Latest Updates
-
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம்
Bladder Cancer: அடிக்கடி சந்திக்கும் இப்பிரச்சனை சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறியாம்.. உஷாரா இருங்க...
Bladder Cancer Symptoms In Tamil: மிகவும் கொடிய நோயான புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சிறுநீர்ப்பை புற்றுநோய். இந்த புற்றுநோய் சிறுநீர்ப்பையில் உருவாகிறது. 2020 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் சுமார் 212, 536 பேர் சிறுநீர்ப்பை புற்றுநோயால் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமாக இந்த சிறுநீர்ப்பை புற்றுநோயானது வயதானவர்களை அதிகம் பாதிக்கக்கூடியது. இதுவரை இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுள் கிட்டத்தட்ட 90% பேர் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான். அதிலும் 73 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறுநீர்ப்பை புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும். அப்படி கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், முழுமையாக குணமடையலாம். எனவே 50 வயதாகிவிட்டால், சீரான இடைவெளியில் உடலை முழு பரிசோதனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், பல நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய பெரிதும் உதவியாக இருக்கும்.
சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள்
பொதுவாக சிறுநீர்ப்பையில் பிரச்சனை இருந்தால், அடிக்கடி சிறுநீரை கழிக்க நேரிடும். ஆனால் நிறைய பேர் இப்படி அடிக்கடி சிறுநீர் கழிப்பதை சிறுநீர் பாதை தொற்றுகளாக (UTI) இருக்கக்கூடும் என்று நினைத்து சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் தற்போது UTI பிரச்சனைகளால் நிறைய பேர் அவதிப்படுகிறார்கள்.
ஆனால் இப்படி அடிக்கடி UTI பிரச்சனையை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே இந்த நிலையில் உடனே மருத்துவரை அணுகி அவரிடம் இதை தெரிவியுங்கள். இதனால் அவர் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்.
சிறுநீர்ப் பாதை தொற்று என்றால் என்ன?
சிறுநீர் பாதை தொற்று என்பது மலக்குடல் வழியாக பாக்டீரியாக்கள் சிறுநீர்க்குழாயினுள் நுழைந்து சிறுநீர் பாதையை பாதிக்கும் போது ஏற்படுகிறது. இத்தொற்று சிறுநீர்ப் பாதையின் எந்த பகுதியிலும் ஏற்படலாம். சிறுநீர்ப் பாதை தொற்றின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று சிறுநீர் கழிக்கும் போது வலியை சந்திக்கக்கூடும். இது தவிர பின்வரும் அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும்.
* சிறுநீரின் நிறம் அடர் சிவப்பு அல்லது மெரூன் நிறத்தில் இருக்கும்.
* அடிக்கடி சிறுநீரை கழிக்க நேரிடும்.
* கடுமையான முதுகு வலியை அவ்வப்போது சந்திக்க நேரிடும்.
சிறுநீர்ப்பை புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது?
சிறுநீர்ப்பையில் உள்ள செல்களில் மாற்றங்கள் ஏற்படும் போது அல்லது அவற்றின் டிஎன்ஏ-வில் மாற்றங்கள் ஏற்படும் போது, அவை சிறுநீர்ப்பை புற்றுநோயை உண்டாக்குகின்றன. இந்த மாற்றங்கள் சிறுநீர்ப்பையில் உள்ள செல்களை வேகமாக பெருக்கி, ஆரோக்கியமான செல்களை அழித்து கட்டிகளாக உருவாக்குகின்றன.
காலப்போக்கில் இந்த அசாதாரண செல்கள் உடைந்து உடல் முழுவதும் பரவத் தொடங்கும். இந்த புற்றுநோய் செல்கள் சிறுநீர்ப்பையின் வெளியே மற்றும் சுற்றியுள்ள தசைகளில் பரவும் போது, அது தசை ஆக்கிரமிப்பு சிறுநீர்ப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.
யாருக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது?
ஒருவருக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
* புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில் சிகரெட்டில் உள்ள தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் அதிகம் குவிந்து, சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
* வயதாகும் போது சிறுநீர்ப்பையின் அபாயம் அதிகரிக்கிறது. இதுவரை சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்த்தால், 55 வயதிற்கு மேற்பட்டவர்களாகவே உள்ளனர்.
* முக்கியமாக சிறுநீர்ப்பை புற்றுநோயானது பெண்களை விட ஆண்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகமாக உள்ளன.
* ஏற்கனவே மற்ற வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்து வந்தால், அவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளது. அதுவும் இடுப்பு பகுதியை இலக்காக கொண்ட கதிர்வீச்சு சிகிச்சையை பெற்றவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
* குறிப்பாக உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் சிறுநீர்ப்பை புற்றுநோய் இருந்தால், உங்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பொதுவாக இந்த வகை புற்றுநோய் இந்த காரணத்தினால் ஏற்படுவது அரிது என்றாலும், வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
