Latest Updates
-
மாரடைப்பு வருவதற்கு முன்பே தென்படும் 7 எச்சரிக்கை அறிகுறிகள்! அலட்சியம் வேண்டாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
இந்தியாவின் 'உருளைக்கிழங்கு தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
நவம்பர் 22-ல் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த பருப்பு சட்னி செய்யுங்க.. வழக்கமாக சாப்பிடுறத விட அதிகமா சாப்பிடுவாங்க.. -
நவம்பர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் ஜனவரி மாதம் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
10 வெண்டைக்காயும், 3 தக்காளியும் இருந்தா இப்படி குழம்பு வையுங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
12 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் இந்தியாவின் நீண்ட தூரம் செல்லும் ரயில் எது தெரியுமா? -
சிக்கன் வாங்குனா இந்த மலபார் சிக்கன் பிரியாணியை ஒருதடவை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சியா விதை Vs சப்ஜா விதை - கோடையில் இவற்றில் சிறந்தது எது? விளக்கும் டாக்டர்!
Chia Seeds Vs Sabja Seeds: கோடைக்காலம் வந்துவிட்டாலே உடலில் நீர்ச்சத்து குறைந்து, உடல் சூடு, மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் உட்பட ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை வரிசையாக சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் ஏராளமான உணவுகள் உள்ளன. அதில் பிரபலமானது இளநீர். ஆனால் இந்த இளநீரைத் தவிர வேறுசில உணவுப் பொருட்களும் கோடைக்கால பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றன. குறிப்பாக அளவில் சிறியதாக இருக்கும் ஒருசில விதைகள் பெரிதும் உதவி புரியும்.
இந்த விதைகள் குட்டியாக இருந்தாலும், ஒவ்வொன்றிலும் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக நிறைந்துள்ளன. அப்படி கோடையில் பெரும்பாலான மக்களால் எடுக்கப்படும் இரண்டு விதைகள் உள்ளன. அவை சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகள். இவ்விரண்டும் மற்ற விதைகளை விட பார்க்க அளவில் மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் இவை ஏராளமான நார்ச்சத்துக்களைக் கொண்டவை மற்றும் உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
இருப்பினும் பெரும்பாலானோருக்கு இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் மற்றும் இவற்றில் எது மிகவும் சிறந்தது என்ற ஒரு கேள்வி மனதில் இருக்கும். எனவே டாக்டர் இளவரசி லட்சுமணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகளுக்கு இடையிலான வித்தியாசத்தையும், அவற்றின் நன்மைகளைப் பற்றியும் பகிர்ந்துள்ளார்.
சியா விதைகளின் நன்மைகள்
* "சியா விதைகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் ஒமேகா-3 அதிகளவில் உள்ளது.
* உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் சியா விதைகள் மிகவும் நல்லது. ஏனெனில் இதை சிறிய அளவில் உட்கொண்டாலும், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும்.
* இது தவிர, இந்த விதைகளில் நார்ச்சத்தும், புரோட்டீனும் அதிகமாக உள்ளன. 100 கிராம் சியா விதைகளில் 34 கிராம் நார்ச்சத்து உள்ளது." என்று கூறினார்.
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்தின் முக்கிய விளைவுகள்
* "சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை மேம்படுத்தும்.
* மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும்.
* நீண்ட நேரம் வயிற்றை நிரப்பியிருக்க செய்யும்.
* இரத்த சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும்.
* குடல் பாக்டீரியாக்களுக்கு ஆதரவாக இருக்கும்.
* முக்கியமாக கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்" என்றும் கூறியிருந்தார்.
சப்ஜா விதைகள்
* "சப்ஜா விதைகளிலும் நார்ச்சத்து உள்ளது. 100 கிராம் சப்ஜா விதைகளில் 25 கிராம் நார்ச்சத்து உள்ளது.
* ஆனால் இந்த விதைகள் அதிக குளிர்ச்சி பண்பைக் கொண்டது. எனவே அசிடிட்டி அல்லது செரிமான தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த விதைகளை எடுக்கும் போது, வயிற்றுக்கு இதமாக இருக்கும்.
* மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும் மற்றும் உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்.
* இந்த விதைகளை கோடைக்காலத்தில் குடிக்கும் சர்பத் மற்றும் பிற பானங்களுடன் ஊற வைத்து சேர்த்து உட்கொள்ளலாம். இதனால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
* முக்கியமாக சியா விதைகளை விட சப்ஜா விதைகளை நீரில் ஊற வைத்தால், 10 நிமிடத்தில் சாப்பிட தயாராகிவிடும்." என்னும் கூறினார்.
எனவே நண்பர்களே! இவ்விரு விதைகளுமே உடலுக்கு நன்மைகளை தரக்கூடியவை. ஆனால் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சிறந்தது என்றால் அது சப்ஜா விதைகள் தான். எனவே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் சப்ஜா விதைகளையும், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சியா விதைகளையும் எடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


