Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இரவு உணவை ஒரு வாரத்திற்கு 8 மணிக்கு சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது சிறந்த உடல்நல பழக்கத்தில் ஒன்று என எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? உங்கள் இரவு உணவை சூரியன் மறைவதற்கு முன் சாப்பிடுவது புத்துணர்ச்சியை தருவதோடு உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒன்றாகவும் இருக்கிறது. பழங்கால ஆயுர்வேத முறைப்படி இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது அதிலும் குறிப்பாக இரவு 8 மணிக்கு முன் சாப்பிடுவது உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தருகிறது என்பதை குறிக்கிறது.
மேற்கத்திய உணவு பழக்கங்களை பின்பற்றுகிறோம் என்கிற பெயரில் அனைத்தையும் கண்டபடி சாப்பிடும் நாம், அவர்கள் பின்பற்றும் இரவு உணவை சீக்கிரம் முடிக்கும் பழக்கத்தை பற்றி கருத்தில் கொள்வதில்லை. இரவு நேரத்தில் டீ, அதிகாலை பிரியாணி என அனைத்தையும் நம் இஷ்டப்படி சாப்பிடுகிறோம். முடிந்தவரை உங்கள் இரவு உணவை சூரியன் மறைவதற்கு முன் முடிக்காவிட்டாலும் குறைந்தது 8 மணிக்குள்ளாக சாப்பிட்டு பாருங்கள். நீங்களே உங்கள் உடலில் பல வித்தியாசங்களை பார்ப்பீர்கள்.

நல்ல தூக்கம்
நாம் இரவில் தாமதாக சாப்பிடும் போது நமது உடல் கனமான உணவை செரிமானம் செய்ய அதிக ஆற்றலை எடுத்து கொள்ளும் இது நமது தூக்கத்தை சீரற்றதாக்கும். நீங்கள் தூங்க செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டிருக்கும் போது, உடல் உறுப்புகள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஓய்வெடுக்கும் வாய்ப்பை பெறுகின்றன. இதனால் நீங்கள் சீக்கிரமும், சீராகவும் தூங்குவதோடு காலையில் களைப்பில்லாமல் எழுந்திருக்கவும் முடியும். இரவில் மிதமான உணவை எடுத்து கொள்ளவது நல்ல தூக்கத்தை கொடுப்பதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது.
வயிறு வீக்கம்
காலையில் எழும் போதே வயிறு உப்பசம் மற்றும் வயிறு இறுக்கம் போன்றவற்றால் ஒரு வித எரிச்சல் உணர்வு ஏற்படும். நீங்கள் இரவு உணவை சீக்கிரமும் எளிதாகவும் சாப்பிடும் போது அந்த உணர்வு குறைய தொடங்கும். இதற்கு காரணம் செரிமான அமைப்புக்கு இரவு முழுவதும் போதுமான நேரம் கிடைப்பதால் அது வயிற்றை சுத்தம் செய்யும் வேலையை சரி வர செய்கிறது. இரவு நேர தின்பண்டங்கள் இல்லை, நள்ளிரவு செரிமான நாடகம் இல்லை. அமைதியான, திறமையான செயலாக்கம் மட்டுமே நடைபெறுகிறது.
சரியான நேரத்தில் பசி எடுக்கும்
காலை உணவை தாமதமாக சாப்பிடுவதற்கு அல்லது முற்றிலுமாக தவிர்ப்பது போன்றவற்றிற்கு பதிலாக, சரியான நேரத்தில் பசியை தூண்டி காலை உணவை சரிவர எடுத்துக் கொள்ள செய்யும். மிதமான சீக்கிரமான இரவு உணவு உங்கள் பசி கடிகாரத்தை சரியாக இயங்க செய்கிறது. தாமதமான இரவு உணவாக பிரியாணி சாப்பிடும் போது ஏற்படும் சோர்வை போல் இல்லாமல், புத்துணர்வுடன் உங்கள் காலையை துவங்க செய்யும்.
சரும பொலிவு
இது நுட்பமான, ஆனால் மிகவும் உண்மையான ஒன்று. இரவில் குறைவான செரிமானச் சுமை குறைந்து சிறப்பாக நச்சுகளை உடலில் இருந்து நீக்க சுழற்சிகளுக்கான முதல் நிலைக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக சரும பொலிவும், புத்துணர்ச்சியான சருமமும் எளிதில் கிடைக்கும். சில நாட்களுக்குப் பிறகு, விளம்பரங்களில் சொல்வதை போல ஜொலிக்கும் சருமத்தை பெற வழி செய்கிறது. குறிப்பாக கிரீம்கள், பேஸ் பேக்குகள், போன் பில்ட்டர்கள் எதையும் உபயோகிக்காமலேயே சருமப் பொலிவை பெறலாம்.
சாப்பிடுவதில் கவனம்
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால், உணவுகளை சிறப்பாக திட்டமிடுவதற்கான வாய்ப்பை கொடுக்கிறது. இரவு நேரத்தில் திடீரென எடுத்து கொள்ளும் சிற்றுண்டி அல்லது இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைவது போன்றவற்றிற்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது. இது உறக்கம் அல்லது பசியால் ஏற்படும் சோர்வு இரண்டிற்குமான வித்தியாசத்தை உணர செய்கின்றன. உணவுகள் கவனமாக தேர்வு செய்யப்படுகின்றன. மேலும் ஆச்சரியப்படும் விதமாக, சாப்பிட்ட பின் உடனடியாக தூங்குவதற்கு அவசரம் இல்லாத போது உணவின் சுவையை ரசித்து சாப்பிட முடியும்.
அமைதியுணர்வு
இதில் மிகவும் ஆச்சரியமான ஒன்று என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அது அனுபவமே சிறந்த ஆசான் என்பது நிரூபணமாவது தான். இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது அமைதியான சூழலில் பொறுமையாக இரவு உணவு சாப்பிட உதவுவதோடு ஓய்வெடுக்க அதிக நேரத்தையும் கொடுக்கிறது. இதனால் சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இடையில் அதிக நேரம் கிடைக்கிறது. இது நிம்மதி உணர்வை தர தொடங்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
