For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்று எரிச்சலை போக்க சில ஈஸி டிப்ஸ்!

வயிற்றில் பயங்கரமான எரிச்சல் இருக்கிறதா.இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள்

|

நீங்கள் வயிற்று எரிச்சலால் அவதிப்பட்டு வருகிறீர்களா? இந்த மாதிரியான பிரச்சினையால் நாம் எல்லாரும் அவதிப்பட்டு இருப்போம். வயிற்றில் உள்ள அமிலத் தன்மை காரணமாக இந்த மாதிரியான எரிச்சல் உண்டாகிறது. எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் மற்றும் அடி வயிற்றில் அசெளகரியமான நிலை போன்ற பிரச்சினைகளையும் இதனால் சந்திப்போம்.

இந்த வயிறு எரிச்சல் இரைப்பையில் உண்டாகும் வாயுத் தொல்லை, உணவு அழற்சி, எரிச்சலுடன் மலம் கழித்தல், பாக்டீரியா தொற்று, அல்சர், செலியாக் நோய் போன்றவற்றால் ஏற்படுகிறது. புகைப் பழக்கம், உடல் பருமன், மருந்துகள், மன அழுத்தம், ஆல்கஹால் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

நீங்கள் வயிறு எரிச்சலால் அவதிப்பட்டுள்ளீர்கள் என்பதை நெஞ்செரிச்சல், வாயு, குமட்டல், வாந்தி, வயிறு வீக்கம், வறண்ட தொண்டை, இருமல், விக்கல் மற்றும் உணவு முழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

11 home remedies for burning sensation in stomach

நீங்கள் இதற்கு என்ன தான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் அதனால் பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இயற்கையான முறையில் இதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

சில இயற்கை பொருட்களே இந்த வயிறு எரிச்சலிருந்து உங்களுக்கு உடனடி நிவாரணம் தருகிறது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர்

வயிறு எரிச்சலை குணப்படுத்துவதில் ஆப்பிள் சிடார் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதிலுள்ள அல்கலைன் தன்மை வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சரி செய்து எரிச்சலை போக்குகிறது.

2 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும்

அதனுடன் கொஞ்சம் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்று எரிச்சல் நீங்கி நலம் பெறலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் வயிறு எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.இதன் குளு குளுப்பான தன்மை நெஞ்செரிச்சல் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

1/2 கப் கற்றாழை ஜூஸை சாப்பிடுவதற்கு முன் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

யோகார்ட்

யோகார்ட்

யோகார்ட்டில் அதிகளவு புரோபயோடிக் இருப்பதால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல பலனை கொடுக்கிறது. இதிலுள்ள நல்ல பாக்டீரியா சீரண சக்தியை அதிகரிக்கிறது.

எனவே இனி மேல் சாப்பிட்டதற்கு பிறகு யோகார்ட் எடுத்து கொள்ளுங்கள் வயிறு எரிச்சலிருந்து விடுபடலாம்.

குளிர்ந்த பால்

குளிர்ந்த பால்

குளிர்ந்த பால் நமது வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சரி சமமாக்குகிறது. எனவே நமக்கு இதனால் வயிறு எரிச்சல் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே உணவு உண்ட பிறகு ஓரு கிளாஸ் குளிர்ந்த பால் அருந்துவதால் நல்ல மாற்றத்தை காண முடியும்.

க்ரீன் டீ அல்லது மிளகுக்கீரை டீ

க்ரீன் டீ அல்லது மிளகுக்கீரை டீ

இந்த மூலிகைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்த்து போரிடுகிறது. எனவே க்ரீன் டீ அல்லது மிளகுக்கீரை டீ அருந்துவது நல்லது.

உங்கள் விருப்பமான டீயை தேர்ந்தெடுத்து ஒரு கப் சூடான நீரில் டீ பேக்கை நனைத்து அருந்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த தேநீர் அருந்துங்கள்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி சீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் வயிறு எரிச்சலை குறைக்கிறது.

நீங்கள் இதற்கு சிறு இஞ்சி துண்டை வாயில் போட்டு சுவைக்கலாம் அல்லது இஞ்சி டீ அருந்தலாம்.

பழங்கள்

பழங்கள்

வாழைப்பழம், பப்பாளி மற்றும் ஆப்பிளில் இயற்கையாகவே ஆன்ட்ஆசிட் பொருட்கள் உள்ளன. எனவே இவைகளை உண்ணும் போதும் நமது வயிற்றெரிச்சல் பிரச்சினை சரியாகிறது.

கெமோமில் டீ

கெமோமில் டீ

கெமோமில் டீ யில் நிறைய மருத்துவ பொருட்கள் உள்ளன. இந்த மருத்துவ பொருட்கள் வயிற்றெரிச்சலை குறைக்கிறது.

2 டீ ஸ்பூன் உலர்ந்த கெமோமில் பூக்களை ஒரு கப் சூடான நீரில் சேர்க்க வேண்டும்

5 நிமிடங்கள் கொதிக்க விட்டு பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி விடவும்

கொஞ்சம் அதனுடன் தேன் சேர்த்து டீயை பருகவும். ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு வயிற்றில் இருக்கும் பித்த நீரை நடுநிலையாக்குகிறது. எனவே இதனால் வயிற்றெரிச்சலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்கிறது.

5-6 பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கு பின் சாப்பிட்டால் உங்கள் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

துளசி

துளசி

துளிசியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் குளிர்ந்த பொருட்கள் இவற்றால் வயிற்று எரிச்சலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

15 நிமிடங்கள் துளிசி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்

பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி அதனுடன் தேன் கலந்து பருகவும்.

ஸ்லிப்பரி எல்ம் மூலிகை

ஸ்லிப்பரி எல்ம் மூலிகை

வயிற்றெரிச்சலை போக்கும் மிகச் சிறந்த வீட்டு மூலிகை ஆகும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எரிச்சலுடன் மலம் வெளியேறிதல், வயிற்றெரிச்சல் போன்றவற்றை சரியாக்குகிறது.

1 டீ ஸ்பூன் எல்ம் மூலிகையை ஒரு கப் கொதிக்கின்ற நீரில் சேர்த்து கொதிக்க விடவும்

பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகினால் நல்ல பலனை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

11 home remedies for burning sensation in stomach

11 home remedies for burning sensation in stomach
Story first published: Thursday, February 22, 2018, 16:59 [IST]
Desktop Bottom Promotion