ஆளை அசத்தும் காட்டன் புடவைகளில் எத்தனை வகை ?

Posted By:
Subscribe to Boldsky

காட்டன் புடவைகளுக்கு என்றுமே தனி மவுஸு உண்டு, ஆனால் எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான காட்டன் புடவைகளை அணிந்து செல்வது என்பதில் பலருக்கு பெருங்குழப்பமே இருக்கும். ட்ரெடிஷனல் உடையில் மார்டன் லுக் கொடுக்க சில டிப்ஸ்... 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்யூர் காட்டன் :

ப்யூர் காட்டன் :

மற்றவரக்ளை விட உங்களை தனித்துவமாய் காட்டிடும். எளிமையான உடையாக இருந்தாலும் டிசைனர் சாரியை விட இந்த ப்யூர் காட்டன் ரிச் லுக் கொடுக்கும். சற்று பருமனாக இருப்பவர்கள் ப்யூர் காட்டன் தவிர்த்திடுங்கள்.

போச்சம்பள்ளி :

போச்சம்பள்ளி :

காட்டன் சேலைகளை இந்த வகை மிகப்பிரபலம் இதில் வரும் சில ஜியோமெட்ரிக் வடிவங்கள் பார்ப்போரை கவர்ந்திடும். காட்டனுடன் சிறிது சில்க் சேர்ந்த துணியென்பதால் விரைப்பாக இல்லாமல் சற்றும் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும்.

பூம்காய் சேலை :

பூம்காய் சேலை :

இந்த வகை சேலை ஒரிசா மாநிலத்தில் மிகப்பிரபலம். சேலை முழுவதும் சின்ன சின்ன மீன்கள் இருப்பது போன்ற டிசைன் இருக்கும். வெற்றியையும், ஆரோக்கியத்தையும் பறை சாற்றும் விதமாக இந்தவவை சேலையை அணிகிறார்கள்.

இதில் மீனைத் தவிர பூக்கள்,மயில் என பல்வேறு டிசைன்கள் வந்துவிட்டன.எத்தினிக் லுக் வேண்டுமென்றால் இதனை தேர்வு செய்யலாம்.

டண்ட் சேலை :

டண்ட் சேலை :

பெங்காலி காட்டன் சேலையான இது க்ரிஸ்ப்பாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும் என்பதால் பலரது ப்ர்ஸ்ட் சாய்ஸ் இது தான். இதில் பயன்படுத்தியிருக்கும் நூல் மிகவும் மெலிதாக இருப்பதால் ட்ரான்ஸ்பரண்ட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காதி சேலை:

காதி சேலை:

கைத்தறி சேலைகளான இதனை ஃபேப்ரிக் சில்க் பயன்படுத்தப்பட்டிருக்கும். காட்டனில் விரைப்பான லுக் கொடுப்பதால் பார்ட்டிகளுக்கு அணிந்து சென்றால் தனியாக தெரிந்திடும். அதே போல இதில் பெரிய கண்களை உறுத்தும் டிசைன்கள் இருக்காது.

தாக்ககை சேலை :

தாக்ககை சேலை :

பங்கலாதேஷில் உள்ள தாக்காவிலிருந்து வருகின்ற சேலை இது. இங்கிருந்தே ப்ளைன் த்ரட் வொர்க் கொண்ட சேலைகளும் வருகிறது. தங்க நிறத்தில் ஜரிகை வேலைகள் நிரம்பியிருக்கும் அந்த சேலையை ஜம்தனி தாக்கை என்றும் அழைக்கப்படும். டிசைனர் சேலைக்கான லுக் இதில் கிடைத்திடும்.

 பசப்பள்ளி சேலை :

பசப்பள்ளி சேலை :

ஒடிசாவின் கைத்தறி சேலை வகை இது. இதில் பெரும்பாலும், செக்டு பேட்டர்ன் தான் வரும். இந்த டிசைனில் ஒரு சேலை தயாரிக்கு ஒரு மாதம் வரை ஆகும் மற்ற சேலைகளை ஒப்பிடுகையில் இதன் விலை சற்றே அதிகம் என்றாலும் இதன் எலகண்ட் லுக்கிற்கு தாரளமாக கொடுக்கலாம்.

சந்தேரி காட்டன் சேலை :

சந்தேரி காட்டன் சேலை :

முழு ட்ரான்ஸ்பரண்ட்டாக இல்லாமல் பாதியளவு ட்ரான்ஸ்பரண்ட்டாக இருக்கும். எடை குறைவு என்பதால் பலரும் விரும்பி அணிகிறார்கள் மத்திய பிரதேசத்தில் பிரபலமான இந்த வகை சேலைகளில் மயில்,ஜியோமெட்ரிக் டிசைன்,காயின்ஸ் போன்றவை இடம்பெறும். சேலை முழுவதும் டார்க் கலர் ஒன்றும் தங்க நிறத்தில் பார்டரும் இடம் பெறும் திருவிழாக்களுக்கு இதை அணியலாம்

கோட்டா சேலை :

கோட்டா சேலை :

ராஜஸ்தானின் ஸ்பெஷல் இது. பெரும்பாலும் சேலை முழுவதும் சதுரங்கள் நிரம்பிய டிசைன் இருக்கும். இதனை பார்ட்டிகளுக்கு மட்டுமல்ல கேஷூவல் உடையாக கூட அணியலாம்.

இதிலேயே ப்ளெய்னாகவும் எம்பிராய்டரி, பார்டர் பேட்சஸ் நிரம்பிய சேலைகள் கூட கிடைக்கின்றன.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, saree, facts
English summary

varieties of cotton sarees

different varieties of cotton sarees
Story first published: Thursday, July 27, 2017, 17:34 [IST]
Subscribe Newsletter