Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
தினமும் பிஸ்கட் சாப்பிடுவீங்களா? இத படிச்சு பாருங்க... ஷாக் ஆயிடுவீங்க...
Biscuits Side Effects: பொதுவாக பசி எடுக்கும் போது அவசர காலத்தில் அந்த பசியை அடக்க நிறைய பேர் சாப்பிடும் ஒரு ஸ்நாக்ஸ் என்றால் அது பிஸ்கட் தான். சொல்லப்போனால் பலருக்கு காலையில் காபி, டீ குடிக்கும் போது பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலர் எங்கு சென்றாலும் தங்கள் பையில் ஒரு பாக்கெட் பிஸ்கட்டை வைத்திருப்பார்கள்.
பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலக டிராயரில் எப்போதும் பிஸ்கட்டை ஸ்டாக் வைத்திருப்பார்கள். அந்த அளவில் பிஸ்கட் பெரும்பாலானோரின் விருப்பமான ஸ்நாக்ஸ் என்றே கூறலாம். ஆனால் இப்படி சாப்பிடும் பிஸ்கட் ஆரோக்கியமானதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இல்லையென்றால், உண்மையில் அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தினமும் பிஸ்கட் சாப்பிடலாமா?
இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காத்ரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். அது என்னவெனில், பிஸ்கட்டில் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை என்பதால் இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் அல்ல. இதில் கொழுப்புக்கள் மற்றும் சுத்திரிக்கப்பட்ட மாவு மட்டுமே உள்ளன மற்றும் நார்ச்சத்து எதுவும் இதில் இல்லை. எந்த ஒரு பிஸ்கட்டுமே வெற்று கலோரிகளையே கொண்டுள்ளன. அதாவது, இதை உட்கொள்வதால் கலோரிகள் மட்டும் கிடைக்குமே தவிர, புரோட்டீன், வைட்டமின்கள் அல்லது கனிமச்சத்துக்கள் என்று எதுவுமே கிடைக்காது.
பிஸ்கட் சாப்பிடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள்
"கடைகளில் சுகர்-ப்ரீ, ஜீரோ கொழுப்பு, நோ மைதா அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கான பிஸ்கட்டுகள் விற்கப்படுவதைக் காணலாம். எவ்வளவு வெரைட்டி பிஸ்கட்டுகள் இருந்தாலும், அவற்றில் வெற்று கலோரிகள் மட்டுமே உள்ளன. இப்படிப்பட்ட பிஸ்கட்டுக்களை பசி நேரத்தில் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
கூடுதலாக, பிஸ்கட்டுகள் பெரும்பாலும்சுத்திரிக்கப்பட்ட கோதுமை மாவு அல்லது மைதாவால் ஆனது மற்றும் இவற்றில் நார்ச்சத்துக்கள் ஏதும் இல்லை. நார்ச்சத்து இல்லாத உணவுகளை அதிகம் எடுத்தால் அதன் விளைவாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். மேலும் பிஸ்கட்டுகளில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், உடலில் அதிக ட்ரைகிளிசரைடு மற்றும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு பங்களிக்கின்றன. இப்படி பிஸ்கட்டுகள் குறித்து கூறப்பட்டவை அனைத்தும் ரஸ்க்குகளுக்கும் பொருந்தும். அனைத்துமே ஒரே மாதிரியானவை தான்." என்று கூறியுள்ளார்.
டீயுடன் வேறு எதை சாப்பிடலாம்?
ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காத்ரேவின் கூற்றுப்படி, டீயுடன் எதையும் சாப்பிடக்கூடாது. அப்படியே பசி எடுத்தால், மக்கானா, வெஜிடேபிள் ரோல் அல்லது பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். அதுவும் காபி, டீ குடித்தும் பசி எடுத்தால், 15 நிமிடம் கழித்து எதையும் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் டீயில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பு சத்துக்கள், உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதை பாதித்துவிடும் என்றும் கூறினார்.
பிஸ்கட்டை எப்போதும் சாப்பிடக்கூடாதா?
பிஸ்ட்டை தினமும் தான் சாப்பிடக்கூடாது. எப்போதாவது உங்களுக்கு பிடித்த பிஸ்கட்டை சாப்பிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காத்ரே கூறியுள்ளார். அதே சமயம் இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications