For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆலிவ் எண்ணையை உபயோகித்து மலச்சிக்கலை போக்கலாம்! எப்படி?

ஆலிவ் எண்ணை உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமில்லாமல் மலச்சிக்கலை போக்குவதற்கும் உதவுகிறது. அதற்கான வழிகளை இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

By Arunkumar P.m
|

பருத்த வயிறு,வயிற்று வலி மற்றும் மலம் கழிக்கும் போது ஏற்படும் சிரமம் போன்றவை நீங்கள் மலச்சிக்கலினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகளாகும்.

3 best ways to use olive oil to treat constipation

நீங்கள் மலச்சிக்கலை குறுகிய காலத்திலேயே தடுக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே அதற்கான தீர்வுகள் உள்ளது. நீங்கள் நம்புவீர்களா ? ஆலிவ் எண்ணையை உபயோகித்தால் மலச்சிக்கலை எளிதாக தீர்க்க முடியும்.

ஆலிவ் எண்ணை மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாகும். அதில் உள்ள 'நிறைந்த கொழுப்பு" இயல்பாக மலம் கழிப்பதற்கு உதவுகிறது. செரிமான உறுப்புகளின் தசைகளை தூண்டுவதன் மூலம் மலம் எளிதாக வெளியேற்றப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தயிருடன் கூடிய ஆலிவ் எண்ணைய்:

1. தயிருடன் கூடிய ஆலிவ் எண்ணைய்:

பதப்படுத்தப்பட்ட தயிறில் உடலுக்கு ஏற்றத்தை கொடுக்கும் நுண் உயிர் உள்ளது. செரிமான உறுப்புகளின் தசைகளை வலுவாக்கி நல்ல பயனை அது தரும். ஆலிவ் எண்ணையில் கொழுப்புச் சத்து உள்ளது. இந்த இரண்டும் சேரும் போது மலம் கழிப்பது எளிதாகிறது.

செய்முறை:

ஒரு சிறிய பாத்திரத்தில் பதப்படுத்திய தயிறை எடுத்துக் கொள்ளவும்.ஒரு தேக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணையை அதனுடன் கலந்து, இதனை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும்.

2.எலுமிச்சையுடன் கூடிய ஆலிவ் எண்ணைய்:

2.எலுமிச்சையுடன் கூடிய ஆலிவ் எண்ணைய்:

எலுமிச்சையில் அமிலத்தன்மை உள்ளது. " ஆன்டி ஆக்ஸிடன்ட் " அதிகமுள்ள ஆலிவ் எண்ணை அதனுடன் சேரும் போது மலம் கழிக்கும் உடல் பகுதி வறட்சி ஆகாமல் பாதுகாக்கப்பட்டு மலம் எளிதாக கழியும்.

செய்முறை:

ஒரு தேக்கரண்டி லெமன் சாற்றினை ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையுடன் நன்கு கலந்து இரவு தூங்கும் முன் சாப்பிட வேண்டும்.

 3. ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணைய்:

3. ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணைய்:

நீங்கள் மலச்சிக்கலினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை காலை வெறும் வயிற்றிலும், இரவு தூங்குவதற்கு முன்பும் எடுத்து கொள்ளலாம். மலச்சிக்கல் சரியாகும் வரை அந்த எண்ணையைப் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

3 best ways to use olive oil to treat constipation

3 best ways to use olive oil to treat constipation
Story first published: Monday, January 9, 2017, 16:53 [IST]
Desktop Bottom Promotion