Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
ஆடி மாதத்தில் ஏன் நிறைய சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
Aadi 2023: நம்முடைய நாட்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. உத்ராயணம் அதாவது பகல் சூரியன் ஆதிக்கம் செலுத்தும் நேரமாகும். இந்த வெயில் நேரத்தில் மனிதர்கள் பலவீனமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுவே தட்சிணாயனம் என்றால் சந்திரன் வரும் நாளாகும். அதாவது பூமி குளிர்ச்சியாக இருப்பதை குறிக்கிறது.
இந்த காலத்தில் மனிதர்கள் வலிமையாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. எனவே ஆண்டின் பருவநிலை என்பது ஒரு நபரின் மனதையும் அவர்களின் வலிமையையும் பாதிக்கிறது. எனவே தான் நம்முடைய பருவநிலையை பொருத்து வாழ்க்கை முறை, உணவு முறைகள் மற்றும் பருவங்களுக்கு ஏற்ப உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

அந்த வகையில் பார்க்கும் போது ஆடி மாதம் என்பது தட்சிணாயனத்தின் தொடக்க மாதமாகும். இந்த மாதத்தில் பருவமழை ஆரம்பிக்க தொடங்குகிறது. மேலும் இந்த ஆடி மாதம் கடவுளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் நம் செரிமானத்தில் எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும்?
ஆடி மாதம் என்பது தட்சிணாயனத்தின் தொடக்க மாதமாகும். மேலும் இந்த மாதம் கடவுளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அதனால் தான் இந்த மாதத்தில் நிறைய பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
ஆடி மாதம் தட்சிணாயனம் மாதம் என்பதால் காற்று குளிர்ச்சியாகி செரிமான அமைப்பு தூண்டப்படுகிறது. இந்த சமயத்தில் செரிமானம் மெதுவாக இருக்கும். இதனால் பசியின்மை ஏற்படும்.
எனவே தான் இந்த மாதத்தில் எளிதில் செரிக்கக் கூடிய நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். வெல்லம், கரும்பில் செய்யப்பட்ட கீர், சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்புகளை சாப்பிட்டு வரலாம். அதே நேரத்தில் நெய், வெண்ணெய் போன்ற கனமான கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தான் ஆடி மாதத்தில் புளிப்பு, காரம் நிறைந்த கூழ் காச்சி கொடுக்கப்படுகிறது.
ஆடிக் கூழின் அம்சங்கள்
ஆடிக் கூழ் ஒரு முக்கிய உணவாகும். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாகும். ராகி, கேழ்வரகு, மோர், வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவை கூழில் சேர்க்கப்படுகிறது. இந்த கேழ்வரகு கூழ் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
அதனால் நம் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் ஆடி மாதத்தில் கூழ் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த கூழுடன் கத்தரிக்காய், மொச்சை குழம்பு, ஊறுகாய் போன்றவற்றை மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். கேழ்வரகில் இருக்கும் சத்துக்கள் மழைக்காலத்தில் நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
ஆடி மாதத்தில் தயாரிக்கும் பிற உணவுகள்
ஆடி மாதத்தில் தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களும் தயாரிக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் முக்கியமான திருவிழா ஆடிப் பூரமாகும். இந்த ஆடிப் பூரத்தில் அரிசி, வெல்லம், பால் சேர்த்து பாரம்பரிய உணவு தயாரிக்கப்படுகிறது. அதே மாதிரி ஆடி செவ்வாய் அன்று மஞ்சள் பொங்கல் படைக்கப்பட்டு எல்லோருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஆடி மாதம் முழுவதும் வீட்டில் எதாவது இனிப்பு செய்யப்படுகிறது. அதே மாதிரி ஆடி பதினெட்டாம் பெருக்கில் கலவை சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கலவை சாதம் என்பது 5 வகையாக அரிசி வகைகளை ஒன்றாக சமைத்து நெய்வேத்யமாக வழங்குகின்றன. எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் போன்றவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த சாதத்துடன் தேங்காய் சாதம், வடை போன்றவையும் பரிமாறப்படுகிறது.
ஆடி கிருத்திகை நன்னாளில் முருகனை வழிபடுவது உண்டு. இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் பால் பாயாசம், மிளகு மற்றும் சீரக சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று நம் முன்னோர்களை நினைவுகூரும் வகையில் தர்ப்பணம் செய்வார்கள். அமாவாசை அன்று வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவற்றை சாப்பிடுவதில்லை. வாழைக்காய் பொடி மாஸ், பாவற்காய் சாதம் போன்ற ஆரோக்கியமான உணவுகள் வீடுகளில் தயாரிக்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் வரலட்சுமி விரதத்தின் போது இனிப்பு மற்றும் கார கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைக்கப்படுகிறது.
இப்படி ஆடி மாதம் முழுவதும் நம் உடலுக்கும் நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதத்தில் ஏராளமான ஆரோக்கியமான உணவுகள் தயாரிக்கப்படுகிறது. ஆடி மாதம் பருவ மழைக்காலத்தின் தொடக்க மாதமாக இருந்தால் கூட ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது மழையினால் ஏற்படும் நோயில் இருந்து நம்மை காக்க உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications