பெங்காலி பெண்கள் திருமணத்தின் போது தவிர்க்காத ஐந்து மணப்பெண் அலங்காரங்கள்!

By: Aruna Saravanan
Subscribe to Boldsky

எங்கு பார்த்தாலும் கலை கட்டும் விழா காலமான இந்த மழை காலத்தை ரசித்து கொண்டிருக்கின்றோம். அதிலும் இது அதிகமாக திருமணங்கள் நடத்தப்படும் காலமாகும். மணமகள் என்றால் அலங்காரம். அதுவும் பெங்காலி மணமகளின் அலங்காரம் மிகவும் அழகானது. இப்பொழுது பெங்காலி மணமகளின் அலங்காரம் எவ்வளவு நேர்த்தியானது என்று பார்ப்போம்.

பெங்காலி பெண்களுக்கு மிகவும் வசீகரமான கண்கள் இருக்கும். தமிழ்நாட்டு பெண்களுக்கு பிறகு அழகான பெண்களின் வரிசையில் பெங்காலி பெண்களுக்கு தான் இடம். பெங்காலி பெண்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெறும். அதுவும் அழகிய மணப்பெண்ணுக்கு செய்யப்படும் அலங்காரம் சொல்ல வார்த்தைகள் அற்றது. மீன் போன்ற கண்களும், இயற்கையான கவர்ச்சிகரமான மாநிறமும் பெங்காலி பெண்களின் தனித்துவம். இதற்கு அலங்காரம் செய்தால், காண கண் இரண்டு போதாது என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் தென் இந்திய பெண்களை போல் எளிமையானவர்களும் இல்லை, டெல்லி பெண்களை போல் அதிக மேக்கப் போட்டு மிரட்டும் அழகானவர்களும் இல்லை. இரண்டுக்கும் இடையில் காணும் கண்ணுக்கு வரமாக அமைந்த அழகு இவர்களுக்கு உண்டு.

பெங்காலி மணப்பெண்ணை மிகவும் எடுத்துக்காட்டும் அழகு அவர்களுக்கு செய்யப்படும் மேக்கப் தான். கண்ணை சுற்றி செய்யப்படும் மேக்கப் மற்றும் நெற்றியில் பொட்டை சுற்றி சந்தனத்தால் வரையப்படும் மேக்கப் இவர்களின் அழகை இன்னும் அதிகப்படுத்தி காட்டும். பெங்காலி மணமகளின் கூர்மையான கண்ணை இந்த மேக்கப் இன்னும் மிகைப்படுத்தி காட்டும். அதுவும் சிவப்பு நிற பனாரசி புடவையில் மணமகளை காண்பது காணக் கிடைக்காது. இவர்கள் சிவப்பை மங்கள நிறமாக கருதுவதால் மணப்பெண்ணிற்கு சிவப்பு நிரத்த்தில் பட்டையான தங்க நிற பார்டர் கொண்ட புடவையை அணிய வைக்கின்றனர். சிலர் ஆரஞ்சு மற்றும் பிங் நிறத்திலும் புடவையை தேர்வு செய்கின்றனர். இன்னமும் தாமதிக்காமல் பெங்காலி பெண்களின் கல்யாண அலங்காரத்தைப் பற்றி கூறுகின்றோம் கேளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தங்கத்தாலான நாத்

தங்கத்தாலான நாத்

இது ஒரு வகையான மூக்குத்தி. வளையம் போன்று இருக்கும் இந்த மூக்குத்தி தங்கத்தால் செய்யப்பட்டது. பெரும்பாலான மணப்பெண்கள் நாத் அணிவதை நிறுத்தி விட்டிருந்தாலும், இந்த மூக்குத்தி பாரம்பரிய ஆபரணமாக கருதப்படுகின்றது. பாரம்பரியத்தை விரும்பும் மணப்பெண்கள் இதை விரும்பி அணிந்து கொள்கின்றனர். இதனால் பாங் பெண்களின் கூர்மையான மூக்கு மேலும் எடுப்பாக காணப்படுகின்றது.

டிக்லி

டிக்லி

டிக்லி என்பது ஒருவகையான நெற்றிச்சுட்டி. இதை நெற்றியில் புருவங்களுக்கு மே அணிந்து கொள்வர். சரியாக சொல்ல வேண்டுமென்றால் சிவப்பு நிற வட்ட வடிவத்தில் பொட்டை வைத்து, அதற்கு சற்று மேலே வட்ட பொட்டைச் சுற்றி சிறு புள்ளியை வைப்பார்கள்.

தியாரா அல்லது முகுத்

தியாரா அல்லது முகுத்

தியாரா அல்லது முகுத் இல்லாமல் ஒரு பெங்காலி மணமகளின் கல்யாண அலங்காரம் முழுமையடையாது. இது வெள்ளை நிறத்தில் இருக்கும். இது சிக்கலான வடிவங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. தியாராவை டிக்லிக்கு சற்று மேலே அணிந்து கொள்வார்கள். இது பார்ப்பதற்கு கிரீடம் போல் காட்சியளிக்கும். மணமகள் இதை அணிந்து கொள்வதால் ராணியை போன்ற தோற்றத்தைப் பெறுகின்றாள்.

நீர் டோல்

நீர் டோல்

நீர் டோல் என்பது ஒரு வித காதணி. இந்த காதணி மிகவும் பெரியதாகவும் கனமாகவும் இருக்கும். இதை பெங்காலி மணமகள் தனது கல்யாண ஆடையுடன் சேர்த்து அணிந்து கொள்கின்றாள். இதுவும் ஒரு பாரம்பரிய அணியாகும். இதை ஒவ்வொரு மணப்பெண்ணும் விரும்பி அணிந்து கொள்கின்றனர்.

சந்தன மேக்கப்

சந்தன மேக்கப்

இது சந்தனத்தால் செய்யப்படும் அலங்காரம். பெங்காலி மணமகளின் திருமண அலங்காரத்தில் சந்தன ஒப்பனை பெரிய பங்கை வகிக்கின்றது. இதனால் மணப்பெண்ணின் அலங்காரம் பூர்த்தி செய்யப்படுகின்றது. சந்தனத்தை எடுத்து நடு நெற்றியில் சிவப்பு நிற பொட்டை சுற்றி வரைவர். இதனால் கவர்ச்சிகரமான அழகை மணப்பெண்கள் அடைகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Essentials Of A Bong Bride's Trousseau

Bong brides! This wedding dont miss a thing by following our piece on 5 essentials of a Bong Brides trousseau.
Subscribe Newsletter