செக்ஸ் டிரைவையும் பாதிக்கும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நீரிழப்பு உங்கள் பாலியல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்றும் அதன் மற்ற பக்க விளைவுகளையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
நீரிழப்பு உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
எடை இழப்பு அல்லது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிப்பது எதுவாக இருந்தாலும், தண்ணீர் தான் முதன்மையானதாக இருக்கிறது. கோடை காலத்தில் மட்டுமல்ல, குளிர்காலத்திலும் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும். உங்கள் உடலில் தேவையான அளவு தண்ணீர் இல்லை என்றால் நீங்கள் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும். போதுமான தண்ணீர் இல்லாமல், நீங்கள் சரியாக செயல்பட முடியாது. நீரிழப்பினால் சில பக்க விளைவுகள் உங்களுக்கு ஏற்படலாம்.
பக்கவிளைவுகள்
- உடல் சோர்வு
- வாய் வறண்டு காணப்படுவது
- இருண்ட சிறுநீர்
- உலர்ந்த சருமம்
- மலச்சிக்கல்
- தலைவலி
- மங்களான பார்வை
- தலைச்சுற்றல் மற்றும் லேசான தலைவலி
- குறைந்த இரத்த அழுத்தம்
- செக்ஸில் ஆர்வம் குறைவது
உடலுறவில் குறைவான செயல்பாடு என இவை அனைத்தும் உங்கள் உடலில் நீரிழப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
நீரிழப்பு பாலியல் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம்
நீரிழப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதாவது சோர்வு, எரிச்சல், மனச்சோர்வு, விறைப்புத்தன்மை குறைதல் மற்றும் யோனி வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தலாம். யோனி வறட்சி உடலுறவின் போது உங்களுக்கு வலியை ஏற்படுத்தும். உங்கள் துணையுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உங்களின் ஆர்வத்தை நீரிழப்பு பாதிக்கலாம்.
லிபிடோ குறைவதற்கு நீரிழப்பு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இது மோசமான பாலியல் செயல்திறனுக்கும் வழிவகுக்கும். சுருக்கமாக, நீரிழப்பு உங்கள் பாலியல் வாழ்க்கைக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, நீரேற்றமாக இருப்பது உங்கள் பாலியல் ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
லிபிடோ குறைவதற்கு, பல காரணங்கள் உள்ளன. ஆனால் லிபிடோ குறைவதற்கான காரணத்தை புரிந்து கொள்ள நேரம் எடுக்கும். மற்ற காரணங்களுக்காக தேடுவதற்கு முன்பு, தம்பதியினர் சரியான நீரேற்றத்தோடு இருக்க வேண்டும்.
நீரேற்றமாக இருக்க தினமும் தண்ணீர் குடிப்பதுடன் உங்கள் நாளை தொடங்குங்கள். இது உங்களை புத்துணர்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும். தற்போது கோடைகாலம் என்பதால் ஆரோக்கியமான குளிர் பானங்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். பருவகால காய்கறிகள் மற்றும் மூலிகைகள் கொண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டும் சூப்களை குடிப்பதும், உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.
கோடைகாலத்தில் சில அற்புதமான பழ விருப்பங்கள் உள்ளன. ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி, ப்ரோக்கோலி மற்றும் பீச் போன்ற திரவம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது உங்கள் தினசரி உணவில் அதிக திரவத்தை சேர்க்க ஒரு சிறந்த வழியாகும்.
ஆல்கஹால் உட்கொள்ளலை குறைக்க வேண்டும். ஏனெனில், இது நீரிழப்பை ஏற்படுத்தும் மற்றும் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும். உடலில் நீரிழப்பு அதிகளவில் இருக்கும்போது மட்டுமே, தாகம் உணர்வு உங்களுக்கு ஏற்படும். எனவே நாள் முழுவதும் தண்ணீரைப் பருகுவது அவசியம். போதுமான நீரேற்றத்திற்குப் பிறகும் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறவில்லை என்றால், மருத்துவரை அணுக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













