For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலை சேலையாக வடிவமைத்த டிசைனர்... யாருப்பா நீ?

By Mahibala
|

சூரத் மிகப்பெரிய அளவில் சேிந்தடிக் சேலை உற்பத்தி செய்கின்ற இடம் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். கிட்டதட்ட இந்தியாவில் உள்ள எல்லா துணிக்கடைகளிலும் நீங்கள் சிந்தடிக் ஆடைகள், குறிப்பாக சேலை வாங்கினால் அது கண்டிப்பாக சூரத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாகத் தான் இருக்கும். மொத்த விற்பனை செய்கின்ற அனைத்து வியாபாரிகளும் சூரத்தில் இருந்து தான் சேலைகள் வாங்கி வருகிறார்கள்.

நாட்டிலேயே மிகப்பெரிய சேலை உற்பத்தி செய்யப்படுகிற இடமாக தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதால் பல்வேறு டிசைன்களில் வடிவமைப்பு செய்யப்படுகின்றன. அவ்வப்போது டிரெண்ட்டுக்கு ஏற்பட்ட டிசைன்கள் செய்யப்பட வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரத் சேலை உற்பத்தி

சூரத் சேலை உற்பத்தி

Image Courtesy

தொழிலில் நிலைத்த லாபத்தைப் பெற வேண்டும் என்றால் தொடர்ந்து புதிது புதிதாக படைப்பாற்றலவ் திறனோடு (கிரியேடிவிட்டி) கொண்டதாக டிசைன் செய்யப்பட வேண்டும். அதனால் தான் அவ்வப்போது மிகவும் டிரெண்டாக மக்களால் கொண்டாடப்படுகிற படங்களோ நடிகர்களோ வருகிற போதும், படங்களில் முக்கிய ஹீரோயின்கள் அணிகின்ற அதே டிசைன் சேலைகளோ உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையில் பட்டையைக் கிளப்பச் செய்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர்கள் செய்த கிரியேட்டிவிட்டியை எண்ணி நம் எல்லோருடைய மனமுமே சிலிர்த்துப் போகும்.

MOST READ: இப்படி இருந்த பரவை முனியம்மா இப்ப என்ன வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்கனு தெரியுமா? ரொம்ப பாவம்...

புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதல்

சமீபத்தில் புல்வாமாவில நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டது ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிப் பார்த்தது. இதற்காகக் கண்ணீர் விடாத கண்களே இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அதைத்தொடர்ந்து பாலாகோட் பகுதியில் அத்துமீறி நுழைய முயற்சித்த பாகிஸ்தான் விமானத்தை நம்முடைய விமானப் படையினர் சுட்டு வீழ்த்தியதோடு மிகப்பெரிய வான் வெளித் தாக்குதலையும் நடத்தி பாகிஸ்தானை திக்குமுக்காடிச் செய்ததை எண்ணி சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்ள முடியாத இந்தியன் யார் இருக்க முடியும். அதிலும் அபிநந்தனை எண்ணி பெருமிதம் கொண்டவர்கள் எவ்வளவு பேர்? அதில் ஒருவர் தான் சூரத்தில் இருக்கிற சேலை டிசைனர் ஒருவர்.

சூப்பர் கிரியேடிவிட்டி

சூப்பர் கிரியேடிவிட்டி

இவருக்கு திடீரென தோன்றியது ஏன் எவ்வளவோ டிசைன்களில் சேலை வடிவமைத்துக் கொடுக்கிறோம். நம்முடைய நாட்டைப் பற்றியும் ராணுவம் பற்றியும் செய்து தரக்கூடாது என்று. அதிலும் சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் அவருடைய நெஞ்சைப் பிசைந்து கொண்டிருந்த வேளையில், அதைப்பற்றியும் பாலாகோட்டில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய வான்வெளித் தாக்குதல்களையும், பிரியங்கா காந்தி, நரேந்திர மோடி ஆகியோரின் அரசியல் பிரவேசங்கள் பற்றியும் சேலை வடிவமைத்துக் கொடுத்து நாட்டுக்கு தன்னால் முடிந்த மரியாதையை செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

தொழில் போட்டி

தொழில் போட்டி

பொதுவாக ஆடை வடிவமைப்புத் துறையைப் பொருத்தவரையில் பெரும் போட்டி நிலவும். யார் மிகச் சிறந்த படைப்பாற்றலுடன் தயார் செய்கிறார்கள் என்று. ஏனென்றால் அவர்களால் தான் தொழிலில் நிலைக்கவும் அதிக லாபம் பெறவும் மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற முடியும். அதற்கு எப்போதும் புதிய புதிய விஷயங்களை யோசித்துக் கொண்டிருக்க வேண்டியது மிக அவசியம். அப்படி வித்தியாசமாக யோசித்தவர் தான் இந்த டிசைனர் என்று தான் சொல்ல வேண்டும்.

4 மணி நேரத்தில்

4 மணி நேரத்தில்

பொதுவாக சினிமா நடிகர்களின் படங்களையோ அரசியல்வாதிகளையோ வேறு சில வித்தியாசமான டிசைன்களை வடிவமைக்கவே பல நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கான வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கும். அந்த அச்சு டிசைன் லேஅவுட் தயார் செய்வது என நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் வெறும் 4 மணி நேரத்தில் பாலாகோட்டில் இந்தியா பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலை சேலைக்கான டிசைனாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் ஒரு டிசைனர்.

MOST READ: இந்த 5 அறிகுறி இருந்துச்சுன்னா உங்க ஈரல் காலின்னு அர்த்தம்... கவனமா இருந்துக்கோங்க...

என்ன இருக்கிறது அந்த சேலையில்?

என்ன இருக்கிறது அந்த சேலையில்?

வழக்கம் போல இந்த சேலையும் 6 மீட்டரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் 4 மணி நேரத்தில் இதற்கான மொத்த டிசைன்களும் உருவாக்கப்பட்டு, சேலையாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த பிரிண்டட் சேலையில் நம் இந்திய ராணுவப் படையின் விமானங்களும் நம் விமானப்படை பறந்து பந்து நடத்திய தாக்குதல் பற்றியும் அதன் ஓரத்தில் நரேந்திர மோடியின் படமும் இடம் பெற்றிருக்கிறது.

யார் அந்த டிசைனர்?

யார் அந்த டிசைனர்?

இப்படியொரு வித்தியாசமான சேலை டிசைனை உருவாக்கிய டிசைனர் யார் தெரியுமா? அவருடைய பெயர் மனிஷ் அகர்வால். இவர் பண்டிசேரா GIDC என்னும் சேலை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் தான் இந்த சேலை நெய்யப்பட்டிருக்கிறது. இந்த சேலையில் இந்திய ராணுவம் பற்றியும் பாலாகோட் வான்வெளி தாக்குதல் உள்பட 5 வெவ்வேறு டிசைன்களை இவர் வடிவமைத்திருக்கிறார்.

சூப்பர் விற்பனை

சூப்பர் விற்பனை

இப்படியொரு டிசைனில் சேலை வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிந்தவுடனே வியாபாரிகள் உனக்கு எனக்கு என போட்டி போட்டுக் கொண்டு விந்பனைக்காக வாங்கிச் செல்கின்றனர். சேலை தயாரிக்கப்பட்டு ஒரு சில நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கிட்டதட்ட 10,000 சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். டெல்லி, மத்திய பிரதேசம், பிகார், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்கிறது இந்த சேலை.

MOST READ: இந்த ஐஞ்சு அறிகுறி வந்தா பொண்ணுங்களுக்கு மாதவிலக்கு முன்கூட்டியே வரப்போகுதுனு அர்த்தம்

மக்கள் சென்டிமெண்ட்

மக்கள் சென்டிமெண்ட்

இந்த மொத்த ஐடியாவும் அவருக்கு மக்கள் சென்டிமெண்டிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார். இந்த வடிவமைப்பை பார்த்து நெகிழ்ந்து போன வாடிக்கையாளர்களும் கூட இந்த வடிவமைப்பை பார்த்து மிகவும் பாராட்டுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: saree
English summary

Surat Saree Disigner Makes A Unique Saree That Depicts Pulwama Balakot Attack

Designer sarees are mostly focusing on the public outrage over the Pulwama terror attack, the Prime Minister Narendra Modi and even Priyanka Gandhi's entry into politics.
Story first published: Tuesday, March 5, 2019, 12:30 [IST]