Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
Chennai Records Surge In Fever Cases: தமிழ்நாட்டில் சமீபத்திய மழை மற்றும் வானிலை மாற்றங்களுக்குப் பிறகு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கவனம் அதிகரித்துள்ளது. 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத மத்தியில் நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 16,577 டெங்கு பாதிப்புகளும் 9 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதில் சென்னையில் மட்டும் இந்த மாதத்தில் சுமார் 4,600 காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், காய்ச்சல் வந்தாலே அது டெங்கு என்று கருதுவது சரியல்ல.

வைரஸ், இன்ஃப்ளூயன்சா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் காய்ச்சல் ஏற்படலாம். ஏனெனில் டெங்கு பரவும் அதே வேளையில், ப்ளூ காய்ச்சல், உண்ணி காய்ச்சல் போன்றவைகளும் பரவி வருகின்றன. மேலும் காய்ச்சல் வந்தால் பலருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது தெரியாமல் தவறான முறையில் காய்ச்சலை கையாள்கிறார்கள். எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.
இதுக்குறித்து சென்னையில் உள்ள கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவ பிரிவின் மூத்த ஆலோசகரான டாக்டர்.பிரசன்னா கார்த்திக் எஸ் அவர்கள் காய்ச்சலின் போது செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது " காய்ச்சல் என்பது மக்கள் மருத்துவமனைக்கு வருவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். குறிப்பாக, வானிலை மாற்றங்கள் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை போன்ற காலங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது காய்ச்சலுடன் இருமல், சளி, உடல்வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். அனைத்து காய்ச்சல் பாதிப்புகளுக்கும் டெங்கு அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தொற்றுதான் காரணம் என்று கூற முடியாது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.
வானிலை மாற்றங்கள், ஈரப்பதம், மழைப்பொழிவு ஆகியவை பல்வேறு தொற்றுகள் பரவுவதற்கு காரணமாக உள்ளன. மழைக்குப் பிறகு தண்ணீர் தேங்குவது கொசுக்கள் பெருகுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் டெங்கு போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம்.
அதே நேரத்தில், நெரிசலான அல்லது போதுமான காற்றோட்டம் இல்லாத இடங்களில் மக்கள் அதிக நேரம் செலவிடும்போது, சுவாசத் தொற்றுகள் எளிதாகப் பரவக்கூடும். மாசுபட்ட உணவு மற்றும் தண்ணீர், இரைப்பை மற்றும் குடல் தொற்றுகளையும் ஏற்படுத்தலாம்." என்று டாக்டர் கூறினார்.
காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவைகள்
* "காய்ச்சல் உள்ள பெரும்பாலானோருக்கு ஆரம்ப கட்டத்தில் போதுமான திரவங்களை எடுத்துக் கொள்வது, போதுமான ஓய்வு எடுப்பது மற்றும் அறிகுறிகளைத் தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம்.
* காய்ச்சல் இருக்கும் போது போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்; போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.
* தொடர்ந்து நீடிக்கும் அல்லது மிகவும் அதிகமான காய்ச்சல், மூச்சுத்திணறல், மீண்டும் மீண்டும் வாந்தி, கடுமையான வயிற்றுவலி, குழப்பம், ரத்தப்போக்கு , அதிகப்படியான தூக்க உணர்வு அல்லது சிறுநீர் வெளியேற்றம் குறைதல் போன்ற அறிகுறிகளுடன் இருந்தால், அதை அலட்சியப்படுத்தக்கூடாது. இதுபோன்ற நிலையில் மருத்துவப் பரிசோதனை அவசியம்.
* வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடிநீர் மற்றும் உணவு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
* கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மற்றும் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
* உங்களுக்கு காய்ச்சல் அல்லது சுவாச அறிகுறிகள் இருந்தால், மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்து, நெரிசலான இடங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்." என்று டாக்டர் கூறினார்.
காய்ச்சல் வந்தால் செய்யக்கூடாதவைகள்
* "உடல் வலியுடன் கூடிய ஒவ்வொரு காய்ச்சலும் டெங்குதான் என்று நினைத்துக் கொள்வது பொதுவான தவறாகும். அறிகுறிகள், மருத்துவப் பரிசோதனை மற்றும் காய்ச்சல் நீடிக்கும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து, டெங்கு, மலேரியா, டைபாய்டு, இன்ஃப்ளூயன்சா மற்றும் பிற வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், காய்ச்சலுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய பரிசோதனைகள் தேவைப்படலாம்.
* காய்ச்சல் ஏற்பட்டவுடன், தாங்களாகவே ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். பல தொற்றுகள் வைரஸ் காரணமாக ஏற்படுகின்றன. அவற்றுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவையில்லை.
* காய்ச்சலுக்கான காரணம் தெரியாமல் வேறு எந்த மருந்துகளையும் சுயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது சரியான சிகிச்சை அளிப்பதை தாமதப்படுத்தக்கூடும்." என்று டாக்டர் கூறினார்.
மொத்தத்தில், காய்ச்சல் என்பது ஒரு அறிகுறி மட்டுமே; அது ஒரு நோயைக் கண்டறிவதற்கான உறுதியான காரணம் அல்ல. ஒரே அறிகுறி வெவ்வேறு தொற்றுகளிலும் ஏற்படலாம். ஆனால், அவற்றுக்கான சிகிச்சை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம். காய்ச்சல் தொடர்ந்து நீடித்தாலோ அல்லது புதிய அறிகுறிகள் ஏற்பட்டாலோ, தாங்களாகவே நோயைக் கண்டறிந்து அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட, மருத்துவரை அணுகுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



