இதென்னடா ஐஸ்க்கு வந்த கொடுமை - இப்படி பண்ணலாமா வோக்?

Posted By: Staff
Subscribe to Boldsky

இம்மாத வோக் இந்தியா இதழ் வெளியானதும் மக்கள் மத்தியில் இருவேறுபட்ட உணர்வுகள் வெளிப்பட்டன. ஐஸ்வர்யா ராயின் பரம ரசிகர்களுக்கு... அட! நம்ம ஐஸா இது... திரும்ப 16 வயது பொண்ணு மாதிரி ஆயிடுச்சே... என்ற மகிழ்ச்சி.

மறுபுறம் ஃபேஷன் துறையை சேர்ந்தவர்களுக்கும், போட்டோஷாப் டிசைனிங் செய்பவர்களுக்கும், ஏன் ஐஸ்வர்யா ராயை இப்படி போட்டோஷாப் செய்து வைத்திருக்கிறார்கள்? இதற்கு என்ன அவசியம் என்ற அதிர்ச்சி.

ஆம்! போட்டோஷாப் வல்லுனர்கள் இம்மாத வோக் இந்தியாவில் இடம்பெற்றிருக்கும் ஐஸின் தோற்றம் ஏர் பிரஷ் மற்றும் போட்டோஷாப் செய்யப்பட்டது என்று அடித்துக் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நல்ல பொண்ணாச்சே...!

தான் பங்குபெறும் விருது வழங்கும் விழாவாக இருக்கட்டும், அல்லது கவர் போட்டோ ஷூட்டாக இருக்கட்டும், அனைவரின் கண்களையும் தன் பக்கம் ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற தந்திரம் அறிந்தாவர் ஐஸ்வர்யா ராய்.

என்னதான் உடலை குறைத்தாலும், குழந்தை பிறந்த பிறகு அந்தந்த வயதுக்கு ஏற்ப உடலில் மாற்றங்கள் தென்பட தான் செய்யும். இதற்காக போட்டோஷாப் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி ஃபேஷன் மற்றும் போட்டோஷாப் டிசைனர் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

ஃபார்ரெல் வில்லியம்ஸ்!

இம்மாதம் வெளியான வோக் இந்தியா அட்டைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் அமெரிக்காவை சேர்ந்த ராப் பாடகர், பாடலாசிரியர், ரெகார்டு தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஃபார்ரெல் வில்லியம்ஸ் தோன்றி இருந்தார். இந்த படத்தில் தான் ஐஸ்வர்யா ராயின் உடல் மற்றும் முகத் தோற்றம் போட்டோஷாப் செய்யப்பட்டிருந்தது.

தூம் 2!

அனைவருக்கும் இந்த படத்தை கண்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு காரணம். இந்த போட்டோஷூட்டில் இருந்த ஐஸின் உடல் மற்றும் முகத் தோற்றம் ஏறத்தாழ 12 வருடங்களுக்கு முன்னர் வெளியான தூம் 2 படத்தில் ஐஸ் எப்படி இருந்தாரோ, அப்படி இருந்தது. நிச்சயம், தற்போதைய ஐஸின் லுக் இப்படி இல்லை என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஃபிகர்!

ஒட்டுமொத்த உலகமும், ஏன் பெண்களை அவர்களது உடல் வடிவை வைத்து கணக்கிடுகிறீர்கள் என குரலை உயர்த்தி வரும் போது. மீண்டும், மீண்டும்... பெண்கள் அழகு அவர்களது உடல் வடிவத்திலும், கூந்தல், இடை வளைவுகள், சரும நிறம் போன்றவற்றில் தான் இருக்கிறது என ஃபேஷன் உலகம் அழுத்தத்துடன் பதிவு செய்வது போல இருக்கிறது.

40 வயதில்..

நாற்பது வயதை தாண்டிய ஒரு பெண் எப்படி இருப்பாளோ, அப்படி தான் இருப்பாள். என்னதான் அவள் உடலை எடை குறைத்தாலும், அவள் உடல் வடிவத்தில் மாற்றங்கள் தென்பட தான் செய்யும். அதை ஏன் திரை மற்றும் ஃபேஷன் உலகம் ஏற்க மறுக்கிறது. முப்பது, நாற்பது என வயது எத்தனை ஏறினாலும் பெண்கள் எப்போதுமே 16 வயது தோற்றத்தில் இருந்தால் தான் அழகு என ஒரு சட்டம் வகுக்கிறது இந்த ஃபேஷன் சமூகம்.

திறமை!

ஐஸ்வர்யா ராய் என்பவர் வெறும் அழகை மட்டும் வைத்து வளர்ந்த நடிகை அல்ல. அவரிடம் நல்ல நடிப்பு திறனும் இருக்கிறது. அவர் சிறந்த கலைஞர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், திறமையை நிரூபித்தாலும் கூட, நாங்கள் உன்னை கவர்ச்சி கடலில் தான் தள்ளுவோம் என ஃபேஷன் மற்றும் திரை துறை உறுதியுடன் இருக்கிறது போல.

முதல் முறை அல்ல..

நடிகைகள் கவர் போட்டோவை போட்டோஷாப் செய்து பதிவிடுதல் இது முதல் முறை அல்ல. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே வோக் இந்தியா தனது ஜனவரி மாத இதழில் கரீனா கபூர் கானை சில படங்களில் போட்டோஷாப் செய்து வெளியிட்டது என்று கூறப்பட்டது.

அதே போல சில வருடங்களுக்கு முன்னர் ராணி முகர்ஜியை தனது 2015 ஆகஸ்ட் பிரதியில் போட்டோஷாப் செய்து வெளியிட்டது என்று சில தரப்பினர் கூறினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bollywood Beauty Queen Aiswaya Rai Looks Like 16 in Recent Vogue Photoshoot!

Bollywood Beauty Queen Aiswaya Rai Looks Like 16 in Recent Vogue Photoshoot!